Translate

Thursday, October 19, 2017

கண்டது யார்? - குறுங்கவிதைகள்


ஓடும் நீரெனினும்
ஓயாது
ஒரு மீனும்
ஒரு கொக்கும்.

==========================

ஓட்டையில் 
ஒழுகும்
ஓலைக்குடிசை

============================

ஒன்றுமில்லாதவனுக்கு
ஓலைக்குடிசையை விட
ஒன்றுமில்லை
ஓங்கிய கட்டிடம்

==========================

ஒன்பது 
ஓட்டைப் படைத்தான்
ஒன்றுடன்
ஒன்றிணைத்தான்
ஒழுகலில்லை
ஒரு போதும்.
''திறந்தலன்றி''

===============================

காகம் 
கரைந்தது
காற்றில்(லே)

====================

கழுதைக்கு தெரியாது 
கற்பூர வாசனை.
கண்டது யார்?

=======================


-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


Kothai Subbiah காகம் கரைந்தது,,கா,,கா,,
காற்றிலே சப்தமும் கரையும்,
Reply
2
2 hrs
Remove
Chelliah குருங்கவிதை...
அழகிய நடை...
உடைபோட்டாலென்ன
தடைக்கு?
எடைதரம்
விடைபெறுமோ...
சிறப்பான
ஒன்பதின்
திறப்புவிழா
திகட்டாதே
தின்னத்தின்ன...
நன்றி நட்பே
Love
Reply
1
1 min

No comments: