Translate

Saturday, October 7, 2017

சிறையல்ல இது

சிந்தனையில் கரு சுமப்பேன்.
சிக்கி நான் அதில் தவிப்பேன்.
சிங்கார தமிழ் கொண்டு,
சிக்கெடுத்து அலங்கரிப்பேன்.

சிலாகிக்கும் உம்முடனே
சிந்தித்து முடிவெடுப்பேன்.
சினைக் கொண்ட நிலையாக
சீற்றமுடன் யானிருப்பேன்.

சீண்டி விட கவியிருந்தால்
சீராட்டும் பாபுனைவேன்.
சீறிடும் எரிமலையாய்
சினமுடன் பொங்கியெழுவேன்.

சின்னழகி நடை வேண்டும்.
சிலிர்தெழும் குணம் வேண்டும்.
சிலை வடிக்க ஞானம் வேண்டும்
சிரிப்பொலியும் சிதற வேண்டும்

சின்னதொரு படியெடுக்க
சிகை விரித்து படங்காட்ட,
சிறியவனுக்கு ஊட்டி விட்ட,
சிறப்பான கவிக்கு பணிவான வணக்கம்.

--
என்றும் நடபுடன்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: