Translate

Saturday, February 28, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - C.பத்ரி வெங்கடேஷ் பாபு



 ஒரு சொல் ஆனாலும்
வாழ்த்தது இனித்திடுமே.
இனிதாக வாழ்ந்திட
வழியதை காட்டிடுமே.

மாணிக்க  மணியாக
மங்கா ஒளியோடு
நலனோடு நிலையாக
மகிழ்வோடு வாழ்ந்திருக்க

மறைப்பொருளாய் நிறைந்திருக்கும்
இறைவனின் நிறையருளோ
மாற்றங்கள் உயர்வளிக்க
பிரார்த்தித்து வாழ்த்தினோம்

மகிழ்வான இந்நாளில்
அன்போடு அரவணைத்து.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகனே.






Wednesday, February 25, 2015

துடிப்போசை




நெஞ்சத்து நெருக்கத்தில்
செவிக்குள்ளே கேட்குமே
அதிர்வுகளின் துடிப்போசை.
மகிழ்வான நாளாய் அமைய வாழ்த்துக்கள் நட்பூக்களே.

வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை



பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

'தேசிய வெளிநாட்டு .மாற்றுத்திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை திட்டம் ' என்ற பெயரில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இதன் கீழ் பொறியியல், மேலாண்மை அறிவியல், பயன்பாட்டு அறிவியல், மருத்துவம், வர்த்தகம், கணக்கியல் மற்றும் நிதி, கலையியல், சமுக அறிவியல் மற்றும் கவின் கலை, ஆகிய பிரிவுகளின் கீழ் உயர்கல்வி மற்றும் ஆராச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்புவோர், சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் விண்ணப்பிக்கலாம் என பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து தெரிவித்துள்ளார்.

நன்றி: காலைக்கதிர் சேலம்
கல்விக்கதிர் 21/02/2015

தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள். ஏழை மாணவ, மாணவியர் பயன் பெறட்டுமே..


Sunday, February 22, 2015

கை விளக்கு



கடும் கானகத்து இருட்டிலும்
கைவிளக்குத் தேவையில்லை.
போதுமே
மின்னும் உன் ஒளி விழிகள்.

#எப்படியெல்லாம் ஐஸ் பிடிக்க வேண்டியிருக்கு பாருங்க. :P


இனிய நாள் வாழ்த்துக்கள் நட்புகளே.

அஞ்சலி கவிதை - Teenage sis Naguleswarar. Kamalambal (Kamala), Sis/o கவிதாயினி. Vetha Langathilakam

விருப்பக்குறி இடுவேனோ,
உம் வேதனைக்கு
என்ன சொல்லி
மருந்திடுவேனோ...

ஆறா துயரமது
பெருவெள்ளமாய்
பெருக்கெடுக்க,
மீளா தூரமதில்
அவர் குடியிருப்போ
நீண்டிருக்க,

இணைந்தோமே உங்களுடன்
துயரத்தில் பங்கெடுக்க,
இறையிடம் பிரார்த்தித்தோம்
வேதனை வடுக்களை  களைந்துவிட.

#அன்னார் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து,
பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது வருத்தத்தைப்  பகிர்ந்துக் கொள்கிறேன்.

தவப்புதல்வன்.
=====================================================================



என் உடல் நலம் கருதி நீண்ட பயணத்தாலான
உன் இறுதிக் கிரியைகளில் மனதார
இங்கிருந்து கலக்கிறேன்.
நாளை அக்கினியோடு சங்கமமாகிறது உன்னுடல்.
இரவும் பகலும், நாளும் பொழுதும் என்னோடு நீயம்மா!



கவிதாயினி.வேதா இலங்கத்திலகம் அவர்களின்  அழகு, அறிவு, திறமையான அன்புடை தங்கை Teenage sis Naguleswarar. Kamalambal (Kamala)  .

===============================================================================


Saturday, February 21, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ‎Sugunadevi Veeran





இனிதான நாட்களாய்
நலமுடன் கழியட்டும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி

Thursday, February 19, 2015

இப்படியும் ஒரு காதல்


விழித்திரையில்
புற அழகை
நான் காண
இயலாமல் போனாலும்,

செவி வழியே
குரல் மூலம்
உன் அழகை
காண்கின்றேன்..

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்பூக்களே.

இருக்கிறேனா.... குறுங்கவிதை


தேடித் பார்க்கிறேன்,
உன்னிலே என்னை.  

'' இருக்கிறேனா.... '' 

இனிய நாள் நல்வாழ்த்துக்கள்  நண்பர்களே.. 

Tuesday, February 17, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ‎Subahar Pattabiraman






Subahar Pattabiraman

கோலங்கள் வரையும்
வாழ்விலே இன்று,
பிறந்தநாள் புள்ளி
பெரிதாய் விளங்க,
வண்ணத்தில் அதுவோ
மனத்தை மயக்க,
மகிழ்விலே மானமோ
வானிலே பறக்க,
இன்றுள்ள நிலையோ
மேலும் உயர
வாழ்த்துக்கள் பகிர்ந்தோம்
உம் இனிய பிறந்தநாளில்
நலமாய், மகிழ்வாய் வாழ்கவென்று.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகனே.



Saturday, February 14, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Nisha Nishu




Nisha Nishu

ஒவ்வொன்றாய் நீ கூட்டி,
வாழ்க்கையில் சுவைக் கூட்டி,
அத்துடன் மணம் கூட்டி,
ஆனந்தமாய் பறந்தாட,
மகிழ்வும் இணைந்தாட,
ஆண்டவரின் அருள் கூட
பிரார்த்தித்தோம் உமக்காக,
நலமுடன் வாழ்ந்திருக்க.
இனிய பிறந்தநாள் நல்லாசிகளம்மா.

Friday, February 13, 2015

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்





உன்னத காதலாய் இருக்கட்டும்.
உண்மையான நேசமாய் திகழட்டும்.

#33 வருட வாழ்க்கையில் தோள் சாயும் வாய்ப்புகள் அருகி விடினும்,
உள்ளுக்குள் கணன்றுக் கொண்டுதான் இருக்கிறது,
அன்பும் காதலும் பாசமுடன்.
அது குளிர்ச்சியாகவும் சூடாகவும். :P



இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

Thursday, February 12, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Balaji Sathanandam





Balaji Sathanandam

நலமுடன் மகிழ்வுடன்  நீ வாழ,
வாழ்த்துக்கள் சொரியட்டும் எந்நாளும்.

சாந்தமும் ஆனந்தமும் செழித்தோங்கி,
ஆலமாய் விரியட்டும் விழுதூன்றி.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகனே.

Saturday, February 7, 2015

இனிய வார விடுமுறை நாள் வாழ்த்துக்கள்







தொடரும் நாட்களை
தொகுத்து வைப்போம்.
தொன்மையான நினைவுகளாய்
தோரணமிடுவோம் நட்புகளே.

இனிய வார விடுமுறை நாள் வாழ்த்துக்கள்.

பணியுயர்வுக்கு வாழ்த்து - பாவலர்.இராஜ. தியாகராஜன்





பாவலர். இராஜ. தியாகராஜன்


சீரிய பணியால்
சிறந்ததொரு உயர்வு.
பணிக்கொரு சிறப்பு
உமகீந்த உயர்வால்.

பாவலரே,
வாழ்த்துக்கள் பகிர்ந்தோம்
உவந்தே யாம்.

நட்புடன்,
தவப்புதல்வன்.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ‎Mukundan Kumar


 
Mukundan Kumar

நலனும் மகிழ்வும்
ஒன்றாய் கூடி,
பாசமும்  பண்பும்
நீடித்து நிலைக்க,
இறைவனின் அருளால்
உயர்வினை அடைய
வாழ்த்துக்கள் வழங்கினோம்
மகிழ்வுடன் நாங்கள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் முகுந்த். 






Thursday, February 5, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Ananth Mercy






Ananth Mercy

வளமான நிலையடைய
உழைப்போ துணையிருக்க
நலன்களோ நிலைத்திருக்க
நட்புறவோ உரமாக,
வாழ்த்துக்கள் மகிழ்விக்க,
உரைத்தோமே உமக்காக,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Ananth Amirth




Ananth Amirth

போடும் கணக்குகள்
கச்சிதமாய் அமையட்டும்,
உயர்வான வாழ்க்கைக்கு
உறுதுணையாய் அமையட்டும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.