Translate

Showing posts with label மாற்று அனுபவங்கள் - இன்றொரு தகவல்.. Show all posts
Showing posts with label மாற்று அனுபவங்கள் - இன்றொரு தகவல்.. Show all posts

Thursday, August 21, 2014

மாற்று அனுபவங்கள் - இன்றொரு தகவல்.



"செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை"
1. செருப்பை கழட்டி உங்கள் கையால் எடுத்து கொடுங்கள். பிய்ந்த
செருப்பை அவரை நோக்கி கழட்டி காலால் தள்ளுவது அவமரியாதை.
2. பேரம் பேசாதீர். தினமும் எத்தனை பிய்ந்த செருப்பு கிடைத்துவிட போகிறது என்று நினைக்கிறீர்கள்?
3. அவசியம் 'நன்றி' தெரிவித்துவிட்டு வாருங்கள். அவர் செய்யும்
தொழிலை எல்லாவராலும் செய்ய முடியாது.
"Manners and etiquettes are not only for Star Hotels. Applies to Cobblers too"
இது போன்ற மனித தன்மை மிக்க விஷயங்களை SHARE செய்வதில் தவறேதும் இல்லையே !!!''
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
----------------------------------------------------------------------------------------------------



இதில் எமக்கு சில மாற்று அனுபவங்களும் உண்டு. இருப்பினும் தொழில் புரிபவரும், வாடிக்கையாளர்களும் தொழிலுக்கு மரியாதைக் கொடுக்க வேண்டியது அவசியம்.

சில அனுபவங்களில் ஒன்று: ஒருமுறை எனது மகளின் துண்டித்துபோன  செருப்பை சரிசெய்வதற்காக சென்றிருந்தேன். செருப்பை வாங்கி பார்த்து விட்டு, இதை சரி செய்யமுடியாது, தூக்கிஎறிந்து விட்டு, புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். ஐயா, இதைப்பாருங்கள், இதுவும் புது செருப்புதான் என்றேன். எதுவாகிருந்தாலும், இதுபோன்ற செருப்பை சரியாக்க முடியாது என்றார். 

அவரிடம் இன்னும் பணிவாக, உங்கள் ஊசியையும், நூலையும் என்னிடம் கொஞ்சம் தாருங்கள். நான் சரிசெய்து கொள்கிறேன், உங்களுக்குரிய கூலியையும் கொடுத்து விடுகிறேன் என்றதற்கு, முடியாது வேறிடம் சென்று சரி செய்துக் கொள்ளுங்கள் என்று விடாபிடியாக மறுத்தார்.

ஐயா, ஒவ்வொரு முறையும் இந்த வழியாகத்தான் சென்று வருகிறேன். உங்களுக்கு கொடுப்பதற்காக, ஒரு உடுப்பை வீட்டில் எடுத்து வைத்திருந்தும் மறந்து விடுகிறேன் எடுத்து வர என கூறி விட்டு, ஒரு பத்து ரூபாய் கொடுத்தேன், எதற்கென கேட்டார். உங்கள் பணிகளுக்கு இடையிலும் என்னிடம் விடாபிடியாக மறுத்து பேசியதற்கு என கூறி கொடுத்தேன். பெற்றுக் கொண்டவர், செருப்பை தைக்க முடியாததால் தான் இவ்வளவு தூரம் சொல்கிறேன் என்றார். 

நீங்கள் சொல்வதை கேட்டுக் கொண்டேன். ஆனால் நான் சொல்வதை  நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே என்றபடி, மீண்டும் நூலையும் கேட்டபின் கொடுத்தார்.  நான் சரிசெய்து காட்டி, இப்படிதான் உங்களையே சரிசெய்ய சொன்னேன், நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற எனது சொல்லுக்கு, இது நிலைக்காது. நாங்கள் இதுபோல் தைக்க மாட்டோமென்று மறுத்தாரே தவிர, அவருக்கு ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. இணைப்புக் கொடுத்து, முடிப்பிட வேண்டிய சிறிய வேலை. அவர்களுக்கு  ஒரு நிமிட பணி, எனக்கு இரு நிமிடம் ஆயிற்று. 

அப்பாடா வேறு இடம் அலையாமல், ஒரு வழியாய் இங்கேயே வேலை முடிந்ததே என்ற நினைவுடன் வீ டு திரும்பியவன், சில நாட்களில் அவருக்கென வைத்திருந்த உடையை எடுத்து சென்று கொடுத்து விட்டேன்.