Translate

Showing posts with label இது தானோ. Show all posts
Showing posts with label இது தானோ. Show all posts

Tuesday, January 8, 2013

இது தானோ?


இது தானோ?


இன்றிருக்கும் மனிதனிவன்
இன்றைய பொழுது கழியுமுன்னே,
இருப்பினும் இல்லையென ஆகலாம்,.
இல்லா நிலையது தோன்றலாம்
இதுவே நிலையென்றும் போகலாம்
இழந்து போன சொந்தத்தினால்,
இற்றுப்போன உறவுகளாய்
இனி விழிநீர் தான் சொந்தமோ


சில சொற்கள்:- சில நாட்களுக்கு முன் இரவு தூக்கமில்லாமல் புரண்டுக் கொண்டிருந்த போது, இக்கரு உருப்பெற்று எழுதிக் கொண்டிருந்தேன். அப்பொழுது எமது மனைவியும் சில முறை புரண்டு படுத்தார். என்னம்மா, நான் எழுதிக் கொண்டிருப்பது, உன் உறக்கத்தை கெடுக்கிறதா என கேட்டதற்கு, எனக்கும் உறங்க முடியவில்லை, மனம் உலைச்சலாய் இருக்கிறது என சொல்லிய போது, எனக்கும் உறக்கம் வரவில்லை. மனம் உலைச்சலாய் இருக்கிறது, எழுத தோன்றியதை. எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றேன். மேற்கண்ட பதிவை எழுதி சில நாட்களில், நேற்று எமது மூத்த சகலை அமரர். ராமசாமி அவர்கள் இறைவனடி அடைந்ததுடன் இவ்வரிகள் அவருக்கும், அவர் துணைவியாருக்கும் பொருந்தியது நினைவுக்கு வர, அதிர்ந்து விட்டேன்.
 —


http://www.facebook.com/photo.php?fbid
=522411167798530&set=a.118822278157423.8875.100000889537867&type=1&theater