Translate

Thursday, October 27, 2016

அன்பான வாழ்த்துகள்

ஆசைப்பட்ட யாழினிஸ்ரீக்கு அன்புடன் 


வாய்சொல் வீரமடி - நீ
மனத்தில் குழந்தையடி
பொருளறியும் நிலையிருந்தும்
பொருத்தமற்ற பேச்சுக்களடி
உள்ளத்தின் வீச்சுகளோ
வீம்பாய் கொட்டுதடி
நிலையத்தை மாற்றிக் கொண்டால்
நிச்சயம் உன் புகழ் உயருமடி
வெடிக்காதே வார்த்தைகளை 
வெடிகளை போலென்றும்
மாறட்டும் வார்த்தைகள்
வண்ண மத்தாப்பு போலெதுவும்

தித்திக்கும் தீப ஒளி திருநாள்
என்றென்றும் நிலைக்கட்டும்
குடும்பத்தில் அனைவருக்கும்
அன்பான வாழ்த்துகள்

என்றும்
மாற்றுத்திறனாளர் நண்பன்,
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்
27/10/2016

Wednesday, October 19, 2016

இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்

வண்ணத்துகள்கள்
வானில் பறக்க,
எண்ணத்துளிகள்
ஊடுறுவி பறக்க,
மத்தாப்புத்துளிகள்
பரவியெங்கும் அழைக்க,
மனம் அதில் இலயித்து
வின்னிற்கு பறக்க
தொடரட்டும் வாழ்வு
வண்ணமயமாய் என்றும்.

உங்களுக்கும் 
குடும்பத்தினர் 
நட்புகள்
அனைவருக்கும்


இனிய தீப ஔி திருநாள் நல்வாழ்த்துகள்

அன்புடன்
தவப்புதலவன்
A.M.பத்ரி நாராயணன்.

நட்புகளுக்கு! - இன்றொரு தகவல்.


எமதினிய நட்புகளே! வணக்கமும், வாழ்த்துகளும்.
பல்வேறு தலைப்புகளில், உணர்வுகளில் புதுக்கவிதைகளை எழுதிவருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். சமீப காலமாக வாழ்த்துகள் மட்டும் அதிகமாக பதிக்க நேரிட்டது. சிறிது வித்தியாசமாக இருக்கட்டும் என நினைத்து "போனதெங்கே?" என்ற தலைப்பில்
1) வளர் குழந்தைகள் உள்ள தனி குடும்பத்தில் கணவன் இறந்துபோன சோகத்தில் மனைவி புலம்புவதுபோல ஏழு (7)ம்,
2) நெருங்கிய நட்பு சொல்லாமல் எங்கேயோ சென்று விட்டதை நினைத்து வருந்துவதை போல ஒன்றும் (1)ம்,
3) நல்ல மனைவி அமைந்தும் வேசியரிடம் செல்லும் கணவனை குறித்து நான்கும் (4)ம்,
4) பெண் குழந்தையாக தான் பிறந்ததால், அனாதையாய் விட்டு சென்ற பெற்றோரை நினைத்து வருந்தும் நிலையில் இரண்டு (2)மென
பதினான்கு (14) கவிதைகளை
"போனதெங்கே?" என்ற ஒரே தலைப்பில் எழுதி சிலவற்றை பதித்துள்ளேன். அதை வாசித்த சில உறவுகளும், நட்புகளும் 'உங்களுக்கு என்ன ஆச்சி? என்ன ஆச்சி?' என விசாரிப்பதை காணும்போது விச்சித்திரமாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது.  ஒரு படைப்பாளியின் சிந்தனைகளை வெவ்வேறு வழிகளில் செலுத்தினால்தான் மாறுப்பட்ட படைப்புகளை படைக்கமுடியும்.புரிந்து கொள்ளுங்கள் நட்புகளே.
உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஆதரவு மேலும் பெருகி தொடரும் என்ற நம்பிக்கையுடன்.

--

உங்கள்
அன்பு
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Tuesday, October 18, 2016

போனதெங்கே? - 12



சுகந்தமாய் மணம் கமழும்
சுத்தமான சுகமான நீரிருக்க
சுழலில் நீயாய் மாட்டிக்கொள்ள
சூறாவளியாய் போனதெங்கே?


வளமான தோட்டமிருக்க
வரண்ட நிலம் தேடி நீ
வகையற்ற பாதையில்
வழி தவறி போனதெங்கே?

வந்தேரும் நோய்கள்
வரள செய்வது உனையுமினறி
வரவிருக்கும் உன் உதயங்களையும
வாட்டுமென மறந்து நீ போனதெங்கே?

விரகத்திலவளை தீயெரிக்க
விளக்கு எண்ணையின்றி தீய்ந்திருக்க
விலைமகளை நாடி சென்றவனை
விதியென மதியின்றி போனதெங்கே?



--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.
பத்ரி நாராயணன்.
18/10/2016



போனதெங்கே? - 11





இறைவனவன் சிலை வடிக்க
இயற்கையாய் அவள் செழித்திருக்க
இல்லாளாய் உமக்கமைய
இழிமகளை நாடி போனதெங்கே?

அவள் ஆசையுடன் காத்திருக்க
அவளின்றி எவளையோ நீ கால் பிடிக்க
அனைத்தையும் நீயுணர்வாய் என்றிருக்க
அறிந்துக் கொள்ளாமல் போனதெங்கே.?

நாடகமாய் அவள் வாழ்க்கை
நடக்கிறது உன்னாலே
நல்லுறவு இருக்கையில்
நாடி நீ போனதெங்கே?

இன்றுடன் முடியவில்லை
இளமையது உன் வாழ்வில்
இதையே கருத்தில் கொண்டு
இவளை விட்டு போனதெங்கே?

--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.
பத்ரி நாராயணன்.
18/10/2016








போனதெங்கே? - 10




ஆசை கனவுகளுடன் கரம் பிடிக்க
அலையும் நிலையுடன் நீயிருக்க
அறுசுவை உனக்காய் இங்கிருக்க
அனுபவம் தேடி போனதெங்கே?

அவளுனக்கு மனவியடா
அவள் ருசி உணர்ந்தாயோ
அனுபவங்கள் தேடி நீ, மனம்
அலைபாய போனதெங்கே?

உற்றவள் உனக்கென
உரியோர் கொடுத்தனுப்ப
உரிமையில்லா இடம் தேடி
ஊர் மேய போனதெங்கே?

அற்புத உறவவள்
அத்தியாய் பூத்திருக்க
அவளை நீ வாட விட்டு
அமிழ்ந்து நீ போனதெங்கே?


--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.
பத்ரி நாராயணன்.

18/10/2016








போனதெங்கே? - 9




உற்சாகத்தில் நீ திளைத்திருக்க
உறக்கமின்றி அவள் தவித்திருக்க
உருகுலைய செய்து விட்டு
உறவே நீ போனதெங்கே?

பொங்கும் உற்றாய் நீயிருக்க
பொசுங்கும் நிலையில் அவளிருக்க
பேதையவள் நிலைகுலைய
போதையால் நீ போனதெங்கே?

கோவலனாய் நீயிருக்க
கண்ணகியாய் அவளிருக்க
#ஊரறிய செய்து விட்டு
உற்றவனே போனதெங்கே?

உரிமையாய் நீயாள
உடையவாளோ ஏங்கியிருக்க
உணர்வுகளை அறியாமல்
உதறி விட்டு போனதெங்கே?


#அவள் உன் மனைவியென ஊரறிய செய்து விட்டு

--
ஆக்கம்
தவப்புதல்வன் @
A.M.
பத்ரி நாராயணன்.

18/10/2016

Sunday, October 16, 2016

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

அன்புடன் அரவணைக்க
ஆதரவாய் தோள் கொடுக்க
ஆண்டவன் அனுகிரகத்தால்

அனுதினமும் உயர்வடைய
அவனடி பணிந்து யாம்
அன்புடன் வாழ்த்தினோம்
நலனுடனும் மகிழ்வுடனும்
வாழ்வு தொடர்ந்தியங்க.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மருமகனாரே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வாழ்வின் நிதர்சனம்
அறிவினால் தெளிவாக,
வரமளித்த இறைவனவன்
முறைப்படுத்தி சரியாக
முன்னின்று வழி நடத்த,
நலமுடன் பணிகளை
திறமையாய் நீ முடித்து,
மகிழ்வுடன் பல்லாண்டு
இணைந்தென்றும் வாழ்ந்திட
உச்சியில் வீற்றிருக்கும்
அப்பிள்ளையாரப்பனை துதித்தே
தம்பி, உன்னை வாழ்த்தினேன்
இனிய உன் பிறந்த நன்னாளில் 
அன்புடன் நல்லாசிகள் கூறி யான்


பத்ரி நாராயணன் 

Thursday, October 13, 2016

இதழில்



தாமரைப் பூவாக - அவள்
பூ பூத்த நேரத்தில்
 சின்னஞ்சிறு வண்டாகி,
தேன் குடிக்கப் போனேனே!

தேன் குடித்த வேகத்தில்
போதையோ தலைக்கேற
மென்மையான அவளிதழில்.
மயங்கி நான் கிடந்தேனே!

Wednesday, October 12, 2016

நல்மகவை ஈன்றெடுத்ததற்கு வாழ்த்து


தாத்தா என்றழைத்து எம் மடி புரள
தவமிருப்பேன் (ந்தேன் ) எந்நாளும்.
மருமானை சுமந்த மடி,
உம் மகவை சுமக்க இயலாதா?

தங்கத்தாமரையை சுமந்திருந்து
தரணியிலே தவள விட்டாய்.
தவமிருந்த உனக்கவன்
தந்தவன் அருளினானே,
தாயென நல்பேரேடுக்க.

மகளே, நீ நலமாக தொடர்ந்திருந்து,
நல்மகவை பெற்றெடுத்தாய்.
நனைந்த விழிகள் கண் சிமிட்ட,
உடல் வலியோ  மறந்து போக,
உள்ளமெல்லாம் மகிழ்ச்சி  பொங்க,
உற்றவனின் கை பிடித்து
உன் முகமதை பதித்தனையோ?

செவிகளையே தீட்டீருந்தோம்,
ஆவலுடன் எதிர்நோக்கி.
இதயமே குளிர்ந்தது
இனிய செய்தி நாடி வந்து.
அன்புடன் ஆசிகளை
அளவின்றி தூவுகின்றோம்,
உமை அடைந்து
வாரிசுதனை தழுவவென்று.

வாழ்த்துகளுடன்,
உங்களுக்காக நாங்கள்.
--/08/2012
 

திருத்திக் கொள்வோம்



நாம் தினமும் எத்தனையோ செயல்களை செய்து வருகிறோம். அவற்றில் மற்றவர்களுக்கு பயனுள்ளதும், மகிழ்வை தரக்கூடியதும், உத்வேகம் அளிக்கக் கூடிய செய்திகளை தகவல்களை அவ்வப்போது தெரிவிக்க விரும்புகிறேன்.

அதில் முதலாவதாக, வெளிநாட்டிலிருந்து நமது மாநிலத்துக்கு வந்த சில சுற்றுலா பயணிகள் மதுரை திருமலை நாயக்கர் மஹால், தஞ்சை பெரியகோயில் ஆகியவற்றை சுற்றி பார்த்துக் கொண்டே, அங்கு கீழே நமது மக்களால் வீசி எறியப்பட்டிருந்த காகிதம் மாற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கி, பக்கத்தில் குப்பைத்தொட்டியை தேடியிருக்கிறார்கள், அது இல்லாமல் போகவே, தங்களிடமிருந்த பைகளில் போட்டுக் கொண்டு வெளியேறி இருக்கிறார்கள்.

அதைக் கண்ட நமது மக்களோ, அவர்களைப் பார்த்து, இவர்களும் வெட்கப்படவோ, குப்பைகளை உடன் எடுக்கவோ செய்யாமலும், திருத்திக் கொள்ளாமலும், நம்மைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் என்ன நினைப்பார்கள் என்பதை சிறிதும் எண்ணிப்பார்க்காமல் அவர்களைப் பார்த்து கேலியும் கிண்டலும் செய்திருக்கிறார்கள்.
இது இரண்டு வெவ்வேறு செய்திகளாக நாளிதழ்களில் வாசித்து வருத்தமடைந்தேன்.

அன்றிலிருந்து நான் போது இடங்களில் குப்பைகளை போடுவதைக் குறைத்திருக்கிறேன். யாரவது கப்பைகளைப் போட்டால் அன்பாக அறிவுறுத்தி எடுக்க செய்கிறேன். கோவில் மற்றும் போது இடங்களில் நான் தவழ்ந்து செல்லும் நிலை ஏற்பட்டால் என்னால் முடிந்தவரை குப்பைகளை சேகரித்து குப்பைத் தொட்டிகளிலோ அல்லது ஒரு ஓரங்களிலோ போடுவேன். அதைக் காணும் சிலர் ஒருமாதிரி பார்ப்பார்கள். அதை பொருட்படுத்துவதில்லை.

மிக முக்கியமாக அரசு மருத்துவமனைகள், புகைவண்டி நிலையங்களில் முன்பதிவு இடங்கள், பிளாட் ஃபாரங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பல ஆலயங்கள் குப்பைகள், அழுக்குகள், தூசிகள், ஒட்டடைகள் நிறைந்த இடமாக இருப்பதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கும்.

--
என்றும்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


Tuesday, October 11, 2016

போதுமா? - குறுங்கவிதைகள்


சிந்தனை ரேகைகள்
 
சிக்கலாய் நெற்றியில்.
 
சிந்திக்கத் தோன்றுதோ
 
சிறையோ அதுவென.


*******************************


சுலபமாய் சொல்லி விட்டாய்

சுரைக்காய் குழம்பு போல.

சுருக்கென்று வேண்டுமா?

சூப்பாய் இருந்தால் போதுமா?

போனால்?




விடியாமல் போவதில்லை,
விடிந்தாலும் மறையாமல் இருப்பதில்லை.
வறண்டிருந்தால் வளமில்லை
செழிப்பிருந்தால் பஞ்சமில்லை
பழக்கமிருந்தால் ஏக்கமில்லை.
விலகிப் போனால்?

'
''
'
''

''

''
வருத்தத்திற்கும்
ஏக்கத்திற்கும் குறைவில்லை


******************************************** 

நிலவை நாடி... - குறுங்கவிதைகள்








நிலவை நாடி...

பகலில் ஓர் நிலா 
பரவசப்படுத்தியது
பார்த்ததும் நான் 
பறந்தேன் வானில் 

*************************************



ஊருக்கு உபதேசம்
உனக்கு இல்லையாடா.
ஊற வைத்து துவைத்தாளே
உரைக்கவில்லையா இன்னுமது.

**********************************************


ஆறப்பொருக்கவில்லை
ஆக்கியதை ருசி பார்க்க,
அள்ளியே திணித்திட்டான்
அவிந்ததே அவன் வாயும்.

Monday, October 10, 2016

எப்படி? - குறுங்கவிதைகள்




உன் ஏக்கத்தின் 
பெருமூச்சு 
இங்கு அடைந்ததும் 
எப்படி விவரிப்பேன்,
அதன் தாக்கத்தை

------------------------------ 

ஒன்றாய் 

அரசியலில் 
ஆயிரம் 
அதற்காய் 
அத்தனையும்  
அமிழ்ந்தே 
அழியுமோ 
அதில்.

------------------------

நீ 

சொல்வதெல்லாம் 
அகராதியில் இருக்கு.
திரும்ப திரும்ப 
சொல்கிறாய் 
நான் 
அறியாததைப் போல.

-----------------------------------------

என்னாச்சு?

ஆனது என்ன?
ஆகப்போவது என்ன?
முடிவது எங்கே?
மூழ்கினேன் என்னில் 
விடைத்தேடி தன்னில் 
விடிதலும் மறைதலும் 
தொடர்ந்தே இயங்க.
விடையின்றி நானே 

தவித்தேன் தனியே.
 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

சண்முக மூர்த்தி ஐயா அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்துவோம், வாருங்கள் நண்பர்களே.
I send to you warm wishes,that your happiness will be as wonderful as the happiness, wish you happy birthday sir.
 
ஆறுமுகனின் நாமத்தில்
நாமம் ஒன்று கொண்டவரே!
சலசலக்கும் உம் மனமோ
ச[ஷ]ண்முகன் அருளாலே
சந்தோச நிலையுடனே
சந்தையெனும் உலகினிலே
சங்கிதம் பல பாட
சாட்சிகளாய் உம் குடும்பம்
சேர்ந்தணைத்து  குதுகளிக்க
சேரும் இன்பம் அத்தனையும்
பகிர்ந்தளித்து நீர் கொண்டாட
விழாவின் நாயகனாய்
விழி பூத்த மன்னவனே
மங்களங்கள் உமை சூழ
மகிழ்ச்சி என்றும் நிலையாக
நலமுடனே பல்லாண்டு
புகழுடனே வாழ்ந்திடவே
மனமுவந்தே வாழ்த்தினோம்
உம் இனிய பிறந்த நன்னாளிலே.

 
அன்புடன்,
தவபபுதல்வன் @
A.M.பத்ரி நாராயணன்.
 

பின்குறிப்பு:- நேற்றே பதிய வேண்டியது இது. இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதால் காலதாமதமாய். 10/31/2011

Friday, October 7, 2016

பூச்சிகாரன் - சிறுகதை


அம்மா தாலாட்டினாள், என் தங்கமே நன்றாக உறங்கி விடு. அம்மா உன்னுடன் நானிருக்கேன். இடையில் நீ
விழிக்காதே. விழித்தாலும் அழுகாதே. பூச்சி உனை பிடித்துக்கொள்ளும் என்று தொடர்ந்து தாலாட்டு பாட, தூக்கம் தழுவிக்கொண்டது. அந்த இரவு விழிப்பு வந்தது. இருட்டில் கைகள் தேட
தாலாட்டிய அம்மா அருகிலில்லை. அழுகை அழுகையாய் வர, ஓ... வென அழ நினைத்து வாய் திறந்தபோது,
நினைவுக்கு வந்தது, அழுதால் பூச்சி பிடித்துக்கொள்ளுமே. கண்களை இறுக மூடிக்கொள்ள, யார் அணைப்பிலோ இருப்பதை உணர்ந்து, ஐயோ அம்மா எனை பூச்சி பிடித்து கொண்டு விட்டதேயென கத்த நினைத்து விழித்தபோது வெளிச்சமாக இருந்தது. அம்மா புன்னகையுடனும் கையில் பாலுடனும் முகம் பார்த்தபடி அணைத்திருக்க, சொல்லி விட நினைத்தேன். ஆனால் பயமாய் இருந்தது, இருட்டில் கண்விழிக்காதே பூச்சி உனை பிடித்துக் கொள்ளும் என மீண்டும் பாடி விடுவாளோ என்று.
ஆக்கம்:
உங்கள்,
தவப்புதல்வன்.
 

Wednesday, October 5, 2016

உடனிருந்தும் .... குறுங்கவிதைகள்




வானம் 

ஏனிந்த கோபம்?
மழைக்காலத்திலும் 
அம்மணமாய்.


எனக்காக...

காலமினி அதிகமில்லை,
உதவுவேன் நானுமினி.
எனக்கில்லை எதுமினி.
[இல்லையது எனக்காக.]


உடனிருந்தும் 

அகிம்சையும் 
இம்சிக்கப்படுகிறது.
அந்நியனாய்.


சொல்லி விடு ...

தேடியலைய செய்து விட்டு 
தேவதையாய் நீ மறைய,
இல்லாத பொருள் தந்து 
இருக்குமதை நான் மறக்க,
என்ன செய்தாயோ 
என் மனத்தை.


முடியுமோ?

சுமக்க வேண்டும் 
நானும் உனை.
சுமந்திட்ட 
கடன் தீர்க்க.

உரைத்திடு



உறவுக்கு எதிராக  
உரிமைக்குரல் நீ கொடுக்க,
உள்ளம் கொடுத்திருந்தும்
உடைந்து போனேனடி.

உள்ளவரை நீயெனக்கு
உறுதியென நானினைக்க
உற்றவனென நான் வந்தும்
உறுத்தலானது உனக்கேனோ?

Tuesday, October 4, 2016

விழிநீர்


எண்ணத்தில் நீயிருக்க,
எழுத்தில் உனை வடித்தேன்.
சொல்லையும் சுவைக்கும்
நிலையிலின்று யானிருக்க,
உனையின்றி எதை சொல்வேன்
நினைவின்றி போகும் வரை.
நினைவின்றி போனபின்னே
உரைப்பதெல்லாம் உளறலாகும்.
உன்னை நேசித்து அதுவிருந்தால்
உருகும் உன் நெஞ்சமுடன்
உகுக்கும் இரு கண்களும்
உருளும் சொற்களுக்கு ஈடாக.

Monday, October 3, 2016

கனவிலும்



குற்றம் காண்பதில்லை
என் முடிவும்
கோபம் கொள்வதில்லை
உன் நினைவும்
மோதிக்கொள்கிறது
வீரியம் குறையாமல்.
பகலும் இரவும்
என்றது மாறி
கனவிலும் மோதுமோ
இனி விரைவில்?





இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

தொட்டிலொன்றை
புதிதாய் கண்டனாலின்று.
வியாக்கதகு உலகமாய்
விழி கண்டனாலின்று.
அம்மாவென்ற உறவு
அமுதூட்டிய நாளின்று.
அப்பாவெனும் மறுவுரு 
அணைத்திட்ட நாளின்று.  
அந்நாளை நீர் நினைக்க,
இந்நாளில் யாம் வாழ்த்த,
நிலைக்கட்டும் வாழ்வுமது
நலமாக, மகிழ்வாக.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பர்களே.  

நட்புடன்,
தவப்புதல்வன்.

Saturday, October 1, 2016

தவமிருக்கும்


இருப்பது பொய்! போவது மெய்யென்றெண்ணி
நெஞ்சில் ஒருவருக்கும்  தீங்கு  நினையாதே!
பருத்த தொந்தி நமதென்று நாமிருக்க,
நாய், நரி, பேய், கழுகு தமதென்று தவமிருக்கும் தான்!
      -- பட்டினத்தடிகள்.



சிந்தித்திருப்பதை
சிந்தனையிற்க் கொண்டால்
சிக்கலின்றி வாழ்க்கை
சீராக இயங்குமே என்றும்.

       தவப்புதல்வன்