Translate

Showing posts with label தாலாட்டத் தாய் பாராட்ட நீங்கள். Show all posts
Showing posts with label தாலாட்டத் தாய் பாராட்ட நீங்கள். Show all posts

Saturday, March 10, 2018

தாலாட்டத் தாய், பாராட்ட நீங்கள்


அன்னத்தின் அலகிலே தூளியாட
அன்னையாய் அதுவிருந்து தூளியாட்ட,
அமைதியாய் குழந்தையோ துயில் கொள்ள
அக்காட்சியது ஆனந்தத்தை நமக்களிக்க,

நானுறங்கிய காட்சிகள் நினைவோட்டம்.
அத்தனையும் ஆடியது தூளியாட்டம்.
தாயின் தாலாட்டு காதிலோட,
கண் மூடி மகிழ்ந்தேனே மனமோட.

சித்திரமாய் படமிது வீட்டிலாட,
உணர்வுகளோ இரத்தத்துடன் புரண்டாட,
உங்களுடன் பகிர்ந்திட நான் பாட
மகிழ்விலே என்னுடன் நீங்களாட,

கலந்துக் கொண்டோம் அத்தனையும் நம்மோட,
வாழ்த்துகளுடன் வாழ்த்துகளாய் காலமோட,
கண் விழித்தப்போதெல்லாம் உறவாட,
இன்று நான் வந்தேன் அன்னக்குழந்தையோட.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏