Translate

Showing posts with label சமுக வளர்ச்சியில் பெண்களின் பங்கு. Show all posts
Showing posts with label சமுக வளர்ச்சியில் பெண்களின் பங்கு. Show all posts

Monday, January 22, 2018

சமுக வளர்ச்சியில் பெண்களின் பங்கு - 2


பெண்ணுக்கு பெண்ணே இழிவினை தவிர்ப்போம்.
பெண்சிசுக் கொலையினை அறவே தடுப்போம்.
இரு மனம் இணைந்தால் திருமணம் முடிப்போம்.
போகப்பொருளாய் காட்டுவதை எதிர்ப்போம்.

பெண்ணுக்கு துணையாய் தோள்தனைக் கொடுப்போம்.
பிறப்பின் நிலையை இருவருக்கும் சொல்வோம்.
பெண்ணினம் நினைத்தால் நிகழ்த்திக் காட்டலாம்.
இன்றே எடுப்போம், உறுதியினைக் கொள்வோம்.

--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன் 🙏

Sunday, December 10, 2017

சமுக வளர்ச்சியில் பெண்களின் பங்கு - 1


விளையாட்டாய் கைதொழில் கற்போம்
இல்லத்தை அலங்கர்ப்போம்.
இனிதான வாழ்வின் பொருளுணர
ஓராயிரம் வழியிருக்கு திரைக்குள்ளே.
தொடர்களில் நம் வாழ்வு அழிவு கொள்ள
ஒப்படைப்பது சரிதானோ?

அதிரடியாய் எடுத்திடுவோம் - நமை
ஆள்வதைத் தவிர்த்திடுவோம்.
அன்னியமாய் ஒதுக்குகிடுவோம்
அதிகாரம் நம் கையில்.

போதையில் ஆடவன் மூழ்கியிருந்தால்
வருந்துமே அவன் குடும்பம்.
தொடரெனும் போதையிலே.
பெண்ணினம் மூழ்கியிருந்தால்
வருத்தத்தை எங்குரைக்க?
(வருந்தாதோ அவள் குடும்பம்?)

--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏