Translate

Showing posts with label உணர்வாரோ உயிர் மதிப்பை?. Show all posts
Showing posts with label உணர்வாரோ உயிர் மதிப்பை?. Show all posts

Monday, March 5, 2018

உணர்வாரோ உயிர் மதிப்பை?



இயங்கும் வாழ்வின் நலனுக்கு, 
இன்றியமையா தேவையிது.
மனித உயிர் பெருக்கத்தால் 
மலையாய் குவியும் தேக்கமிது.
மாறி விட்ட நாகரீகத்தால் 
மக்காத கழிவிது.

இதயத்தைத் துளையிட்டு 
இயக்கத்தை சரி செய்ய,
இணையில்லா கருவிகள் 
இயக்கத்தில் இன்றிருக்க,
ஏனோயிங்கில்லையே 
இலகுவாய் தூய்மையாக்க.

பாதாள சாக்கடைகள் 
பலி வாங்கும் கூடங்களாக உரு மாற,
பாவப்பட்ட இம்மக்களை, 
பலி கொடுத்து ருசிக்கிறனரே.
பாதுகாப்பு கொடுக்காமல்.

நித்தமும் கை நனைக்க, 
நிலையில்லா வாழ்விங்கு.
ஆறடி நிலை உயர, 
ஆண்டுகள் பல ஆக,
அத்தனையும் அடங்குகிறதே 
ஒரு நொடி தவறிப்போனால்.

வாசனை திரவிய கைக்குட்டைகள் 
தேவை 
நாமங்கு கடக்கையிலே
உயிர் காக்கும் கவசங்களில்லையே 
நமக்கான பணியிலவர்க்கு.
கவசங்கள் வழங்க 
வலியுறுத்தி சொல்வோம்
இல்லா நிலையின் 
நம்மிடத்தில் பணி வழங்க நாம் மறுப்போம்


ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்..