Translate

Friday, September 29, 2017

சந்தனமாய் இருந்தாலும்

கொஞ்சலில் தனை மறந்தாள்
கொள்ளையிட வழி கொடுத்தாள்,
கொடுமையாளனாய் நினையாவரை
கொடுத்துக் கொண்டனர் மகிழ்வாக.
ஒப்புதலோடு இயங்கியவள்
ஓலமிட்டாள் களவவன் இட்டதாக.

தெருவிலே நின்றாளே
ஊர் முழுக்க அறிந்திடவே.
தொலைக்க விட்ட கற்பைக் கேட்டு
தொடுத்தாளே கணைகளையே!

மீட்டுவிட அவள் துடித்தாள்
மீளாப்பொருளென அறியாமல்.
சாக்கடையில் கலந்த பொருள்
சந்தனமாய் இருந்தாலும்
மணக்காதே
 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

நட்பினால் நீ

நலமாய் நீ

வாழ்த்துக்களால் நீ

வளமாய் நீ

வாழ வேண்டும் நீ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பனே.

Wednesday, September 27, 2017

வழியை மாற்று நண்பனே

Ramesh N
பிறவிகள் எடுக்காமல் இருக்கவே விரும்புகின்றேன்:
எடுத்த பிறவியை விட முடியாமல் இன்று வரை தவிக்கின்றேன்!


கோலமிட்டவன் அங்கிருக்க,
கோணலும் புள்ளிகளாய் 
நாம் பிறப்பெடுக்க,
புது கோலம் போடும் வரை 
பழைய கோலம் நாமிருப்போம்.
வடிவுகளை அவன் மாற்ற 
ஒதுங்கியிருப்போம் அவன் நிழலில்.
மரமென்று ஒன்றிருந்தால் 
உச்சியில் கிளையிருக்கும் 
புவி பிளந்து வேரிருக்கும்.   
வேரோ வெகுதுன்னும் 
உச்சியோ சுடுதுன்னும் 
அதனதன் நிலையிலே 
ஆதங்கம் பல கொள்ளும்.
ஆண்டவனின் படைப்புகள் 
அனைத்தும் ஒன்றானால்,
அமிர்தமும் விஷத்தையும் 
நம்மிலே யாரறிவார் 
வாழ்வினை சுவைத்திடுவோம் 
வழியை மாற்று  நண்பனே 
வாழ்ந்து நாம் காட்டிடுவோம் 



-- 
நட்புடன் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
மாற்றுத்திறனாளர் நண்பன்.

Tuesday, September 26, 2017

நட்பின் தந்தை நலம் பெற பிரார்த்தனை




தம்பி கலா,

கதைகள் பல சொல்லியிருப்பார்.
காரணங்களும் கூறியிருப்பார்.
கைப்பிடித்து ஊர்வலமாய் 
வீதியெங்கும் காட்டியிருப்பார்.

வாழ்வின் அனுபவங்கள் 
வாழ்ந்தபடி காட்டி வரும் 
உமதன்பு தந்தை 
உம்முடன் நலமுடனே 
பல காலம் வாழ்ந்திடுவார்.

விரைவிலவர் குணமடைந்து 
வீடு வந்து உண்மை அணைக்க,
இறைவனவன் அருளளிக்க 
பிரார்த்திப்போம் உம்மிருவருக்கும்.


--
அண்ணன் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

ஏனிந்த மாற்றம் நம்மில்?

 🤔

தட்டிக் கொடுத்த கைகளும் 
தழுவிக் கொண்ட கைகளும் 
கை பிடித்த கைகளும் 
காணாமல் போனதெங்கே?

விழிகளோ விரிந்திருக்க,
வைத்த விழி பார்த்திருக்க,
வீதியெங்கும் புது முகங்கள் 
உலவிட காண்கின்றேன்.

காலமது விரைந்து விட,
நாயகர்கள் கிழடுகளாய் 
எங்கெங்கோ முடங்கிக்கொள்ள 
எழுப்பிடவா உன்னுடன் நட்புகளையும்.
😄😍

-- 
நட்புடன் 
தவப்புதல்வன் 
A.M.பத்ரி நாராயணன்.🙏

எங்கும் ஒற்றர்கள் - இன்றொரு தகவல்



சரியில்லா உடலால் 
அசதியில் நான்.
பகலிலும் படுத்தேன்
ஆழ்ந்த உறக்கம்
நேரம் கடக்க
அதிலிலும் கனவு
திடுக்கிட்டு விழித்தேன்
விழிகளை காட்ட
இமைகளோ மறுக்க
பார்வைக்கு வழியின்றி
ஒரு நிமிடம் தவித்தேன்.
விரல்களோ விரைந்து
இமைகளை பிரிக்க,
ஒளி கண்ட விழிகளோ
திடுக்கிட்டு விரிந்தது.
கனவின் பாதி
நிகழ்வில் இருக்க,
ஒற்றர் எங்கும்
நீக்கமற இருக்க.
அவர்களில் ஒருவனாய்
பொதுத்தளமும் இருக்க,
இதற்கு மேலே
இடமில்லை இங்கு.
--
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

குறுங்கவிதைகள்



இங்கு எழுதக்கூடாது.
திறக்கப்பட்டது அறிவிப்பு பலகை.
#ஹைக்கூ_கவிதை

==================


மலரை முகர்ந்து
கசக்கி எறிந்தான்.

#அவள்_சமாதியில்

========================

காதலித்தவள்
கை விட்டதும்
எடுத்து விட்டான்.

#தாடி

==========================
-- 
ஆக்கம்:-
தவப்புதல்வன் 
A.M.பத்ரி நாராயணன்.

Friday, September 22, 2017

இனிய காலை வணக்கம்

அள்ளித்தருவேன் என்றேன நினைத்து 
ஆவலுடன் நீரூம் காத்திருக்க,
கண்ணாமூச்சி விளையாட்டாய் 
இரவது விரைவாய் கழிந்து போக,
இன்றைய நாளும் வெற்றியுடன் துவங்கி    
வாழவே வாழ்த்தினேன் நலமும் நிலைக்க.


இனிய காலை நல்வாழ்த்துக்கள் நட்புக்களே. 


-- 
உங்களில் ஒருவன் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

குறுங்கவிதைகள்



விடியட்டுமெயென உங்களுடனே
காத்திருந்து கண்டேன்.

#விடியலைத்தான்.

====================

கனவுகளில் வந்து
நிஜ(ச)த்தில் மறைகிறாய்

#விழித்ததும்.

===========================


அலசிப் பார்க்கிறேன்
அத்தனையும் நிசமாவென.

#அணைத்தபடி_ நீ

========================

உணர்வுகளைத் தூண்டுகிறாய்
உணர்வற்ற தட்டச்சில்.

-- 
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

இனிய இரவு வணக்கம்

உடலோ ஓய்வுக்கு துணையழைக்க
விழிகளும் அத்துடன்  சேர்ந்தழைக்க 
இரவு பொழுதை அமைதியாக 
விடைப்பெற்று கழிப்போம் சுகமாக.

இனிய இரவு வணக்கம் எமதினிய நட்புகளே.

-- 
உங்களுடன்.
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Wednesday, September 20, 2017

தலைப்ப்ப்ப்பூ....??????????


சொன்னா கேக்கல
சோறிட்டும் நடக்கல
சொந்தமுன்னு சொல்லிக்கிட்டு 
சோதனைகள் தாங்கல.
ஆத்தாடினு நினைப்பதா?
அம்மான்னு அழுவறதா?
அத்தனையும் பாத்துக்கிட்டு
சும்மாதான் கிடப்பதா?
இப்படித்தான் நடப்பாரோ?
இதுக்கு மேல செய்வாரோ?
இது என்ன கொடுமையடா?
இது எப்ப தீருமடா?
எட்டித்தான் உதைத்தாலேயே
எட்டியவர் போவாரோ?
கிட்ட வந்து முட்டியெனை
கீழேத்தான் தள்ளுவாரோ?
என்ன இது அசிங்கமடா.
எப்படி சொல்ல தெரியலடா.
ஏன் இப்படின்னு புரியலடா.
ஏங்கி நான் தவிக்கின்றேன்.
முடிச்சுகளை யார் அவுப்பா?
முட்டாளா யோசிக்கிறேன்.
முழுவதுமா பாத்திட்டு
முட்டிக்கணுமா சுவத்துல தான்?
சொன்னா உமக்கு புரியாது.
சொல்லவும் எனக்கு தெரியாது.
சொந்தமும் இல்ல, விட்டுடுங்க. -தல
சொரிஞ்சது போதும் நிறுத்திடுங்க.
--
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

அன்றும் இன்றும் அதே அதே


பற்றியெரியும் வயிற்றுடனே 
பெற்ற மனங்கள் துடிக்குதடா.
பச்சையிலை முதிருமுன்னே 
பாவியவள் பறத்து விட்டாள்.
கனவு கண்ட அவளுடனே 
கலைந்து அதுவும் கரைந்ததடா.
முழு சேலை முடிச்சு  இறுக்க 
மொத்தமாய் அடங்கி விட்டாள்.

உறுதியை இழக்காதீர்
உமக்கிருக்கு வாழ்க்கையென 
வக்கனை பேசி திரிகிறார் 
பஞ்சமா பாதகர்கள்.
கபட வேடம் பூண்டவர்கள் 
 கடத்துகிறார் வாழ்வையவர் சுகமாக.

வேகுமோ அவருடலும் 
அரைஞாண் அறுத்த பின்னும்.
வெறி பிடித்த இனங்களாய் 
வேட்டையாடி அலைகின்றார். 
என்று முடியும் இவ்வேட்கை 
சிலிர்த்தெழுமோ பெண்ணினமும்.


-- 
ஆக்கம் 
தவப்புதல்வன்.
A.M.பத்ரி நாராயணன்.

உன்னிடம் எத்தனையோ



சுறுசுறுப்பாய் இயங்குதடா 
சுதந்திரமாய் உன் வாழ்க்கை.
ஆட்சி செய்ய ராணியிருக்க
முட்டையிடும் பணியாளாய் அவளிருக்க,
பணிகளை பகிர்ந்தளித்தாள் 
அத்தனையும் உமக்குள்ளே.
அரசனாக வாழ்வதில்லை 
அவள் வாரிசாய் இருந்தாலும்.
அண்டி நீங்கள் வாழ்வதில்லை.
அத்தனையும் உம் பொறுப்பே.
குஞ்சுகளும் வளர்ந்த பின்னே 
கூட்டமுடன் சேர்ந்துழைக்கும்.
கல்லும் முள்ளும் தடையில்லை 
நீரூற தன்னாலே கரைந்து விடும். 
வந்த வழி மாற்றமின்றி
வரிசையாய் வால் பிடிப்பீர்.
பெரும் சுமைகள் இருந்தாலும் 
பொறுமையுடன் நகர்த்திடுவீர்.
கைகள் பல கூடி இழுத்தால்   
பெருந்தேரும் ஆடி நகரும்.
அறிவினை பல கொடுத்தீர்,
ஆனாலும் உணரவில்லை. . 
பரந்து நீங்கள் திரிந்தாலும் 
பகுத்தறிந்தீர் உம்மிருப்பிடத்தை.
ஆழ்பிளவு  இருந்தாலும்,   
உமை பாலமிட்டு நீர் கடந்தீர்.
உயிரினத்தில் உயரினமாய் 
பொதுவிடத்தில் உறவு கொண்டு கண்டதில்லை.
சாரைசாரையாய் சென்று வரினும் 
நெரிச்சலும் மிகுந்து விடினும் 
சண்டை சச்சரிவு பார்த்ததில்லை.
பிறப்பென்றால் இறப்புண்டு. 
உம்மினம் இறந்தாலும் 
இழுத்து சென்று புதைத்து விடுவீர்.
உம் எடை ஒன்றென்றால் 
ஐம்பது எடை சுமக்கின்றீர்.
கற்று எமக்கு தருவீரோ 
வாழ்வு சுமை யாம் சுமக்க.

-- 
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Tuesday, September 19, 2017

வீட்டு சிறையினிலே


பாஸ்போர்ட் எடுப்பதில்லை.
விசாவும் கேட்பதில்லை.
அக்கம் பக்கம் ஓட்டையில்லை.
அதிகாரமாய் நுழைகிறது
ஆள் பார்க்கா சமயத்தில்
அகல திறந்த கதவு வழியே.

அண்டிக் கொள்ள இடமிருக்க
அகப்படாமல் தப்புகிறது.
அடுப்பங்கரை மட்டுமல்ல 
அடுக்கியுள்ள எம் சேமிப்புகளையும் 
ஆட்டம் காட்டி 
அச்சமின்றி அழிக்கிறது.
 
அட்டைப்பெட்டி மருந்துகளிலும் 
அமிர்தமே கூடுகளில் 
அள்ளியே வைத்தாலும் 
அதனிடம் பலிப்பதில்லை.
அடுத்தடுத்து உள்நுழைந்து
அடுக்கடுக்காய் ரகளை செய்யும்.

மருந்திட்ட பண்டங்களும்
மருந்துக் கட்டிகளும்
மாயமாய் போய்விட 
மாண்டிருக்கும் என நினைத்தால் 
மாற்றுயிடம் பலவற்றில் 
மறுநாளும் ஆட்டம் காட்டும்.,

நசிந்திருக்கும் என நினைத்து 
நாற்றத்திற்கு காத்திருந்து 
நாள் ஐந்து கழிந்த பின்னே 
நாள் முழுக்க சோதனையில் 
கில்லாடி எலிகளோ 
ரகசியமாய் சேர்த்திருக்கும் 

எங்குமில்லை எலிகளென 
ஏமார்ந்து இருக்கையிலே 
என் மனைவியிடம் வசமாக
ஒரு எலி மாட்டிக் கொள்ள,
போட்டு விட்டார் பலப் போடு 
பரலோகம் சென்றடைய.

பூத உடலைத் தூக்கியவர்,
போட்டுவிட்டார் குப்பை மேட்டில்.
''கிழவனவன் என்று சாவான் 
திண்ணை என்று காலியாக்கும்''
காத்திருந்த எலியொன்று 
குடிபுகுந்து மறுநாளில்.

தொடங்கிய வேட்டையோ 
தொடர்கிறது தினந்தோறும்.
எலிகளின் வரலாறோ 
தொடர்கிறது பெரிதாக.
அடைப்பட்டு இருக்கிறோம் 
அகல பெரிய கதவிருந்தும்.

முற்றிடுவோம் இத்தோடு,
மற்றொரு நாளில் உமை  சந்திக்க.  

 -- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

சிரிப்பா சிரியுங்க!...


சிரிப்புகளைக் கொட்டட்டுமா?
சிந்தனையில் கோர்க்கட்டுமா?
 பந்தியில் பரிமாறி
பரவசப்ப படுத்தட்டுமா ? 
அரங்கத்தில் சிரிப்பலை 
அரங்கேற்ற உம் வலை.

 அல்லி, அள்ளி முடிச்சு வர,
அவதியில் அவனிருக்க,
அந்த பக்கம் வேறொருவன் பார்த்திருக்க,
அடிக்கண்ணில் மற்றொருவன் நோட்டமிட,
அடுக்கட்டுமாவென புதியவன் ஓடி வர,
அக்கப்போராய் இருக்குதப்பா...

அறைந்துவிட தோணுதப்பா,
ஆறரை விட்டாலும் 
அலறியவர் ஓடுவாரோ?
அடிகள் பல கொடுத்து 
அமுக்கி அவனை விடுவாரோ? - மன 
அழுத்தத்தில் அவனிருக்க 

ஆரவாரம் செய்தபடி 
அவர்கள் அங்கு நிலைத்திருக்க,
ஆனந்தமாய் ரசித்தபடி 
ஆராதிக்க முடியயவில்லை.
ஆண்டவனும் பார்த்திருக்க,
அத்தனையும் எக்குத்தப்பாய் நடக்குதப்பா.

அமைதியின்றி அவனிருக்க  - ஓர் 
ஆளைக் கண்டதும் 
அங்கிருந்த ஆட்களெல்லாம் 
ஆளுக்கோர்  திசை நோக்கி 
அச்சமுடன் பறந்து விட்டார்.
அவனும் காலை எடுத்து விட்டான் 

அப்புறம்தான் நினைத்துக் கொண்டான்,
அது அவனுடைய பொண்டாட்டி,
அவளுக்கு அவன் உரிமையினு. 
அவன் அவளை அணைத்தபடி 
அரங்கிற்குள் உள்நுழைய 
அச்சமயம் சிரிப்பலையால் அதிர்ந்தப்பா.

-- 
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Monday, September 18, 2017

பண்பாட்டில் இதுவொன்று




பாரதத்தின் பண்பாடாய் 
பருவத்தில் கரையேற்ற 
பண்புடை நாயகனை
பலவாறு சோதனையிட்டு 
பகுத்தறிந்து தேர்ந்தெடுத்து 
பரிசமிட்டு முடித்தனரே. 


பக்தியுடன் காலில் விழ 
பாசமுடன் எனை எழுப்பி 
பரவசமாய் கட்டித் தழுவி 
பாற்சோம்பை கையிலிட்டு 
பாந்தமாய் உள்தள்ளி 
பண்புடன் ஒதுங்கி கொண்டார்.

பாலும் பழமும் கை மாற 
பகிர்தலுடன் தொடக்கமாக 
பரிவுடன் கைப் பிடித்து 
பக்கத்தில் என்னை இருத்தி,
படர விட்டார் விழிகளை 
பாவையெனை  கிறக்கமாக.

பருவத்து என் வனப்பெல்லாம் 
பசலையுடன் காத்திருக்க 
பஞ்சனை மேல் பஞ்சனையாய் 
பாங்குடன் எனை விரிக்க, 
பண்புடன் தொடங்கியது 
பார் புகழும் இல்லறமும்.

பலமான விழுதுகளுடன் 
பசுமையான வாழ்வமைக்க 
பல நல திட்டங்களுடன் 
பரந்து விரிந்த கனவுகளுடன் 
பகற்பொழுதும் விடிந்து விட .
பல்சுவை உறவுகளாயாய்
பல்கி நாளும் பெருகியதே
பற்றுடைய குடும்பமாய்.


-- 
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

இன்றொரு தகவல் - குடும்ப (குசும்பு) அட்டை




ஸ்மார்ட் கார்டு கைக்கு வர,
சந்தோசமாய் விழி ஓட,
சரியாக முதல் பாதி 
அதிர்ந்து போனேன் புகைப்படத்தில் 
யாருடைய  பொண்டாட்டியோ  
இரண்டாவதாய். 


#காலையுடன்_ இனிதாகட்டும்_ நாள். 


-- 
சொல்வதெல்லாம் உண்மை 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

பட்ட சூடு


பாழும் உணர்வை தூண்டி விட்டு,
படுக்கையாய் என்னை விரித்து விட்டாய்.
பகிர்தலில் இது அங்கமென - அப்
பாவியாய் நானும் மலர்ந்து விழுந்தேன்.
பசிக்கொண்ட வேங்கையாய்
பாய்ந்து நீ குதறி விட்ட நிலையால்,
பல விதைகள் இணைந்து இன்று
பலமுடன் உருவொன்றுக்கொள்ள,
பயனுள்ள நிலமோ
பாழ்பட்ட நிலையை
பட்டென உணர்ந்தேன்,
பருவமாற்ற மக்கைக்குறியால்
பலப்படுத்த நினைத்து
பாதையை வகுத்தேன்.
பறந்து விட்டாய் - புதியதொரு
பாதையில் மறைந்து நீயும் .
பார்த்திருந்த எம் விழிகள்
பசையற்று காய,
பசலையால் நானும்
பலவீனமடைந்தேன் நாட்கள் தேய
பார்க்கும் பார்வைகள்
பற்றியெனை எரிக்க
பறந்து வந்து கைப்பிடிப்பாயென
பற்றியிருந்தேன் நிலையை நிலையாய்.

--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

#ஒரு கருவை வைத்து பல கவிதைகள் புனையலாம் என்பதற்காக, ''வைபோகமே'' என்ற கவிதையின் கருவை வேறு வடிவில். தொடர்ந்து எம் கவிதைகளை வாசித்து ஆதரவு அளித்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. வணக்கம். 

வைபோகமே




காதலென தூண்டி விட்டு,
கண்களை மறைத்து விட்டு 
கருவினைக் கொடுத்து விட்டு,
கலங்கிட செய்து விட்டாய்.

கல்யாண வேள்விக்கு 
கருமாதி செய்து விட்டு,
காற்றிலும் வேகமாய் 
கடுகியே மறைந்து விட்டாய்.

கணம், உள்ளும் வெளியும் இரண்டாக,
கண் காது மூக்கு வைத்து 
கதை கதையாய் ஊர் பேச
காட்சி பொருளாய் வைத்து விட்டாய்.,

காலமது விரைந்தோட,
கன்னி நான் கலைந்திருக்க,
கற்புக்கு பங்கமின்றி 
காப்பாற்று என்னை விரைவாக.

கயவனெனும் பெயர் மறைய 
கரையவிருக்கும் எனை காக்க,
காதலதை புனிதமாக்க, காத்துள்ளேன்
கறையகற்றுவாய் என நினைத்து 





-- 
ஆக்கம் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Sunday, September 17, 2017

உங்களில் ஒருவன்



ஊற்றுகள் பெருக்கெடுக்கும் - நீர் 
உற்சாக குளியலிட.
உதறலின்றி வார்த்தைகளும் 
உருக்கொள்ளும் .விதவிதமாய்.

ஊக்கமுடன்  நீரிருக்க    
உமையவள் துணையுடனே 
உந்துதலாய் யாமிருந்து  
உரிமையுடன் கைக்கோர்ப்பேன் .

ஊரறிய நீரிருந்தால் 
உண்மையாய் குதுகளிப்பேன்.
உடலிலே குறைக்கொண்டோம் 
உள்ளத்தில் நிறைக்காண்போம்.

உயிரிடத்தில் பேதமின்றி 
உளமார நேசிப்போம்.
உயர்நிலை சென்றடைய
உறுதியுடன் கைக்கொடுப்போம் . 


-- 
ஆக்கம்:-
தவப்பதல்வன் 
A.M.பத்ரி நாராயணன்.

குறுங்கவிதைகள்




நாயகியாய் உருவேற்றி 
பலி கொடுத்தனர் 
படம் ஓட.

#அனிதா.
#அரசியல் 

=========================

ஆதாம் ஏவாளாய் 
நாம் 
அருகருகே.

#குழந்தை பருவ புகைப்படத்தில் 

============================

தள்ளாடி தடுமாறுகிறது 
எம் மடிக்கணினி.

#வைரஸ்  

-- 
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்

பழுத்த இலை ஆகும் முன்னே


பட்ட மரம் நானல்ல.
பழுதடைந்த மரம் நான்.
பசுமையை போர்த்திக் கொண்டு 
பச்சையாய் தெரிகின்றேன்.
பட்ட அடிகள் கணக்கில்லை
படர்ந்து விரிய அறியவில்லை.
பகுத்தறியும் அறிவிருந்தும்
பாழும் சிறைக்குள் அடைத்துக் கொண்டேன்.
பசுமையாய் அக்கரை காண்கையிலே
படபடக்கும் எம் இதயம்
படர்ந்துயர துடிதுடிக்கும்
பசுமையாக்க திறனின்றி தவித்தவிக்கும்.
பாடங்கள் அனுபவத்தில்
பட்டங்களில்லை எம்மிடத்தில்.
பரிகாசங்கள் இருந்தாலும், மகிழ்கிறேன்
பாசம் கொண்ட உமைக் கண்டு.
--
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Saturday, September 16, 2017

காதலது நிசமானால் - போனதெங்கே?




கண்கள் உனது மின்னலடிக்க,
கவிதைகளை நான் வடிக்க 
கண்ணெதிரே வந்தவளே 
கனவாய் மறைந்து போனதெங்கே?

கன்னங்குழிய சிரித்து விட்டு,
கண்ணீரில் மிதக்க விட்டு,
கலக்கத்தில் நான் புலம்ப 
காணாமல் போனதெங்கே?

கஸ்தூரி மனம் போல 
கமழுமந்த உன் வாசம்.
காற்றிலே கலந்தது போல் 
காதலை மறந்து ( துறந்து ) போனதெங்கே?

கலந்துரையாடிய நேரமெல்லாம் 
காதினிலே எதிரொலிக்க,
கண் முன்னே இல்லையெனினும் 
காணுகிறேன் மனத்தினிலே.

கடும் கல்லும் மண்ணாக 
கரைந்து நானும் உனையடைய 
கதை சொன்ன என் பைங்கிளியே 
கவர்ந்து செல் எனை விரைவாக.    



-- 
ஆக்கம் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

#பொருத்தமான புகைப்படம் தேர்ந்தெடுத்து கொடுங்கள் நண்பர்களே....

முடிந்த கதை, முடியாத நினைவு.


முளை விட்ட குருத்துக்கு 
முலையிட்ட பாலுக்கு 
மூன்றிலை விடுமுன்னே 
முறித்துதான் போட்டு விட்டார்,
முறையிட வழியின்றி 
மூச்சடைக்க செய்து விட்டார். .

முன்னூறும் ஐந்நூறும் கொடுத்திட்டால் 
முடிந்திடுமா கதையனைத்தும்?
முறையிட்ட சொல்லுக்கு 
முறையில்லா பதிலாலே,
முடங்கித்தான் போனதடா 
மூன்றடி மண்ணுக்குள்.  


முறையிட அழைத்துப்போய் 
முறை தவற(ர) ஆனதினால் 
முறையிட போக்கின்றி 
முடிச்சிட்டாளோ அவள் வாழ்வை?
மூத்த தலைமுறையின்  
முணுமுணுப்பு கேட்குதடா 



-- 
ஆக்கம் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

குறுங்கவிதைகள்




காரிருட்டிலும் தெரிந்தது 
கைப்பட்டதும்.

#வளைவுகள் 

============================

தேனீர் கோப்பையில் நீயும்.
உன்னழகில் நானும்.

#மூழ்கித்தான் 

==========================

நீங்கள் படம் பிடித்ததில் 
நான் பாடம் படித்தேன்.

#அனுபவம்.  










--
ஆக்கம் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

காற்றில் கலந்த கனவு

கற்பனைக்கு உரு கொடுத்து 
கனவுகளில்  மிதக்க விட்டு 
கரையேற வெளிச்சமின்றி 
கண்களை மறைத்து விட்டு  
காற்றிலே கலந்ததாக
கபடமது ஆடுகிறார்.

ஓராயிரம் வழியிருக்க.,
 ஒன்றுமறிய பிள்ளையவளை 
ஒப்பனையாய் முன்னிறுத்தி 
ஓடத்திலுள்ள பழுத்தறிந்தும் 
ஓடும் பெரும்வெள்ளத்தில் 
ஓட விட்டு, உயிர் பறித்து 
ஒப்பாரி வைக்கின்றார் - வேதம் 
 ஓதும் நல்லவராய் .

ஒரு பாதை அடைத்தாலும் 
இரு வழி மீதியிருக்க, 
முடிந்தது வாழ்வென 
முடிச்சிட்டு  மிரட்டி விட 
முடிச்சிட்டாள் சேலை முனையில் 
முழுமையாய் வாழ்வையவள்.








வருத்தங்கள் கலைந்திட 
வழியதை காட்டியிருந்தால் 
வளமுடன் வாழ்வும் 
சிறப்புடன் ஒரு பெண்மணியும் 
உயர்நிலையில் குடும்பமதும் 
வளர்ந்திருக்கும் மகிழ்வுடனே 


சிந்தியினி பயனில்லை 
சிந்தனையில் மனமொன்றி 
சிறை பிடிக்கும் வேடரிடம் 
சிக்கியினி அழியாமல்  
சீர்தூக்கி வளர்த்திடுவோம் 
சிற்பிகளாய் அடுத்தடுத்த குருத்துக்களை..

 அவள் நிலையை உள்நிறுத்தி 
அவசர முடிவு கொள்ளாமல் 
அனுபவ பாடமாய்  கற்றுணர்ந்து 
அலசிடுவீர் உம் நிலையை.
அள்ளிடுவீர் வெற்றிகளை 
அளவீடுகள் ஏதுமின்றி.

#அருமை மாணவ செல்வங்களே , அச்சபடாதீர். அலசி ஆராயுங்கள். அறிவும்,ஆற்றலும் உங்களிடம். வாழ்த்துகள்.

என்றும் உங்களுடன்,
தவப்புதல்வன் 
A.M.பத்ரி நாராயணன்    

வாழ்த்துகள்  முகநூல் குழுவில் பாதிக்கப்பட்டது.

Friday, September 15, 2017

சஷ்டியப்தபூர்த்தி விழா

சஷ்டியப்தபூர்த்தி விழா
நாயகன்: சிர.A.M.பத்ரிநாராயணன் நாயகி: சௌ.B.ராஜராஜேஸ்வரி
இடம்: A.V.R.திருமண மஹால், சேலம். தேதி:27/06/2017. செவ்வாய் கிழமை

அற்புதத்தந்தை, அருமை அம்மையின் ஆருயிர் அருந்தவப் புதல்வனாம்

எங்கள் அன்பில் இணைந்த தம்பியே! பத்ரியே!!

ஆனந்தமாய் ஆதரவாய் அளவிலா

பலப்பணிகள் ஆராய்ந்து அர்பணித்த

எங்கள் தண்ணியாம்! தன்னிகரில்லா ராஜராஜேஸ்வரியே!

தங்கை தம்பிகளின் அண்ணனே! அண்ணியே!

தழைக்கவே சிறக்கவே வாழ்வீர்.

‘’ ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய் ‘’


‘’மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்.’’


என்ற பொய்யாமொழிப் புலவரின் வாக்குப்படி

அரும் புதல்விகளைப் புலர வைத்தீர்.

நல் பேரன், பேத்திகளைக் கண்டீர்.

நன்மையே நலம் புரிய விழைகிறீர்.

நாதனாம் நான்முகனும் நல்கவே நல்வாழ்வு

நண்பனாய் நல்லுறவாய் மனங்கவர் மன்னனாய்,

மாற்றுத்திறனாளரின் மார் உயர,

அங்கிங்கெனாதபடி செய்தொண்டு செம்மைப்பெற

ஆற்றுநீராய் பயணித்து அபிஷேகம் கண்டு

ஆனந்தத்தாண்டவமாடும் அருணசலேஸ்வரன்

அற்புதங்கள் பல காண அருளவும்,

கடந்து வந்த பாதையை படிகற்களாய் ஏற்று

அறுபதைக் காணும் தாங்கள்

ஆயிரம் பிறை கண்டு ஆனந்த வாழ்வும்

அளவிலா ஆயுளும் ஆரோக்கியமும் பெற,

அன்னையாம் ஶ்ரீ அங்காளபரமேஸ்வரியின் அருளை வேண்டும்.

உளம் கவர்,


உடன் பிறப்புகள்.