Translate

Wednesday, September 20, 2017

உன்னிடம் எத்தனையோ



சுறுசுறுப்பாய் இயங்குதடா 
சுதந்திரமாய் உன் வாழ்க்கை.
ஆட்சி செய்ய ராணியிருக்க
முட்டையிடும் பணியாளாய் அவளிருக்க,
பணிகளை பகிர்ந்தளித்தாள் 
அத்தனையும் உமக்குள்ளே.
அரசனாக வாழ்வதில்லை 
அவள் வாரிசாய் இருந்தாலும்.
அண்டி நீங்கள் வாழ்வதில்லை.
அத்தனையும் உம் பொறுப்பே.
குஞ்சுகளும் வளர்ந்த பின்னே 
கூட்டமுடன் சேர்ந்துழைக்கும்.
கல்லும் முள்ளும் தடையில்லை 
நீரூற தன்னாலே கரைந்து விடும். 
வந்த வழி மாற்றமின்றி
வரிசையாய் வால் பிடிப்பீர்.
பெரும் சுமைகள் இருந்தாலும் 
பொறுமையுடன் நகர்த்திடுவீர்.
கைகள் பல கூடி இழுத்தால்   
பெருந்தேரும் ஆடி நகரும்.
அறிவினை பல கொடுத்தீர்,
ஆனாலும் உணரவில்லை. . 
பரந்து நீங்கள் திரிந்தாலும் 
பகுத்தறிந்தீர் உம்மிருப்பிடத்தை.
ஆழ்பிளவு  இருந்தாலும்,   
உமை பாலமிட்டு நீர் கடந்தீர்.
உயிரினத்தில் உயரினமாய் 
பொதுவிடத்தில் உறவு கொண்டு கண்டதில்லை.
சாரைசாரையாய் சென்று வரினும் 
நெரிச்சலும் மிகுந்து விடினும் 
சண்டை சச்சரிவு பார்த்ததில்லை.
பிறப்பென்றால் இறப்புண்டு. 
உம்மினம் இறந்தாலும் 
இழுத்து சென்று புதைத்து விடுவீர்.
உம் எடை ஒன்றென்றால் 
ஐம்பது எடை சுமக்கின்றீர்.
கற்று எமக்கு தருவீரோ 
வாழ்வு சுமை யாம் சுமக்க.

-- 
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: