Translate

Showing posts with label என்னில் நீ. Show all posts
Showing posts with label என்னில் நீ. Show all posts

Thursday, January 4, 2018

என்னில் நீ


கற்கண்டே, கனி ரசமென
நானியம்பேன்.
பிழிதலால் நீயடையும்
சிரமத்தை உணர்ந்ததால்.
கடைந்தெடுத்த சிற்பமெனவும்
உனை கூறேன்.
கடைதலின் குடைதலின்
வலியுணர்ந்து.

இயற்கையென உனை அழைப்பேன்
பூத்துக்குலுங்கும் பூவென்பேன்.
புன்னகைக்கும் முழு நிலவென்பேன்.
தழுவும் தென்றலென்பேன்.
வண்ணத்துப்பூச்சியென உனை அழைப்பேன்
சிறகடிக்கும் சிற்றினமென சொல்வேன்

கொஞ்சுமொழி பேசும் கிளியென்பேன்
குரலொலியால் குயிலென தானழைப்பேன்.
சுற்றி படரும் கொடியாய் உனை சுமப்பேன்.
உனை தாங்கும் சிறு மரமாய் இருந்தாலும்,
நீ பட்டு போகும் நாளிலிலே
நான் இற்று போக வரம் கேட்பேன்.

வாசங்களின் கலவை நீ
வண்ணங்களின் வடிவு நீ.
என் நெஞ்சத்தில் அமர்ந்த நீ
நீங்காத உரு கொண்டவள் நீ.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏