Translate

Saturday, December 29, 2007

தனிமையில்

தாயை இழந்தேன்.
தாயென நினைக்கும்
சோதரியே
உமையும் இழப்பேனோ.

நலம் பெற்று வருவீரோ
எமைக் காண
அன்றி வரட்டுமா
உமைக் காண.

உங்கள் பதிலுக்காக
தனியானாய்
தவிக்கின்றேன்,
தனையனாயிருந்து.

05\ 06 \2006 ல் எமது H.V.சகோதரிக்காக எழுதியது.

Friday, December 21, 2007

யாருக்காக ?

பரமாத்மாவாக நீங்கள்,பாவங்களை
யாருக்காக சுமக்கிறீர்கள்?
ஆத்மாக்களை இரச்சிக்கவா!

யானை இருந்தாலும்
ஆயிரம் பொன்.
யானை இறந்தாலும்
ஆயிரம் பொன்.
இருப்பீர் என்றும்
எம் இதயத்தில்
பல்லாயிரம் பொன்னாக.

உங்களுக்காக
எம் இதயத்தில்
இடமிருக்கிறது
ஆனால்
வசதியோ குறைவு.

கடமைக்கோ
மனமில்லை
இடம் கொடுக்க
வாய்ப்பிருந்தும்.

போன பின்னே
'கோ' வென
துடித்தாலும்
கிடைக்காது
அறியா மூடர்கள்.

'கோ' வுக்கே
இந்நிலை என்றால்
நாளை
'பா' வுக்கு
எந்நிலையோ?

நீரின்றி
வளமில்லை,

பாசமின்றி
வீடில்லை.
அறிய வேண்டியவர்
அறிந்துக் கொண்டால்
மகிழ்ச்சிக்கு
பஞ்சமில்லை.

உறவுகளிடம்
இடம் பிடித்தீர்.
உறைவிடத்தில்
ஏன் இழந்தீர்?

உரிமை
எடுத்துக் கொள்ளுங்கள்.
அன்பைக் காட்டி
வெல்லுங்கள்.
பாசத்தால்
உருகி குலையாதீர்கள்.

சேதத்திற்கு
அளவில்லை,
பாச அணைகள்
உடைந்து விட்டால்.

ஆறுதல் சொல்ல
நினைக்கின்றேன்,
வழி அறியாமல்
முழிக்கின்றேன்.

ஆற்றி விட
நினைக்கின்றேன்,
வார்த்தைகளின்றி
தவிக்கின்றேன்.

தேற்றி விட
நினைக்கின்றேன்,
தேடிக் கொண்டே
இருக்கின்றேன்.

சுற்றிச் சற்றி
வருகின்றேன்,
அடை(டி)ப்பட்ட
புலியாக.

அறிந்த உங்களுக்கு
அறியாத நான்,
உடமையை
இழக்க விரும்பாமல்.

Wednesday, December 19, 2007

உன்னிலே அமிழ்ந்த....

மேகங்கள் நிறைந்து போனால்
வானமே மறைந்து போகும்.

கடலலைகள் மிஞ்சி போனால்
புவியும் அழிந்து போகும்.

உன் நினைவுகள் இன்பமானால்
நெஞ்சமும் மிதந்து போகும்.
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

புவியிலே ஊஞ்சலாய்
கடல் அலைகள்.

வானிலே ஊஞ்சலாய்
பஞ்சு மேகங்கள்.

நெஞ்சிலே ஊஞ்சலாய்
உன் நினைவுகள்.
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ


என்றேனும்
வருவாய்
எனைத்தேடி,
விழி வைத்து
காத்திருப்பேன்
உனை நாடி.

எஎஎஎக்கக்கக்க







இறைவனாய் நினைத்து

புரிதல் இல்லை
நமக்குள்ளே
அதனால்
என்னுடையது
என்னிடமும்,
உன்னுடையது
உன்னிடமும்.

உனது உயர்ந்தது
எனது தாழ்ந்ததென்று
போடாதே தவறாக
அன்பு கணக்கை.

புரிதல் இருப்பின்
நமைக் காத்திடுவோம்
ஒருவரை ஒருவர்
அரவணைத்து.

கோபப்படுகிறாய்
காக்கும் இறைவனாய்
எனை நினைத்து.

அன்பினால் உனை
கட்ட முடியவில்லை
மனிதனாய் இருந்தும்.

மிக மலிவாக

மிக உயர்வான
அன்பை தருகிறாய்
மிக மலிவாக.

உன்னிடமிருந்து
பெற முடியவில்லை
என்னால் மட்டுமே.

உன் பார்வையில்
நான் படாததாலா?

அதற்குறிய தகுதி
எனக்கில்லையென
கருதுவதாலா?

நீ கட்டியிருக்கும்
அன்பெனும்
பெருங்கோட்டையில்,

எனக்கொரு சிறு இடம்
தருவாயா?

வேண்டுவேன்
இறைவனிடமும்
உன் அன்பு கிடைக்க.

கொடுப்பான் அருள்
என்னிடம்
நீ அன்பு காட்ட.

எனக்கோ
உன் அன்பு
கிடைத்து விட்டால்,

பறப்பேன்
இறக்கைகள் இல்லாமலே.

நீந்துவேன்
துடுப்பு போடாமலே.

கேட்பேன்
காதுகள் இல்லாமலே.

நடனமிடுவேன்
கால்கள் இல்லாமலே.

பாடுவேன்
வாய் இல்லாமலே.

ரசிப்பேன்
கண்கள் இல்லாமலே.

படைப்பேன்
கைகள் இல்லாமலே.

கொடுத்து விடுவேன்
இதயத்தையே
உன் அன்புக்கு
காணிக்கையாகவே.

Monday, December 17, 2007

ஏனிந்த நினைவு ????

உன் மனநிலை
அறிந்திருந்தால்!
வளைவுகளை
ரசித்திருப்பேன்.

முயன்றிருப்பேன்
உனை அடைய,
நீயும் மகிழ்திருப்பாய்
உன் முடிவு சரியென.

நானும்
மகிழ்ந்திருப்பேன்
கிடைத்த வாய்ப்பை,
பயன்படுத்தி.

பாவி,
பாடாய் படுத்தி விட்டாய்,
சென்றபின் எனை பற்றி
உன் நினைப்பை வெளியிட்டு.

காமாலைக்காரனுக்கு
கண்டதெல்லாம்
மஞ்சளாம்.

அதனால் தானோ
என்னை பார்த்ததும்
காமுகனாய்
நினைத்திருக்கிறாய்.

வேறு எப்படி
புரிய வைப்பேன்
இளநங்கையே.

அகவை ஒன்று மலர்ந்ததிற்கு

qqqqttttqqqquuuuqqqq


அகவைகள் கடந்தாலும்
அகத்தின் எழுச்சி
அகமதில் காட்டி
அகமகிழச் செய்து

அன்புரை பூண்டு
அளவுலாவி
அன்பான குடும்பந்தனை
அரவணைத்துச் செல்லும்
அங்கயற்கரசியே !

அளவிலா வாழ்த்துக்களை
அன்புடன் வழங்கினேன்
அதிகாலைப் பொழுதினிலே
அகவையொன்று
அருமையாய் மலர்ந்ததற்கே.

Sunday, December 2, 2007

சொல்லிக் கொடுக்கிறார் "கிறுக்க(ன்)(ர்)"

கிறுக்கல்கள்
திரு.பாலு அவர்கள்,


எம்முடைய பல சந்தேகங்களுக்கு [பதிவு செய்வதற்கான] வழிகளை

சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதன்படி அவரின்

வலைப்பெயரை
கிறுக்கல்கள்

தமிழில், எம் வலைப்பதிவிலே வெளியிட்டு


முதல் முயற்ச்சி மேற்கொண்டிருக்கிறேன். சரியாக வருமென்ற

நம்பிக்கையில். தவறாக இருப்பினும் அப்படியே வைத்திருக்கப் போகின்றேன்.

ஏனென்றால் இதைப் பார்க்கும் நீங்கள் , சரி செய்துக் கொள்ளவும்,புதிய

விசயங்களையும் கற்றுக் கொடுப்பீர்கள்.

Saturday, December 1, 2007

நட்புக்கொரு புது இலக்கணம்.

மவுனமாய் வாயும்
பூட்டிக் கொள்ள,
மனத்திலுள்ள செய்திகளை
விழி கூறும்.

இதயம் கூறும்
ந்ட்புறவோ,
சிந்துகின்ற புன்னகையாய்
முகத்திலே வழிந்தோடும்.

குடும்ப நினைவுகளோ
மனத்திலோட,
சோகமே வெளிக்காட்டும்
பின்னனியாய்.

நண்பிகள் பலருண்டு.
நட்பிலே வகையுண்டு.
மொழி பேச வாயிருந்தும்,
சந்திப்பிலே கண்ணசைய,
பிரிவுக்கு கையசைய,
மவுனமாய் காலங்கள்
கழிந்தோடும்.

தேவைகள் குறைந்தளவே.
வாயசைவும் சிறிதளவே.
மவுனமொழி ஓரிரண்டை
கற்றுக் கொண்டேன்
நானும் உன்னிடமே.

நட்புக்கு, இதுவும்
ஒரு இலக்கணமாய்
சொல்லிக் கொடுத்தாய்-
நீ எனக்கு.
நீங்கா நினைவுகளில்
நீயும் இருப்பாய்
நண்பியாய் என்றும்
எம் மனத்தினிலே.



ஆவியின் குரல்.

உன் மடியில்

தலை வைத்து

நாம் மகிழ்ந்திருக்க

அன்று மறுத்த நீ.


எதை நினைத்து

கதறுகிறாய் இன்று

உன் மடியில்

உயிற்ற என் தலை வைத்து.

இந்த குட்டி புடிச்சிருக்கா....!!




ஹா...ஹா எம் பெயர் தெரியுமா?


ரூபி. ரூபி.. ரூபி. ஹையா!
இந்த குட்டி புடிச்சி இருக்கா?


இந்த குட்டி பெயர் ருபி

Thursday, November 29, 2007

என்று புரியுமோ !

காலமோ கடக்கிறது
எனை விட்டு பிரிந்து।

பேசுகிறாய் சில வார்த்தைகள்
அவசியத் தேவையினால்।


உயிரற்ற பார்வைகளாய் மோதுமே
நொடி சில மட்டுமே।

ரசிக்கிறேன் உன் உருவத்தை
மனத்தில் நிறைத்துக் கொள்ள।

வாயிருந்தும் பேச முடியவில்லை
போட்ட தடையினால்।

சேர வாய்ப்பில்லையோ
நினைத்தாலே பதறுகிறதே
உடலும் உள்ளமும்।

வினாக்களால்
மண்டையோ குடைகிறது
புரிய வைக்க தெரியாமல்।

உன் வாய் வார்த்தைகள்
எனக்கு
உற்சாகம் கொடுக்கும்।

உன் நெருக்கம்
வாழ்வில்
நம்பிக்கையைக் கொடுக்கும்।

நீ கைக்கொடுத்து என்னை
கோபுரத்துக்கு
கொண்டு செல்।

வெறுப்புக் கொண்டு
குப்பை மேட்டில்
போட்டு விடாதே।

பிராத்திக்கிறேன்
நாள் தோறும்
இறைவனிடம்,
உன் அன்பு கிடைக்க.

நீ பிரிந்தாய்
எனை அறிந்துக் கொள்ளாமல்।

என் உயிரும் பிரியட்டும்
நீ அறியாமல்।

உயிர் பிரியும்
நேரத்தில் தான்
கிடைக்குமா
உன் அருள் பார்வை।

உயிர் போக்கவோ
எனக்கு விருப்பமில்லை।

மனச்சுமையால் தினறுகிறது
என் உயிர் மூச்சு.

Wednesday, November 28, 2007

தேவையா தலைப்புகள்। [ ஹைக்கூ...]

நாயாய் குலைக்கிறான்,
நரியாய் ஊளையிடுகிறான்,
கழுதையாய் கத்துகிறான்,
மனிதனாய் பேசாமல்।
"""""""""""" 1 """"""""""""""""

பன்றியாய் உழல்கிறார்,
புலியாய் கொல்கிறார்,
மிருகமாய் இருந்து
மனிதத்தை உணராமல்।
"""""""""""" 2 """''''''''''''''

மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும்
மனம் உண்டென்று,

பெண்டாள நினைக்கிறான்
அடுத்தவன்
மனைவியையும்।
""""""" ३ """"""""""'

மூக்கை நுழைத்தேன்
உரிமையென நினைத்து।
அறுப்பட்டு விழுந்தேன்
எனை ஒதுக்கி
புறந்தள்ளி சென்றதால்।
""""""""""" ४ """""""""''''

சுவாசித்தான்
அவள் சகவாசத்தாள்।
கொடுத்தாள் தனை
இழந்தான் மனம்।

சென்றாள்
அவள்
மனத்தை
பறித்துக் கொண்டு।
"""""""" ५ """""''''''




அம்மாவுக்கு என்றுமே !!

பாப்பா பிறந்தாள்
அம்மா மடியில் குழந்தையாக।

சின்னஞ்சிறு குழந்தையானாள்
அம்மா மடியில் குழந்தையாக।

சிறுமியுமானாள்
அம்மா மடியில் குழந்தையாக।

குமரியுமானாள்
அம்மா மடியில் குழந்தையாக।

குடும்பத்தின் தலைவியுமானாள்
அம்மா மடியில் குழந்தையாக।

கருவும் சுமந்தாள்
அம்மா மடியில் குழந்தையாக।

பாப்பாப் பெற்றெடுத்தாள் ( ஈன்றெடுத்தாள் )
அம்மா மடியில் குழந்தையாக।

என்றுமிருப்பாள் அவளும்
அம்மா மடியில் குழந்தையாக।

அம்மா உள்ளவரை
அம்மா மடியில் குழந்தையாக.

Monday, November 26, 2007

ஹைக்கூ..... கவிதைகள்

உன் இளமைக்கோலம்।
*************************

மாறலாம் உன் உருவம்
புற உலகில்।

மாறவே மாறாது
என் மனவுலகில்।
#####1##########

திரும்புவதால்
***************

தேவியின்
தரிசனம்
இன்று
மட்டும்।
###2###

புகைப் படத்தில்
**************

எடுத்துக் கொண்டேன்
புகைப்படம்
சென்ற இடமெல்லாம்।

உன் இடமோ வெறுமை
ஏனெனில்
என் மனத்தில் நீ।
@@@3@@@@@

பார்கிறான்।
**********
வகை வகையாய்
விருந்து
வகையற்றவன்
வாய் திறந்து।
@@@4 @@@

ஏக்கம்
******
சென்றேன் கேரளம்
கண்டேன் யானையை
காணவில்லை குளிப்பதை
ஏக்கம் எனக்குள்ளே।
$$$$$$$$5$$$$$$$$$$$

நீ
^
கண்களில் படாமல்
மறைந்துக் கொண்டாலும்,
மறைய முடியுமா!
என் நினைவுகளிலிருந்து।
$$$$$$$$6 $$$$$$$$$

மகிழ்ச்சி வெள்ளத்தில்
********************

புகைவண்டியும்
உற்ச்சாகமாய்
கூப்பாடு போடுகிறது
உங்களை கண்டதும்।
%%%%%%7%%%%%%%

சிறுவன்
********

ஓடும்
புகைவண்டி
நிழலில்
குதித்து கொண்டிருந்தான்।

பெட்டிகளின்
இணைப்பு
வெளிச்சத்தில்
தடுக்கி விழாமலிருக்க।
%%%%%%%8%%%%%%%

பெறுவேன் வெற்றி
********************

பலரும்
சொற்களை
எதிரொலித்தனர்
அட்டி மலைகளிலே।

நானும்
எதிரொலித்தேன்
என்
மனத்துள்ளே।
++++9+++++

நானே!!
*******

அடைந்தேன்
பித்தம்
உன் மீது
நான்।

ஆனேன்
பைத்தியம்
உன்னால்
நான்।
++++10++++

அன்பே! அன்பே!!

அன்பே! உன்னை,
கட்டாயப் படுத்தி
வாங்க முடியாது।

அன்பே! உன்னை,
மிரட்டி
பெற முடியாது।

அன்பே! உன்னை,
அடித்து
பிடுங்க முடியாது।

ஆனால்
விலை மதிப்பிட முடியா
அன்பே! உன்னை,

பெற முடியும்
அன்பை மட்டுமே
உனக்குக் கொடுத்து.

Sunday, November 25, 2007

வாழ்த்துப்பா !!!

தள்ளாட்டம் காட்டுது
முதுமை உடலினிலே।

ததும்பி நிற்குது
புன்னகை முகத்தினிலே।

தாயின் அன்பைக் கண்டேன்
உங்கள் வாக்கினிலே।

பழுத்த பழமாய் இருந்தாலும்
பருவமங்கையாய் செயல் புரிந்து,

செய்யும் பணி சிறந்திடவே,
செயலாற்றி முடித்தீர் விரைவாக।

தெய்வங்கள் எல்லாம் வானுறைய,
நீங்களே இதயத்தில் நிறைந்திருக்க,

இனியச்சொற்கள் பல இருக்க,
இந்த சொற்களில் பொய் இல்லை।

புகழ்ச்சிக்காக எழுதவில்லை,
மனத்தில் உள்ளதை எழுதிவிட்டேன்.




Saturday, November 24, 2007

உன் வாய் இசையில் !!

கால்களோ நடனமிட,
கைகளோ தாளமிட,
செவிகளோ விரைத்துக் கொள்ள,
கண்களோ கிறக்கம் கொள்ள,
மனத்திலுள்ள புன்னகையோ
முகத்திலே வழிந்தோட,
உன் வாய் இசையில்
மயங்கி விட்டேன்

தெளிய வைக்க
விருப்பமின்றி.

காதல் படுத்தும்பாடு...

வைத்தனர் பந்தயம்
காதலை அறிய।

பனிமலை வெளியிலே,
கடும் குளிரிலே,
விடியும் பொழுதிலே,
யார் முதலிலே,
கூவி அழைப்பவரே
வென்றவராவார் என்றே।

கைகளைக் கோர்த்தனர்,
உறுதி எடுத்தனர்,
படுக்கச் சென்றனர்,
நடக்கப் போவதை அறியாமல்।

காதலி எழுந்தாள்
விடியலை உணர்ந்தள்
வெளியே விரைந்தாள்
காதலைக் கூவ।

அங்கவனைக் கண்டள்
ஆறாமையுடன் நின்றாள்
காதலில் தோற்றல் இல்லையென
ஆனந்தம் கொண்டாள்।

அவனை அணைத்து
கொண்டாட நினைத்தாள்
மென்நடைப் பயின்றாள்
தொட்டணைத்து உருண்டாள்
மகிழ்ச்சியைக் காட்டி।

அவனும் உருண்டான்
அவளுடன் இணைந்து
உயிரற்ற உடலாய்
பனியிலே உறைந்து.

மறக்காமல்

மனத்திலே வெறுமை,
வார்த்தைகளைத் தேடுகிறேன்।

பகலென்ன, இரவென்ன
பார்வையில்லாதவனுக்கு।

இழந்து விட்டேன் முழுமையாய்,
தவற விட்டதை மீட்கமுடியாமல்।

ஆனாலும் மறக்காமல் மறுபடியும்
மனந்திறந்து இயம்பி விட்டேன்.

ஹர ஹர மஹா தேவா.......... !!!!

உலகைக் காக்க
முடிவை செய்தார்।

கிரிதனை எடுத்தார்
மத்தாக வைத்தார்।

சேஷனை நினைத்தார்
கயிறாக பிடித்தார்।

அமிர்தத்தைப் பெறவே
கடலைக் கடைந்தார்।

வேதனையில் பாம்போ,
விசத்தை சிந்த ( கக்க)

அமிர்தத்தை மீட்க
விசமதை உண்டார்।

விருப்பமுடன் ஏற்றார்
விருந்தெனெக் கொண்டார்।

கழுத்திலே வைத்தார்
நீலகண்டன் ஆனார்।

அமிர்தத்தை உண்டவர்
தேவரவர் ஆனார்।

சரணம் அடைவோம்
நலமுடன் வாழ।

கிருத்திகை நாளில்
மீண்டும் பணிவோம்.

Tuesday, October 30, 2007

ஒழுகுமே

ஒவ்வொரு துளியும்
ஒரு கதைச் சொல்ல
ஒப்புமையில்லா நிசமாக
ஒய்யாரமாய் உன் குரலோசை
ஒழுகுமே தேன் சுவையாய்।

ஒலிப்பெருக்கி வாய் மூலம்
ஒலி வாங்கி செவி வழியே
ஓய்ந்திருக்கும் நாட்களெல்லாம்
ஒப்பனைகள் ஏதுமின்றி
ஒலியலைகள் சென்றடையும்
ஓய்வின்றி நம்மிடையே !.

Thursday, October 4, 2007

ஆதரவற்ற மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு, வேலைவாய்ப்பு.

தமிழ்நாடு. சென்னை, கிண்டியைச் சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு உட்பட்ட, 150 ஆதரவற்ற மற்றும் உடல் ஊனமுற்றுள்ள சகோதர,சகோதரிகளுக்கு வேலைவாய்ப்பு. உடனே தொடர்புக் கொண்டு பயன் பெறும்படியும் மற்றும் தெரிந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து உதவும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு:: தகவல் கொடுத்துதவிய Ms.நிரஞ்சனாவுக்கு நன்றிகள்.

அன்புடன்,
தவப்புதல்வன்.

Friends,
Here is an opportunity to help Orphans / Poor Women and give
them a Strong Support for their livelihood. If you know any Orphan woman
or Poor women with below mentioned critieria please do reply immediately
to
Deepankarthik_RengaDoss@mindtree.com ... in case if you know any
potential contact who could bring in such persons please mail those
details too .

Dear Sir,

I am the Manager of Maruwa Electronic ( India ) Pvt Ltd.

We are doing Chip Indu ctor Manufacturing in Ekkaduthangal.

We are looking for Unmarried Girls / Boys for our assembly Process.

Qualification : S.S.L.C / + 2 Pass/ Fail ( Physically Challanged
Persons)

Salary : Rs.3000 in hand + Free Food

Requirement : 150

Preferable Area : 10 km radius from Guindy , Chennai

I request you to refer some Peoples who meets the above Criteria.


Regards
Amal.
Manager
Maruwa Electronic Ltd._._,_.___



Thanks and Regards,
Venkataramanan.S| IT Ops Executive (IT IS) |Cognizant Technology Solutions | MVC| Coimbatore
V.Net : 404324|Direct :+91 422 3984324|Mobile : +91 9944033117

Friday, September 21, 2007

வாழ்த்தினோம் உவந்தே.

வெல்லும் வேகம்
வெள்ளம் போல
வென்றது கண்டு
கொண்டது உள்ளம்.
மகிழ்விலே ரத்தம்
உச்சியிலிருந்து
பாதம் வரையும்,
பாயும் நேரம்
தோன்றும் இன்பம்.
உடலே சிலிர்த்து,
கண்ணம் உருண்டு,
முகமும் சிவக்கும்.
கைகளும் முறுக்கி
உதறிக் கொள்ளும்.
வாயும் திறந்து
கீதம் பாடும்.
கால்களும் குதித்து
முரசு கொட்டும்.
தொடர்ந்தே வென்று
உந்தன் பெயரை
நாட்டிக் கொள்க.

ஓ...... வெண்ணிலவே !!

நீ தேய்வதை
பார்க்கும் போது
வருத்தமும்,
நீ வளர்வதை
கானும் போது
மகிழ்ச்சியும்
அடைந்த நான்.
இப்பொழுதோ
தொடர்ந்து வருத்தத்திலே.
ஏனென்றால்
என் பார்வையே
தொலைந்து விட்டதால்.

அறிந்தேன் !!!

விதி தான் நமக்கு
விதித்து இதுவென
விதியை நொந்து
விசனத்தால் மனம்
விதிர்த்திருந்தேன்.

மதியால் வெல்லும்
மதிதான் நமக்கு
மதிப்பைத் தரும்
மதியை உணர்ந்தேன்
மகிழ்வுடன் நானே.

Thursday, September 20, 2007

எல்லாமே காதல்.

அன்பும் ஒரு காதலே.
ஆசையும் ஒரு காதலே.
பாசமும் ஒரு காதலே.
பற்றும் ஒரு காதலே.
நட்பும் ஒரு காதலே.
நாடலும் ஒரு காதலே.
உள்ளத்தைத் தொடும் காதல்.
உயிரையும் கொடுக்கும் காதல்.
உயிரையும் வாங்கும் காதல்.
உற்சாகம் தரும் காதல்.
நீந்த வைக்கும் காதல்.
நீர்த்து போகும் காதல்.
மூழ்கடிக்கும் காதல்.
மூச்சை முட்டும் காதல்.
பொங்கி வழியும் காதல்.
பொல்லா அரக்கக் காதல்.
உறவாட முயலுமே காதல்.
உறவை முறிக்குமோ காதல்.
வாழச் செய்யுமோ காதல்.
வழுக்கிச் செல்லுமோ காதல்.
துள்ளச் செய்யுமே காதல்.
துவளவும் செய்யும் காதல்.
துடிக்க செய்யுமே காதல்.
துன்பத்தையும் தருமே காதல்.
ஆட்டிப் படைக்கும் காதல்.
ஆறா எண்ணக் காதல்.
ஆறுமோ மனக் காதல்.
மறையுமோ வெட்கக்காதல்.
மறைக்குமோ அச்சக்காதல்.
வாய் சொல்லா மனக்காதலை
சொல்லுமோ
கண்கள் காதல்.
அறிய முடியா காதலால்
தவித்தேன்  காதலால்.
அறிந்தாயா  காதலை
உரைப்பாயா  காதலை.

Wednesday, September 19, 2007

நகைக்கின்ற உறவுகள்

ஏக்கத்தின் பிடியிலே நாமிருக்க,
நாட்களோ செல்கிறது மெதுவாக.
மனமோ எண்ணுகிறது விரைவாக.
காலம் கடத்தினேன் உனை நினைத்தே.
மகிழ்ச்சியெனும் மழை வெள்ளம்
மனத்தினிலே சேர்த்திடுவோம்.
ஆர்பரிக்கும் மகிழ்ச்சியைத் தான்
அணைக்கட்டி சேர்த்திடுவோம்.
சேர்ந்திருக்கும் நினைவுகளை
காத்திடுவோம் என்றென்றும்.
இன்பமாய் இருந்திடவே
பாய்ச்சிடுவோம் சிதறாமல்.
இன்றிருக்கும் நிலையினிலே
தொலைப்பேசி உதவியின்றி,
தொடர்புக் கொள்ள வழியின்றி,
தவிக்கின்ற நமைக் கண்டு,
நகைக்கின்ற உறவுகளை,
பொருட்படுத்திக் கொள்ளாமல்,
இணைகின்ற காலம் வரை,
இன்புற்றிருப்போம் இதன் வழியே
இணைப்புகளை இணைத்திருந்து.


Tuesday, September 18, 2007

எரித்து விடாதே.......

ஒத்திகை செய்தேன்
உனைக் கண்டதும் பேச.
ஏனோ தெரியவில்லை
வரத்துடித்த வார்த்தைகள்
தொண்டையுடன் திரும்பியது
மீண்டும் இதயத்திற்கே.
மெய் மறந்தேன்- உன்
புற அழகைப் பார்த்து.
ரசித்திருந்தேன் - உன்
அக அழகை உணர்ந்து.
ஏனோ தவறிவிட்டேன்
எனை அறியச் செய்ய.
கருத்தொன்றை வைத்திருப்பாய்
எனைப் பற்றி.
நான் அறியச் செய்வாயா
மனம் திறந்து.
விருப்பமொன்று இருந்தாலும்
பேசவோ மறுக்கின்றாய்.
அறியாதவளாய் நடிக்கின்றாய்.
வழுக்கித்தான் செல்கின்றாய்.
பட்டியலாய் இருக்குமோ
குற்றங்கள் என் மீதும்.
காதலைச் சொல்லியா..
தவறிழைத்தேன்.
கருத்திருந்தால்
தயங்காமல் சொல்லிவிடு.
காக்க வைத்து
எனை எரித்து விடாதே.
தூக்கிப் போட்டு
எனைக் கொன்று விடாதே.
விருப்பமென்றால்
சொல்லி விடு விரைவாக.
ஊஞ்சலிட்டு ஆட்டிக் கொள்வோம்
நம்மை மகிழ்வாக.

முனகல்கள்

உன்னைக் கண் கொண்டு
காண முடியாதவாறு
என் கண்கள்
ஒட்டப் பட்டுவிட்டன.

உன் மகிழ்விலும், ஏக்கத்திலும்
பங்கு கொள்ள முடியாதவாறு
என் வாய்
தைக்கப் பட்டுவிட்டது.

உன் கண்ணிரை துடைக்கவோ,
பாராட்டவோ முடியாதவாறு
என் கைகள்
கட்டப் பட்டுவிட்டது.

ஆனாலும் உன் சிறு அசைவும்
என் காதுகளை விடைக்கச் செய்து,
மகிழ்விலும், வருத்தத்திலும்
கண்ணீர் கசிவதை
நீ அறிவாயா ?

என் முனகல்கள்
எனக்கே கேட்காத போது
உனக்கெங்கே
கேட்கப் போகிறது ?.

Monday, September 17, 2007

ஓ... நிலவே !!!

ஒளிந்திருந்து பார்க்கிறாயா
படுத்துறங்கும்
என்னவளின்
ஒய்யார அழகை.

உன் ஓராயிரம் ஒளிக்கற்றைகள்
அவள் மெய்யழகை துளாவ,
தவிக்கின்றேன் நான்
உன்னை அனுமதிக்கும்
கூறையின் ஓட்டைகளை
அடைக்க முடியாமல்.


நொடியிலே....

இருக்கும் நீ
இல்லை அடுத்த நொடியிலே.

உன் துடிப்போ
இயற்க்கையின் பிடியிலே.

முடிவின் விளிம்பிலே
மீண்டார் பலர் அருளிலே.

உச்சியிலே இருந்தோர்
தலைகணத்தால்
வீழ்ந்தார் அறியா மடுவிலே.

Saturday, September 15, 2007

கணபதியே ! வரமதை அருள்வாயே .

செய்யும் செயலின்
விரைவைக் கருதி
முடிவதை எடுத்து
கருத்தேனக் கொண்டார்.

கொள்ளும் எண்ணம்
சிதறா வண்ணம்
செயலைச் செய்ய
புத்துருக் கொடுத்தார்.

முதலென வரவே
நலமதை நினைத்து
வலமதைக் கொண்டார்,
நினைத்ததை முடித்தார்.

வாழ்வெனக் கொண்டால்
போட்டியது உண்டு.
வெற்றியதில் அடைய
விவேகமுடன் உழைப்பீர்.

நாடும் வீடும்
நலமது பெறவே
வழிதனை அறிய
பணிவுடன் பணிந்து
கணபதியைத் துதிப்பீர்.

Tuesday, September 11, 2007

மனமிருந்தால்...

ஒப்பந்தமாய் இருந்தேனோ ?
ஓர் பந்தமாய் வந்தாயோ ?
ஒப்பற்று போனேனோ ?
ஒப்பேற்றிக் கொண்டாயோ ?

நாள் பொழுது போகுமோ ?
இனிமை எங்கு போனதோ ?
தடையேதும் ஒன்றுமில்லை,
செயல்படுத்த நினைத்து விட்டால்.


தேடிச் செல்ல தேவையில்லை,
நமக்குள் இருக்கும் அன்புதனை.
வருத்தம் என்றும் வாராதே,
அறிய செய்ய மனமிருந்தால்.

உன்னிடமும்....

உன் வார்த்தையைக் கேட்கின்றேன்
நான் நிசமென நம்புகின்றேன்.
உன் செயலைப் பார்க்கின்றேன்.
பொய்யை உணர்கின்றேன்.
கண்ணால் கண்டதும் பொய்,
காதால் கேட்டதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய்.
விசாரிக்கும் போது
நழுவுகிறாயே வாலைமீனாய்.
வென்று விட்டாய் நீ.
தோற்று விட்டேன் உன்னிடமும்,
தோல்விகளையே சந்திக்கும் நான்.

Monday, September 10, 2007

பாரதியார் நினைவு நாளில் கவிச்சிந்தனை !

சிந்தனையில் சிறுபொழுதே
சிக்கியிருந்த வேலையிலே
நினைவினிலே வந்தாய்.
நினைத்துனைப் பாட
எழவில்லை நாவும்
எழுத்திலேக் கொட்ட
எட்டாக் கனியாய் நீயும்
ஏந்திய கையாய் நானும்.
கவிதைக்கு நீயும் ஒரு அரசன்
கவிதையிலே நானோர் ஆண்டி.
மழலைக்கு இல்லை மாற்று
அறிய செய்தது உன் கூற்று.
ஒன்றா, இரண்டா ஊட்டி விட்டாய்
எடுத்துச் சொல்லி உனைப் பாரட்ட.
உன் வாழ்விலே என்றும் துயரம்
இருப்பினும் கொடுத்தாய் வீரம்.
இன்றும் ஏனோ ஏறவில்லை
என்பதே துயரம்.
நல்லது செய்ய நினைத்திருந்தாய்
நலம்பட வாழ சொல்லிச் சென்றாய்.
நிலைக்கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்
அன்றே வேகா உன் நெஞ்சம்
என்னவாகுமோ நீ இன்று இருந்திருந்தால் !
என் எழுத்திலே வேண்டும்
உம் இதயம்.
உமையின்றி யார் தருவார்
வாழ்விலே சலனம்.
நினைத்துருகி நிற்கின்றேன்
உம் நினைவு நாளிதிலே.
பின் குறிப்பு:: கவி.பாரதியாரின் நினைவு நாள் செப்டம்பர் 11 ம் தேதி.

Saturday, September 8, 2007

விழிகளே ! விழிகளே !!

விழிகளே ! விழிகளே !!
என்றும் நிலைத்திருங்கள்.

மதி இழந்தபோது
சபித்திருப்பேன்,
ஒளி இழந்து போகட்டும்
என் விழிகளென்று.

இன்றோ உணர்கின்றேன்
என்னுயிர் பிரிந்தாலும்,
விழிகளே நிலைத்திருங்கள்
இருவர் வாழ்வொளிப் பெற்றிடவே.

Monday, September 3, 2007

மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !

உன்னை கண்ட
கண்களுக்கு மகிழ்ச்சி
இக்கோலத்தில் பார்த்ததால்.

நாசிக்கும் மகிழ்ச்சி
உன் சுகந்தத்தை
நுகர்ந்ததால்.

உதடுகளுக்கும் மகிழ்ச்சி
உன் மென்மையை
அறிந்ததால்.

உன்னை வாரி அணைத்த
கைகளுக்கும் மகிழ்ச்சி-நீ
நெருக்கத்தைக் காட்டியதால்.

என் மனத்துக்கும்
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி
இத்தனையும்
உணர்ந்ததால்.

முதல் முதலில்.......

எனைக் கண்ட
முதல் நாளை
உணர்ந்திருப்பாய்
நெஞ்சமோ படபடக்க.

என் மீதான
முதல் பார்வையை
பதித்திருப்பாய்
இமைகளோ துடிதுடிக்க.

எனைப் பார்க்க
வந்திருப்பாய்
கால்களோ
பின்னலிட.

என்னிடம்
பேச நினைத்திருப்பாய்
மேலண்ணத்தில் நா
ஒட்டிக் கொள்ள.

இன்றோ
நாம் ஒருவரானோம்
அத்தனையும்
விலக்கி விட்டு.

Sunday, August 26, 2007

காசுப் போட்டு..

காசுப் போட்டு
செலவழித்து
நீரை வாங்கி
குளித்தனர், குடித்தனர்
இலவசமாய் கிடைத்த
நீர்நிலையை அழித்து விட்டு.

இயற்கையாய்
கிடைக்கும் நீரை
வீனாய் ஓட விட்டு,
சிறுதுளி பெருவெள்ளம்
மழைநீரை சேமிப்பீர்
விளம்பரம் செய்தனர்
வீனாய் செலவு செய்து.

விளம்பரம் ஒவ்வொன்றும்
பல லட்சம் பெறும்.
நீர்நிலையை மேன்படுத்த,
ஊருக்கு ஒன்றாய்
சில லட்சமெனசெலவழித்தால்,
நிச்சயம் வளம் பெரும்.

கூறு போ(கெ)ட்டவர்கள் !

குடிநீர் குளத்தை!
குப்பை மேடாக்கினர்
குடிநீர் தேவையை மறந்து.
குளமிருந்த இடத்தை
கூறுப் போட்டனர்
குடியிருக்க என்று.

குடிநீரின்றி
குடத்தைத் தூக்கிக் கொண்டு,
குவிந்து விட்டனர்,
குடிநீர் வண்டியை
குறி வைத்து.

குறித்த நேரமின்றி
குப்பையாய் வந்த நீரை,
குடிநீர் தேவையால்
குடித்தனர் வடித்தும் வடிக்காமலும்.
குற்றம் சுமத்தினர்
குடிநீர் இல்லையென்று
கூறுப்போட்டவரை மறந்துவிட்டு.

ஏற்றமா? ஏமாற்றமா?

ஓ....!!! நேற்று மாலை சுமார் 4.30 மணி அளவில் எம் வீட்டிலே, பூங்காற்று நுழைந்தது. உணருமுன்னே, புயற்காற்றாய் பிரிந்தது எமை விட்டு. ஆமாம், அது வேறொன்னுமில்லைங்க. வலைநண்பர்.திரு.பாலசுப்ரமணியம் கணபதி @ G.கிருக்கன் அவர்கள், (Composetamil.com)படைப்பாளிகள், வாசகர்களில் சிலராவது, அவரது படைப்புகளையும்,விமர்சனைகளையும் மற்றும் 2 Blogsயும் வாசித்து இருப்பீர்கள், அவர் முன்கூட்டியே அனுமதி பெற்று, மைசூர் ஹூப்ளியிலிருந்து எம்மை சந்திக்க வந்திருந்தார். இவ்வளவு தூரம் நம்மைத் தேடி ஒருவர் வந்திருக்கிறாரே, என்ற மகிழ்ச்சியை மனது உணர்ந்து, நிரப்பிக் கொள்ளும் முன்பாகவே,நேரமின்மையைக் காரணம் காட்டி, சில நிமிடத்துளிகளில் விடைப்பெற்றது, ஏமற்றத்துடன் ஏக்கமும் அடையசெய்தது.

எனது படைப்புகளை உடனுக்குடன் அலசுபவர்களில் இவரும் முக்கியமானவர். நிமிடத்துளிகளில் விடைப்பெற்றதால், நினைத்த எண்ணங்கள் கரைந்தது மனத்துக்குள்ளே. இவ்வளவு ஏமாற்றம் இருந்தாலும், அறிமுகப்படுத்திக் கொள்ள நேரில் சந்திக்க வந்ததை ஏற்றமாகவே கருதுகிறேன். இதன் மூலம் என் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்கிறேன்.

Saturday, August 25, 2007

தேடத் தேவையில்லை

ஒப்பந்தமாய் இருந்தேனோ ?
ஓர் பந்தமாய் வந்தாயோ?
ஒப்பற்று போனேனோ?
ஒப்பேற்றிக் கொண்டாயோ?

நாள் பொழுது போகுமோ?
இனிமை எங்கு போனதோ?
செயல்படுத்த நினைத்துவிட்டால்,
தடையேதும் ஒன்றுமில்லை.

நமக்குள் இருக்கும் அன்புதனை
தேடிச்செல்லத் தேவையில்லை.
அறிய செய்ய மனமிருந்தால்
வருத்தம் என்றும் வாராதே.

புலம்பல் !

உன் வார்த்தையைக் கேட்கின்றேன்,
நிசமென்று நம்புகின்றேன்.
உன் செயலைப் பார்க்கின்றேன்.
பொய்யை உணர்கின்றேன்.
கண்ணால் கண்டதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய்.
விசாரிக்கும் போது
நழுவுகிறாயே வாலைமீனாய்.
வென்று விட்டாய் நீ.
தோற்று விட்டேன் உன்னிடமும்
தோல்விகளையே சந்திக்கும் நான்.

Friday, August 24, 2007

ஹைக்கூ கவிதைகள்....

இதயம்
^^^^^

இதயம் இருக்கிறது
மனத்தைப் படிக்க.
வார்த்தைகள் இல்லை
வடித்துத் தர.
---------------

இரவு திருடர்
^^^^^^^^

உண்டிடுவார், உறங்கிடுவார்
பகல் பொழுதினிலே.
விழித்திருப்பார், சென்றிடுவார்
இராப்பொழுதினிலே.
---------------------

ஸ்வர ஜுரம்
^^^^^^^^

இசைமழையில் நனைந்தேன்
ஸ்வர சு(ஜு)ரத்தால்.
மழை நின்றது
சு(ஜு)ரமும் அதிகமானது.
காத்திருக்கிறேன்-மீண்டும்
இசைமழையில் நனைந்திடவே.
-----------------------

நினைத்துப் பார்
^^^^^^^^^^^
என்ன என்று
எப்படி என்று
நினைத்துப் பார்
உன் மனத்துக்குள்ளே.

அறிந்துக் கொண்டால்,
செய்து முடித்து
வெற்றிப் பெறலாம்
நினைத்து விட்டால்.
---------------

துடிப்பு
^^^^^
துடிக்கின்றான் நோயாளி
நோயின் வலியினால்.
துடிக்கின்றார் குடும்பத்தார்
விரைவில் குனமடைய.
துடிக்கின்றனர் செவிலியர்
இயந்திர கதியில்.
துடிக்கின்றார் மருத்துவர்
துயரை நீக்க.
-----------------

ரோஜா காதல்
^^^^^^^^^^
காதல் என்பது
ரோஜாவை போல.
அழகை நினைத்து
தவறாகி விட்டால்,
அதிகமாயிருக்கும்
முட்களின் வலி,
ரோஜா இதழ்களின்
மென்மையை விட.
--------------

Wednesday, August 22, 2007

கறைகள் கலையுமா ?

பொருப்பிலும் கையூட்டை எதிர்பார்த்து,
பெறுவதில் கண்ணாக,
கடமையையும் தவறவிட்டு,
விபரீதம் பல புரிந்து,
வீணர்களாய் வாழ்கின்றார்.
வீரர்களாய் இல்லாமல்.
கற்றுத் தந்த பாடங்கள் காற்றிலோட,
களவாட கற்றுக் கொண்டார்,
காக்க வேண்டிய இடத்திலிருந்தும்.

பொருள் ஒன்றே குறியாக
பொறுப்பு அதுவே தமதென
பொறுப்புகளைத் தள்ளி விட்டு
பொறுப்பின்றி பணிகளை
புறந்தள்ளி வைத்து விட்டு
காலம் தள்ளும் போக்கிலே
கவலையின்றி செயல்பட்டு
காலந்தனை காட்டி விட்டு
கடமைகளை நிறுத்தி விட்டு
கலைந்துத்தான் செல்கின்றார்
காரிய ஆலயத்திலிருந்தே.

மாசுக் கொண்ட மனங்கண்டு
இரத்தம் சிந்தும் நல்லிதயங்கள்
இன்றும் பல இருந்தாலும்
மாசுக் கொண்ட மனங்களினால்
பரந்துள்ள பாரதத்தின்
விரிந்துள்ள காட்சிகளில்
கறைப் படிந்த இடங்களே
பளிச்சென்று தெரிகிறது.

இந்த நிலை மறையுமோ
என்று தான் மாறுமோ
கொடுப்பதிலும் பெறுவதிலும்
இல்லையென்ற நிலையினையே
இக்கணமே உறுதியினைக் கொள்வீரே.
ஏக்கத்தின் கீழிருக்கும்
பாரதத்தின் புதல்வர்களே !
பாரெங்கும் புகழ் பாடும்
உம் செயல் படுத்தும் முடிவு கண்டு.

Tuesday, August 21, 2007

ஹைக்கூ கவிதைகள்....

நான் !
****

பறக்க நினைக்கும்
சிறகொடிந்த பறவை
நான்
நகரக்கூட முடியவில்லை
விதியின் காலடியில்.
++++++++++++++++

நீ...!!
*****

நீ இருப்பதைப் பார்த்தாலும்
நீ இல்லாத்தை அறிகின்றேன்.
நீ இல்லாத்தை உணர்ந்தாலும்
நீ இருப்பதாக நினைக்கின்றேன்.
+++++++++++++++++++++++

வானமே !
********

ஓ... உருவமில்லாதவனே !
வர்ணங்களை எப்படித்தான்
வாரிப்பூசிக் கொள்கிறாயோ ?
+++++++++++++++++++

இல்லை !
*******

நான் சொல்லித்தான்
புரிந்து கொள்ள
போவதில்லை.

நான் சொல்லாமல்
நீ அறியாமல்
போவதுமில்லை.
++++++++++++++

அவசரக் காதல்
**********

கண்ணும் கண்ணும் கண்டதும்
காதல் வந்தது.
காதல் வந்த நொடியிலே
புன்னகை மலர்ந்தது.
மலர்ந்த புன்னகை மறையுமுன்னே
பிரிவு வந்தது.
+++++++++++++++++++++++

தவறவிட்டேன்.
**********

காத்திருந்த நான்
கலந்துக் கொள்ள தவறிவிட்டேன்
கவிதைப் போட்டியில் தான்.
++++++++++++++++++++

என் நாட்கள்
+++++++++

ஒலியின்றி தான்
ஒளிர்கிறது மனத்திலே
ஒழிந்த என் நாட்கள்.
++++++++++++++

Sunday, August 19, 2007

இலட்சியப் பயணம் !

இடுப்பிலே ஒன்று
வயிற்றிலே ஒன்று
வாழ்க்கைப் பயணம்
மேற்க்கொண்டாள்
அவன் மனைவி,
நோய்வாய்ப் பட்ட
கணவனையும்
சுமந்துக் கொண்டு.

நாம் !

நாடினேன் உன்னை
நாடினாய் என்னை.

கூடினோம் நாம்
கூட்டத்தான் குடும்பத்தை.

நாடினோம் மூத்தவரை
வாழ்த்துக்களைப் பெறத்தான்.

நாடினோம் இறைவனை
வளங்களைக் கேட்கத்தான்.

Tuesday, August 14, 2007

இந்திய சுதந்திர தின வைரவிழா வாழ்த்து.-2007

சுதந்திரத்தை
நீ அடைய
காணிக்கையாய்,
தமை அளித்தார்
முத்துக்களாய்
நீ அணிய.

அணிந்த நீயும் பெருமைக்
கொள்ளும் நேரத்திலே,
உமை சிறுமைப் படுத்த
சிலர் நுழைந்தார்,
போலிகளாய்.

முத்துக்களால் பளப்பளத்த
நீயும் இன்று,
பொழிவிழந்து இருக்கின்றாய்.
உன் அழகு
என்றென்றும் நிலைத்திருக்க
பக்குவமாய் போலிகளை
களைந்து விடு.

காலத்தின் வேகத்தால்
துண்டுகளாய், மீண்டும்
நீ உடையாமல்,
உமைக் காக்க
எமக்கருளைத் தந்துவிடு.

பெற்றெடுத்தத் தாயை
முதல் நினைத்தோம்.
வாழ்வளித்த
உம் பாதங்களை
யாம் பணிந்தோம்.

கருத்துக்கள்
பலவாறு
தானிருக்க.
அத்தனையும்
வெளியிட
இடங்கொடுத்தாய்.

அன்று கூறுகளாய்
சிதைந்திருந்த உனைத் தானே
ஒன்று சேர்த்து
அழகு பார்த்தார்
சித்தர்களாய்.

இன்றோ நிலைக்கெட்ட
மனிதர்களால்,
உனைத்தானே
கூறுப்போட நினைக்கின்றார்
சிதைத்துத் தானே.

அஞ்சி அஞ்சி சாகின்றோம்
நடக்கின்ற கொடுமைக் கண்டு.
அஞ்சாமல் செய்கின்றார்
தமை மட்டும்
மனத்தில் கொண்டு.

உலகுக்கே பாடங்களை
நீ கொடுத்தாய்.
நீ கொடுத்த பாடங்களை
என்றுதான்
புரிந்துக் கொள்வார்.

பட்ட காலில் மீண்டும்
படுமென்பாரம்மா.
அந்த வேதனை மீண்டும்
எமக்கு வேண்டாமம்மா.

எத்தனையோ இன்னல்கள்
இடையிடையே வந்தாலுமே,
உனை சிறுக சிறுக
அழகு படுத்தி வருகின்றோம்.

சிறு அழகு பெற்றிட
ஆண்டுகள் அறுபதாமே,
நீ பேரழகு பெற்றிட
எத்தனை நாளோ.

உமை நினைத்து, நாங்களும்
பெருமைக் கொண்டு,
தொடர்ந்து நாங்கள்
மகிழ்வுடனே இருந்திடவே,
என்றும் நீயும்
சுதந்திரமாய் இருந்திடுக
என்றே நாங்களும்
வாழ்த்திக் கொள்வோம்
வாழ்த்துகளை,
எமக்கு நாமே.

Sunday, August 12, 2007

ஹைக்கூ கவிதைகள்....

காதலால் !
********


வண்ணக்கனவுகள்
கண்டேன் அன்று.
ஆனால்,
காணுகிறேன் இன்றோ
கருப்புக் கனவுகளை.
###############

உலகத்திலே..
***********

மோசக்காரனாய்
பெயரெடுத்தேன்,
உன்னை காதலித்ததால்.
@@@@@@@@@@@@@

சொல்லட்டுமா ?
************

மொழிகள் பகர்வதற்கே !
விழிகள் பயில்வதற்கே !!
கைகள் படைப்பதற்கே !!!
ஆனால்
தூக்கம் பாழ்படுத்த அல்ல.
$$$$$$$$$$$$$$$$$$$$

வானமே !

வெள்ளையாய், நீலமாய்,
செம்பஞ்சு குழம்பாய்,
கருமையாய்
வர்ணங்களை
பிரித்தும், இணைத்தும்
வானவில்லாய்
உன்னில் வித்தைக் காட்டி
வானமே வேடிக்கைக் காட்டுகிறாய்,
வான வேடிக்கையாய் காட்டுகிறாய்.

Wednesday, August 8, 2007

ஹைக்கூ கவிதைகள்....

நான்
%%%%

குளம்பி விட்டேன்
குளப்பி விட்டேன்
மனம் தெளிவதற்கு
நாரதராய் நான்.
################

நீ.நீ..நீ....
%%%%%%%

நல்லவன் என்றோ,
வல்லவன் என்றோ
சொன்னதில்லை நான்
ஆனால்
சொல்கிறாய் நீ...
மோசமானவன் என்று.
##################

முத்தங்கள்
%%%%%%

நீ தந்தது
என்னில்
ஐஸ்கட்டிகளாய்.

குளிர்பானமாய்
நான் தந்ததையே
திருப்பித் தந்தாயோ
ஐஸ்கட்டிகளாய்.
################

மாயக்கண்ணாடி
%%%%%%%%

நான் சிரித்தால்
நீயும் சிரிக்கிறாய்.
நான் அழுதால்
நீயும் அழுகிறாய்.
என் மனமென்ன
கண்ணாடியா
எதிரொளிப்பதற்கு.
###############

அரவணைப்பினால்
%%%%%%%%%

உன்னிடத்தில்
விழுந்த நான்
எழ முடியவில்லை
அடிப்பட்டதால் அல்ல.
#################

காண முடியவில்லை
%%%%%%%%%%%

அன்று விதையாய்
இன்று மரமாய்
முழுமையாய்
காண முடியவில்லை.
என் இதயத்தில்
நீ அடர்ந்து
வளர்ந்து இருப்பதால்.
##################

கை தேர்ந்தவள்
%%%%%%%%

நினைத்திருந்தேன்
கபடமற்றவள்,
கள்ளமில்லாதவளென
அறிந்து கொண்டேன்
உன் செயலால்
கை தேர்ந்தவள் நீயுமென.
#################

அத்தனையும்-- சி
%%%%%%%%%

அறிந்துக் கொள்ள பயிற்சி.
வெற்றிக் கொள்ள முயற்சி.
எடுக்க வேண்டும் தொடர்ச்சி.
இல்லையெனில் இகழ்ச்சி.
####################

Monday, July 30, 2007

காதல் மயக்கம்

என் இதயம் பறக்கிறதே
காற்றடைத்த பலூன் போல.
என்னை நீ ஏற்றதாலா,
உன் மனத்தை கொடுத்ததாலா.

நானறிவேன் உன் மனத்தை
உன் மனமும் எனைப் போல
பறக்கத் துடிக்கும்
என்னுடன் சேர்ந்திணைந்தே.

மகிழ்ச்சியால் விரிகிறது
விரிவதால் வலிக்கிறது
வலியிலும் இனிக்கிறது
தொடர வேண்டுமென்றுமே.

மகிழ்ச்சியால் கண்ணும்
பொழிகிறதே பனித்துளியாய்.
"எனோ நினைக்கிறது என் மனமும்,
இன்றே நாம் இணைந்தால் சுகமென்று."

அல்லது

"ஏனோ நினைக்கிறது என் மனமும்,
இக்கணமே இறந்தாலும் நலமென்று."

பின் குறிப்பு:: இக்கிளைமாஸ் மேற்காணூம் இரண்டு முடிவுகளில் எது நன்றாக உள்ளது ?. உங்கள் கருத்தை அறிய ஆவலுடன்.

Sunday, July 29, 2007

ஹைக்கூ கவிதைகள்....

நிஜம்
+++++

நோயாளியே !
மரித்துப்போ.
உன்னை விட,
உனக்காக உழைப்பவர்கள்
அதிகம் சிரமப்படுவதால்.
%%%%%%%%%%%%%

மறுப்பதற்கில்லை
++++++++++++++

நீயோ உரிமையென,
அவரோ இல்லையேன.
கொள்வாயோ ஏற்று
அல்லது
கொடுப்பாயோ விட்டு.
எதைக் கொண்டு வந்தாய்
அதை இழப்பதற்கு
இறைவனின் கூற்றுப்படி.
%%%%%%%%%%%%%

நடப்பு
+++++

பிறப்பை எடுத்தாய்
பிறப்பைக் கொடுப்பாய்.
அழிப்பதை நினைத்தால்,
அழித்தே போவாய்.
%%%%%%%%%%%%

தலைகணம்.

வானமே வசப்பட்டது
எனது அன்பினால்.
ஆனால் நீயோ,
வசப்படவில்லை என்னிடம்.
வீழ்ந்து விட்டேன் மடுவிலே,
தலைகணத்தினால்.
எழுந்து நிற்க தேடினேன்
தோள் அணைக்க.

ஓலமிட்டது !!....

தேனென கருதி
சுவைத்திட்டேன் விரும்பி.
கசந்ததை உணர்ந்தேன்
விஷமென அறிந்தேன்.
நாவது வரள,
உடலது துடிக்க,
உயிரது பிரியும்
நேரமது நெருங்க,
மனமோ ஓலமிட்டது
"ஐ லவ் யூ"
"ஐ லவ் யூ".

Friday, July 27, 2007

சொல்லித் தந்தாய் !

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேச
அறித்துக் கொள்ள நானே
செய்து விட்டாய் நீயே.

நானும் கீழே விழ,
எள்ளி நகையாட
செய்து விட்ட நீயே
சென்று விட்டாய் கானா.

என் நிலை அறிந்தே
வெதும்பியது மனமே.
இந்நிலை மாற்ற
எண்ணினேன் உடனே.

வெற்றிக் கொள்வேன்
எனை அறிய.
செய்திடுவேன்
நீ அறிய.

கொடுக்கிறேன் பங்கு

உங்கள் அழுகை
பிடிக்காது எனக்கு,
என் அழுகையே
அதிகாமாய் இருப்பதால்.

என்றும் நீங்கள்
மகிழ்ச்சியாய் இருங்கள்.
கொடுக்கிறேன் பங்கு
என் மகிழ்ச்சியையும்.

Wednesday, July 25, 2007

நட்பெனும் உறவிலே

மாபெரும் மரத்திலே,பறவை ஒன்று
தங்கி வாழ்ந்தது நாட்கள் சிலவே.

கலகலக்கும் குரலிசையால்
கலக்கியது இதயங்களை.

வந்த நேரம் மறையவில்லை.
கழிந்த நேரம் தெரியவில்லை.

செல்கிறது இறையைத் தேடி.
என்று வருமோ இம்மரத்தைத் தேடி.

Tuesday, July 24, 2007

பிரியமானவளே !........

எனைக் கொடுத்து
உனைத் திருட
நினைத்திருந்தேன்.
ஏற்கவில்லை
என் மனத்தை.
இழக்கவில்லை,
கொடுக்கவில்லை,
உன் மனத்தை.

நிறைக்குறை அளந்தேன்,
இருபுறமும்.
சமமென நினைத்தேன்
சரி தானே.
இல்லை, கொடுத்தாயா
உன் மனத்தை
வேறிடமே.அறியா நிலையுடனே
கேட்டேன் உன்னிடமே.

நட்பென கூறி
என் காதலையே
முறித்து விட்டாய்.
ஒருதலைக் காதலால்
துடித்து விட்டேன்.
நட்பொன்றே போதுமென
பிரிந்து விட்டாய்.
மனமொடிந்து விட்டேன்,
பிரிக்க முடியா காதலுடன்.

Sunday, July 22, 2007

அவளா ???...... இவள் !!!!!.......

நான் பிறந்ததைச் சொல்லவா ?
வளர்ந்ததைச் சொல்லவா ?
விழிகளில் விழுந்ததைச் சொல்லவா ?
காதல் மலர்ந்ததைச் சொல்லவா ?

அவளுடன் கழித்தைச் சொல்லவா ?
காதலுடன் கொஞ்சியதைச் சொல்லவா ?
சுற்றித் திரிந்ததைச் சொல்லவா ?
உலகை மறந்ததைச் சொல்லவா ?

உறவுகள் பிரிந்ததைச் சொல்லவா ?
உறக்கம் தொலைந்ததைச் சொல்லவா ?
சொல்லி விடுகிறேனே முதலில்
என் காதல் தோல்வியை.

நிலையற்ற நினைவுகளால்
சுற்றி வருகின்றேன்
நாங்களாய் இருந்து
நான் மட்டுமாய் இன்று.

சந்திக்கும் நேரம் தாமதமானால்
துடித்து துவழ்பவளா, இன்று !
கொஞ்ச செய்து, கெஞ்ச செய்து
தவிக்க விட்டவளா, இன்று !

சிரித்து, சிரிப்பூட்டி
சிரிக்கச் செய்தவளா, இன்று !
நேரங்கழித்து விடைப்பெற்றாலும்
வாட்டமடைபவளா, இன்று !

கண்கள் கிறங்க,
உடலைத் தழுவி,
கழுத்தை வளைத்து,
உதட்டைத் தேடி,
முத்தம் கொடுத்து,
கிளர்ச்சி ஊட்டியவளா,இன்று.

என்னுடை சிறிதே கசங்கினாலும்
வருந்துபவளா, இன்று !
கணநேரமே பிரிந்தாலும்
கண்ணீர் விடும் அவளால்,
கிழிந்த உடையாய், கலைந்த கோலமாய்
என் நிலைக்கு காரணமாய் இன்று.

அன்றொரு நாள், அவளோ
காத்திருக்க வைத்தாள்.
காலம் தாழ்த்தி வந்தாள்.
மகிழ்வுடனே சொன்னாள்.

வெளிநாட்டு மாப்பிள்ளையாம்,
கை நிறைய சம்பளமாம்,
சுகமான வாழ்வாம்,
இது அவள் இலட்சியமாம்.

அழைப்பிதழ் வந்திடுமாம்
வந்தவுடன் தருவாளாம்
என்றும் என் நினைவாக
பரிசுப் பொருள் தரச்சொல்லி,
கூறி விட்டு அவளும்
சென்று விட்டாள் விரைவாக.

படிப்பிருந்தும் வேலையில்லை,
வருவாயிக்கு வகையில்லை,
வாழ்க்கைக்கு வசதியில்லை,
இன்றுள்ள என் நிலையை,
சொல்லாமல் காட்டி விட்டு
அகன்று விட்டாள் அங்கிருந்து.

என் நிலை தெரிந்தாலும்,
கருத்தை அவள் கேட்கவில்லை.
என்னுடன் சேர்த்திணைத்து
கோட்டையைக் கட்டியவள்,
இன்றோ கட்டிவிட்டாள்
எனை வைத்து சமாதியாய்.
ஆனாலும் கற்பைக் காத்தேன்
அவளிடம் நான்.


Thursday, July 19, 2007

தலைப்பு.....!

தலைப்பே
தலைப்பாய் முன்னிருக்கும்


தலைப்பே
தலையாய் தானிருக்கும்.

தலையாக தானிருப்பான்
தலைவனாக தானிருப்பான்.

தலைப்பையிலிருந்து
தலையே முன்வரும் முதலாக.

தலைப்(பி)பையிலே அனைத்துமே
அடங்குமே உணர்வுகளாக.

Wednesday, July 18, 2007

கொஞ்சும் நேரமிது !!!

கொஞ்ச நேரமே
கொஞ்சித்தான் பார்த்திடவே
கொஞ்சும் நாளிதிலே
கொஞ்ச வருவேன்
கொஞ்சத்தான் உன்னிடமே.

கொஞ்சுகின்ற பார்வையெல்லாம்
கொஞ்சத்தான் சொல்லிடுமே.
கொஞ்சி குலவிடவே
கொஞ்சுகின்ற முகத்தோடு
கொஞ்சுகின்ற முடிவோடு
கொஞ்ச நாளிலே வந்து
கொஞ்சுவேன் நித்தமும் உனையே !!!.

Tuesday, July 17, 2007

நான் யார் ?

நான் யார்
உன் மீது கோபப்பட.

என்ன உரிமை
உன் மீது கோபப்பட.

உணர்வுகள் இருந்தால் தானே
உன் மீது கோபப்பட.

மேலும்
கோபம் இருந்தால் தானே
உன் மீது கோபப்பட.

Monday, July 16, 2007

என் அன்பே என்னவென்பேன்?....

எண்ண்ங்களின் வேகங்கள்
கட்டி வைத்த அணையினிலே
தேங்கியிருக்கும் நீர் போல,
பொங்கி வழிய வழியின்றி
அலைப்பாயும் வேலையிலே,
துடித்ததிரும் உதடுகளோ
சொற்களைப் பொருக்கிக் கொள்ள,
அடிக்கிக் கொள்ளும் இதயமோ
நிலையின்றி துடித்துக் கொள்ள,
விழிகளில் பூத்த மலர்
மனத்திலே தேன் சொறிய,
வாய் அசைத்த சொற்களெல்லாம்
செவிக் கேட்டு இருந்தாலும்,
ஏங்கி நிற்கும் கண்களுக்கு
எழுத்துருவில் அனுப்பி வைத்தேன்.

Sunday, July 15, 2007

ஹைக்கூ கவிதைகள்....

தனித்திருந்தேன்
விழித்திருந்தேன்
பசிக்கவில்லை
மனத்திலே நீ......!
@@@@@@@@@@@

என்று சந்திப்போமோ?
*********************
வட்டப் பாதையிலிருந்த
நாம்
நீள்வட்ட பாதையில்
இன்று
வெவ்வேறு திசையிலே.
##################

''சக்தி'' நீ...
''சிவ''மாய்
நெற்றிக்கண்
திறந்தாலும்
''சுந்தர''மாய்
இருக்கின்றாய்.
$$$$$$$$$$$$$$$

நீரிலா?
நிலத்திலா?
விண்ணிலா?
எங்கே?

தேடுகிறேன்
உன்னிடத்தில்
தொலைத்த
என் நினைவுகளை.
%%%%%%%%%%

நவரசம் காட்டும்
கவிதையும் - முகம்
திருப்பிக் கொண்டது
இன்று என்னிடம்.
&&&&&&&&&&&&&&

Thursday, July 12, 2007

மூழ்கி தான் இருப்போமே !!!

ஆளுகின்ற எண்ணங்களால்
மனமோ தத்தளிக்க.
தத்தளிக்கும் வேகத்தில்
கண்களில் நீர்துளிக்க.
துளித்த விழிநீரோ
நினைவுகளால் பூத்திருக்க.
பூத்திருக்கும் நினைவுகளோ
பசலையால் மூடுயிருக்க.
மூடியிருக்கும் உதடுகளோ
விழி கூறும் செய்திகளை
அள்ளவும் முடியாமல்
துள்ளுகின்ற வார்த்தைகளை
வார்த்தைகளாய் சொல்லாமல்.
எண்ணங்களின் வேகத்தால்
வாய் அடைத்துக் கொள்ளுமோ.
அடைத்துத்தான் கொள்ளாமல்
உளறித்தான் கொட்டுமோ.
கண் பேச்சுக்கும் வழியின்றி
ஒலிப்பேச்சைத் தொடர்ந்திருப்போம்
நாம் கூடுகின்ற நாள் நோக்கி.
கொட்டுகின்ற வார்த்தைகள்
மகிழ்சியின் வேகத்தால்
சிரிப்பலையில் மூழ்கியிருக்க
மூழ்கித்தான் இருப்போமே
இன்றிலிருந்து இனிமேலே
இணையும் நேரம் பார்த்திருந்து.

Wednesday, July 11, 2007

உன் நினைவும்....

பார்த்த நாள் முதலே
பார்வையெல்லாம் உன் மீதே.
நினைக்கும் நினைவுகள்
காட்சிகளாய் உனைக் காட்டிடுமே.

திரும்பிய பக்கமெல்லாம்
தித்திக்க வைக்கின்றாய்.
சொல்லும் சொற்களெல்லாம்
உச்சரிக்கும் உன்னைத்தான்.

அறியாததை அறிந்துக் கொள்ள,
புரியாததை புரிந்துக் கொள்ள,
நெருங்கா நேரத்தை
எண்ணி எண்ணி,
பெரிதாக பெருமூச்சை
நாம் விடுகின்றோம்.

விரைவிலே உனையே
கவர்ந்து செல்ல
உறுதியுடன் நினைத்து
உவ்வகைக் கொள்கின்றேன்,
உன் நினைவும்
என் மேலே உள்ளதாலே.

Tuesday, July 3, 2007

(உன்) நினைவுகள் அகலாமலே !

பூகம்பத்தின் அறிகுறியாய்
எண்ணங்கள் சுழன்றடிக்க
மனமோ தள்ளாட
நிலையின்றி இருக்கையிலே
இரைப்பைநீர் வெளியே
மூக்கின் வழியே பிச்சியடிக்க
நொடியொன்றில் பூகம்பமாய்
உயிர் மூச்சடைக்க
உடலோ விசிறியடிக்க
துடித்து எழுந்தேன்.

மூச்சை சிராக்கி
ஒரு கை நீர் அருந்த
தொண்டையோ கமறலெடுக்க
மருந்துவில்லையைக் கொடுத்தேன்
கமறல் அடங்க.

மதி உறக்கம் இல்லாது
விழி உறக்கமேது
விடிவெள்ளித் தோன்றியது
மதிக்கிறக்கம் கொண்டது
விழியும் உறக்கம் கொண்டது
மயக்கமருந்தில்லாமலே.

இதயம் உறங்கவில்லை
ஆதனால்
துடித்துக் கொண்டே இருக்கிறது
நிகழ்வுகளை ஏற்று
உன் நினைவுகள் அகலாமலே.

வேண்டும் தன்னம்பிக்கை !

தோல்வி என்பது தாமதமே
தோற்கவில்லை நீங்கள்
நினை(த்து)வில் கொள்ளுங்கள்
தோல்வியென கருதும்போது.

வராது வாய்ப்பு
தேடி நம்மை.
செல்ல வேண்டும்
தேடி அதை.

எண்ணம் கொண்டு
செயல் பட்டால்
வெற்றி வரும்
பெரும் மகிழ்வோடு.

வாய் வேண்டாம்
திறமை பேசட்டும்.
வெற்றி நிச்சயமாகும்
வாழ்வு வளமாகும்.

வேண்டும் தன்னம்பிக்கை
வெற்றியதை அடைய.
வேண்டாம் அவநம்பிக்கை
உள்ளதையும் தொலைக்க.

Monday, July 2, 2007

ராஜா கதை !!!!!!!!!!!

சென்ற வழியெல்லாம்
செந்நீர் ஓட,
செழித்திருந்த இடமெல்லாம்
செழிப்பற்று போக,
செல்வங்கள் பல இருந்தும்,
சேயற்ற நிலையறிந்து
செல்லாக்காசாய் உற்றார் மதிக்க ,
செவ்விளநீர் சுவையற்று போக,
செம்பொதியென மனமோ கனக்க,
செம்மரமாய் தனை நினைத்து
செருக்கடைந்த மன்னனவன்
செயலிழந்து போனான்.

படியளப்பவர்கள் !!

படிக்காதவன்
படி அளந்தான்,
கூலி செய்து.

படித்தவனோ
படி அளக்கிறான்,
வேலைத் தேடி.
===============

பின் குறிப்பு ;
1) படி அளந்தான் = சம்பாதிப்பது.
2) படி அளக்கிறான் = பல அலுவலகங்களுக்கு
அலைவது.

Sunday, July 1, 2007

கவிதை !!!

தாயின் மறைவினால்
ஆரம்பித்தேன் எழுத.

மனத்தின் உந்துததால்
தொடங்கினேன் எழுத.

மகிழ்சியின் வெள்ளத்தில்
தொடர்ந்தேன் எழுத.

நினைவுகளின் சோகத்தில்
தொடர்கிறேன் எழுத்தை.

எண்ணங்களின் வடிகாலாய்
எழுதுவேன் கவிதையை.

Thursday, June 28, 2007

திறக்குமா மனம் ?????

கானா கண்கள் பூத்திருக்கும்.
கண்டாலோ மனம் பூத்திருக்கும்.
செயலுக்கு வழி பிறக்கும்.
எழுத்துக்குத் தானே வழிக் கொடுக்கும்.

உன் நினைவுகளால் பல இழந்திருப்பேன்.
அதிலேயும் ஒரு சுகம் கண்டிருப்பேன்.
எழுத்தைத் தந்தது உன் நினைவு.
படைக்கப் பார்த்தேன் உன் அழகை.

கோடுகள் போட்டேன் உனை நினைத்து.
கோளங்களாக உன் உருவம்.
கதைகளாக பலக் கொடுப்பேன்
கவிதைகளாக தான் படைப்பேன்.
விரும்பித் தந்தேன் நான் உனக்கு.
ஏற்றுக் கொள்வாயா மனந்திறந்து ???

அனா, ஆவன்னா........ஹைக்கூ !!!!.........



அனா ஆவன்னா மணலில்
பழகிய நான்கற்பாறையான உன்னில்உளியால் செதுக்காமல்
விரலால் எழுத
நினைத்த என்னை
என்னவென்று சொல்ல

Wednesday, June 27, 2007

முடிவுகள் !


தேர்விலே தேர்வாக,
எழுதிவிட்டோம் விரைவாக.
விடைகளை சரி பார்த்து,
தருவீரோ மதிப்பாக.
பெற வேண்டும் உயர்வாக,
அதனாலே நாமுயர,
நம்மாலே வீடுயர,
வீடாலே நாடுயர,
செய்வோமே நினைவாக.

கிடைக்குமா விடை ????

நேசிக்கிறேன் உனை 
நீங்கா நினைவுடன்.
யோசிக்க வைக்கிறாய் பலவாறு 
அள்ளிக் கொடுக்க மனமிருந்தும்,
ஏனோ கருமியாய். 

கூடும் செயலென நான் நினைத்தேன்.
கூடா நட்பென நீ சென்றாய்.
அறியச் செய்ய நான் முயன்றேன்.
அறிய நீயும் விரும்பவில்லை.

விளக்கம் தரவும் விளையாமல்
விலகி விட்டாய் எனை விட்டு.
விளக்கம் அறியா என் மனமும்,
எப்படிச் சொல்வேன் படும்பாட்டை.

Tuesday, June 26, 2007

அறிந்திருந்தால்.......!

கண்ணகள் இல்லாமல் இருந்திருந்தால்,
உன்னைப் பார்த்திருக்கமாட்டேன்.

காதுகள் இல்லாமல் இருந்திருந்தால்,
உன் குரலைக் கேட்டிருக்கமாட்டேன்.

வாய் இல்லாமல் இருந்திருந்தால்,
உன்னிடம் பேசிருக்கமாட்டேன்.

கைகள் இல்லாமல் இருந்திருந்தால்,
உனை எழுதிருக்கமாட்டேன்.

மனம் இல்லாமல் இருந்திருந்தால்,
உன்னை விரும்பியிருக்கமாட்டேன்.

உயிரோடு உயிராக கலந்த
உன்னை சுற்றிருக்கமாட்டேன்,
உன் முடிவு அறிந்திருந்தால்......

கவிதையே !!! ---ஹைக்கூ........

உன்னாலே
ஊஞ்சலாடும் இதயம்,
உறக்கத்தையே
உதறி விட்டது.

Monday, June 25, 2007

திரு இல்லையென்றால் !!!!!!!!!!!

திரு வளத்தானும்,
திரு வலுத்தானும்,
திரு இழந்தானும்,
திரு வலகரத்தால்
திருவலங்காட்டில்
திருவம்மையுடனுறை
திருவய்யன் அளித்த
திருநீறு அணிந்தால்,
திருப் பெற்று
திரு நாளில்
திருவிடம் சென்று
திருவுடன் இருப்பர்
திரும்புதல் இல்லா.

Saturday, June 23, 2007

தவறு யாரிடம் ?

உன் வருகை போது
என் வாழ்க்கையில்
மீண்டுமொரு பருவகாற்று
என நினைத்திருந்தேன்.
நம்பிக்கையெனும்
ஈரப்பசையையும்
உறுஞ்சிய போதுதான்
தெரிந்தது - நீயொரு
வரண்டகாற்றென்று.

உன் வருகையின் போது
கதகதப்பை உணர்ந்தேன்,
பனிகாலத்திற்கு பிறகு
வந்த வசந்தகாலமென்று.
என்னை வெப்பத்தினால்
பொசிக்கியப் போதுதான்
தெரிந்தது - நீயொரு
கோடைகாலமென்று.

உன் வருகையின் போது
செழிக்கச் செய்யும்
பன்னிர் துளிகளென
நினைத்திருந்தேன்,
என்னை கருக்கிய போதுதான்
தெரிந்தது - நீயொரு
அமிலமென்று.

உன் வருகையின் போது
தாலாட்டும் பூங்காற்றென
நினைத்திருந்தேன்.
என்னை, வேரோடு
அசைத்தப் போதுதான்
தெரிந்தது - நீயொரு
புயற்காற்றென்று.

Thursday, June 21, 2007

தேடிய பின் தாடி!.......

கேளாத சொல் தேடி
சொல்லாத பொருள் தேடி
இல்லாத இடம் தேடி
இருக்கின்ற உனைத் தேடி
காணாத காட்சிகளை
கண்டு விட
துடிக்கின்ற உனக்காக
நானும் அதை நாடி
படாதபாடுப் பட்டு
கொண்டு வந்தேன் ஓடி
அருமையை அறியாமல்
பெருமையைத் தெரியாமல்
போட்டு விட்டாய் மூலையிலே
சொல்லி விட்டேன்
கோபத்திலே போடி,
போடியென்றாலும்
போகமாட்டாய்.
வாடியென்றாலும்
வர மாட்டாய்.
நிலை குலைந்து
நிற்க செய்தாய்.
வளர்த்து விட்டேன்
நிலையாய், 'தாடி'.

இலக்கியம்

உன் கதையை
இலக்கியமென
நான் எழுத
இடைமறித்து
நீயே எழுதலாமா-
உன் கதையை ?

எழுதிக் கொள்
உட்கதையை.
விட்டு விடு
என்னிடம்

மூலக்கதையை.


இக்கவிதைக்கு கருத்து பதித்தவர்கள்:-
  • Mylswamy Annadurai likes this.
    • Krishnamal Krish
      உன் கதையை

      இலக்கியமென

      நான் எழுத

      இடைமறித்து

      நீயே எழுதலாமா-

      உன் கதையை ?// அருமை

      எனக்கும் எழுதத்தான் ஆசை கொஞ்சம் நிஜத்தோடு கற்பனையாய் ......படிப்பவர்கள் சொந்தக்கதையோ.... சோகக்கதையோ என முத்திரைப் பதித்து விடுவார்களோவென முடிவுரையை உங்களிடமே கொடுத்து விடுகிறேன்....
      16 hours ago · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M
      ஆகா... என்ன அருமையாய் சொன்னாய் . எனக்கே அத்தகைய கேள்வி கருத்தாய், சந்திப்பு என்னும் வலைப்பதிவர் கீழே உள்ளதை எழுதியிருந்தார்.

      சொந்தக் கதை...
      சோகக் கதை...
      இந்தக் கதை...
      எந்தக் கதை!

      அப்படியிருக்கையில், உம் நிலையைச் சொல்ல வேண்டியத்தில்லை. இருப்பினும் மற்றவர்களைப் பற்றி நினைக்காமல் நமது எண்ணங்களை பதிப்பாக வெளியிடுவதில் தவறே இல்லை. என்னுடைய நினைவுகளை எத்தனையோ எழுதாமலேயே தவற விட்டிருக்கிறேன். இப்போழுது நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அதனால் நம்மை மதிக்கின்ற நண்பர்களுடனாவது நம் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ளவது தவறில்லை. எனவே தயங்காமல் எழுத, பதிக்கத் துவங்கு சகோதரி. வாழ்த்துக்கள்.
      16 hours ago · · 1 person
    • Krishnamal Krish நன்றிங்க பத்ரி அண்ணா.
      16 hours ago · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M விரைவில் சகோதரியின் அருமையான பதிவை வாசிக்கலாம். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
      16 hours ago ·
    • Krishnamal Krish சரிங்க அண்ணா.
      16 hours ago · · 1 person


      இக்கவிதைக்கு விருப்பம் தெரிவித்தவர்:-
      நமது மதிப்பிற்குரிய விண்வெளித்துறை விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை (Mylswamy Annadurai )