Translate

Showing posts with label இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். Show all posts
Showing posts with label இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். Show all posts

Friday, January 12, 2018

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் 2018



பொங்கலோ  பொங்கலென 
தைப்பொங்கலை வரவேற்று
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி

புதிதாக புலர்ந்திட்டவும்
புது மலராய் மலர்ந்திட்டவும்
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி

பழையதெல்லாம் கழிந்தோட
புதியதெல்லாம் நலம் வழங்க
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி

மும்மாரி மழை பொழிந்து
முப்போகம் விளைச்சலெடுக்க
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி

முன்னோர்கள் ஆசிகளெல்லாம்
முன் வந்து பறையறைய
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி

மாற்றங்களில் நலனிருக்க
மக்களுக்கு மகிழ்வளிக்க
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி

புலருகின்ற வேளையிலே
தொடங்குமிந்த புத்துணர்ச்சி
நாள் முழுதும் தொடர்ந்திருக்க
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி

நோயில்லா நாட்களாக
நொடியின்றி நிலைத்திருக்க
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி

தமிழர்களின் பெருநாளாம்
தைத்திங்கள் திருநாளை
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி

உயிருக்கு உணவளிக்கும்
உழவரை நாம் போற்றிட
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி

உற்ற துணையாய் உடனிருந்து
உழைக்குமந்த உயிர்களுக்கும்
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி

வற்றாத ஆறுகளாய்
வளமென்றும் அள்ளித்தர
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி

தமிழகத்தின் பெருமைகள்
தரணியெல்லாம் விரிந்து பரவ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி

சேதங்கள் ஏதுமின்றி
சேமங்களாய் நிறைந்திருக்க
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி

காற்றாய் கரையும் நாட்களில்
களிப்பெங்கும் சூழ்ந்திட
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி

இயற்கை அனைத்தும் நன்மையளித்து
இல்லறம் செழிக்க, இறைவனை துதித்து நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி


ஆக்கம்:-
தவப்புதல்வன்

A.M.பத்ரி நாராயணன்