Translate

Showing posts with label இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். Show all posts
Showing posts with label இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். Show all posts

Tuesday, March 6, 2018

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

அச்சுகளில் தாமதமாய்
அகமெனும் நினைவில் நிரந்திரமாய்
ஆசீர்வாதம் உமக்குண்டு.
அன்பினால் நீங்கள்
மகிழ்வுடன் வாழ,
ஆண்டவன் உமக்கு
நலன்களை வார்க்க,
அன்று மட்டுமல்ல, இனி
அனைத்து நாட்களும்
ஆசையான குடும்பமுடன்
அருமையான தலைவனாய்
அணைத்திருந்து வழி நடத்தி
சிறப்பாய் வாழ்விருக்க
ஆசீர்வதித்தோம் இன்றுமையே.
மிக தாமதமான இனிய பிறந்தநாள்
நல்லாசிகள் 

Saturday, January 6, 2018

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

நினைவுகளில் காட்சிகள்
நிறைந்த ஆறாய் ஓடுது.
நித்த நித்த வளர்ச்சியெல்லாம்
நிற்காமல் மனதில் ஓடுது.
நீண்ட அந்த காலமோ
குறுகித்தான் போனது.

வசந்தத்தின் உறைவிடமாய்
வாழ்வது தொடர்ந்து செல்ல,
வந்தணைக்கும் குடும்பமதில்
வாசனைகள் பரவியிருக்க,

வளமுடன் நலன்களும்
வாழ்வனைத்தும் நிலைத்திருக்க,
வாழ்த்தினோம் இன்றுமை - நீ
வந்துதித்த நாளின்றில்.
இனிய பிறந்தநாள் நல்லாசிகள்
.





Thursday, January 4, 2018

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

அச்சுகளில் தாமதமாய்
அகமெனும் நினைவில் நிரந்திரமாய்
ஆசீர்வாதம் உமக்குண்டு.
அன்பினால் நீங்கள்
மகிழ்வுடன் வாழ,
ஆண்டவன் உமக்கு
நலன்களை வார்க்க,
அன்று மட்டுமல்ல, இனி
அனைத்து நாட்களும்
ஆசையான குடும்பமுடன்
அருமையான தலைவனாய்
அணைத்திருந்து வழி நடத்தி
சிறப்பாய் வாழ்வாய் அமைந்திருக்க
ஆசீர்வதித்தோம் இன்றுமையே.

மிக தாமதமான இனிய பிறந்தநாள்
நல்லாசிகள் 




Monday, December 18, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

சொல்ல நினைத்ததை 
சொல்லாமல் தவிர்ப்பேனோ?
சொந்தங்கள் கூடி உமை
சொல்லால் மட்டுமின்றி
சுவைக்கூட்டி மகிழ்வாக
அளவுளாவிய நாளின்று.
அற்புதங்கள் நடைப்பயில
அடைந்த வாழ்வின்றை
அளவிலா மகிழ்வுடனே
பிரார்த்திதது உமை நமஸ்கரித்தோம்
வாழ்வது நலமாக
மகிழ்வுடன் வாழ்ந்திடவே!

உம் இனிய பிறந்தநாளில் எங்கள் வாழ்த்துகளும் வணக்கமும் 

பத்ரி நாராயணன்


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

வாழ்வு உயர்வாக,
வாழ்க்கை மகிழ்வாக,
வாழ்வது யாருக்காக,
வாழ்ந்திடு உணர்ந்தே நீ.
இனிய பிறந்தநாள் நல்லாசிகள் பிரனேஷ் பேரனே. 
அன்புடன்,


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

எமது மற்றொரு மூத்த சகோதரி திருமதி. சரஸ்வதி பட்டாபிராமன் அவர்களின் பிறந்தநாளுக்கான வாழ்த்து.
வீணையை மடியலமர்த்தி
வித்தகியாய் நீர் இசை மீட்ட,
வான்முகில்கள் ஒன்று கூடும்.
வண்ணமயில் தோகை விரித்தாடும்.
கலைமகளாய் நீரிருந்து
கலைமகள் அருள் உமக்கிருந்து
அருளென்றும் நிலைத்திருந்து
நலனும் மகிழ்வும் இணைந்திருந்து
#இரு தாய் மகளான நீர்
இன்பமுடன் வாழ்ந்திருக்க,
இறைவனைப் பிரார்த்தித்து
இன்றும் உம்மை நமஸ்கரித்தோம். 🙏
தாமதமான இனிய பிறந்தநாள் 🍰🎂
நல்வாழ்த்துகள் சரஸ்வதி அக்கா. 💐
உங்கள் ஆசிகளுக்காய் 🙌 ,
பத்ரி நாராயணன் & ராஜராஜேஸ்வரி
#இரு தாய் மகள் =
1) ஈன்றெடுத்த தாய் – பாக்கிய லக்ஷ்மி
2) கலைகளுக்கு தாய் – சரஸ்வதி, கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசை மடந்தை, காயத்ரி, வெண்டாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, சாரதாதேவி, ஹம்சவாகினி, ஜகநி, புத்திதாத்ரி, வாணீஸ்வரி, வரதாயினி, க்ஷக்ரகண்டி, புவனேஸ்வரி, கௌமாரி, பிரம்மசாரிணி ஆகியவை முக்கியமான பெயர்கள்.

Thursday, December 7, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்


தவமாய் தவமதிருந்து
தாய் ஈன்றெடுத்த  நாள்.
அந்நாள் உமக்கான நாள்.
அது உம் பிறந்த நாள்.

இறையருளுடன்
நலமாய் மகிழ்வாய் 
வாழ்க பல்லாண்டு.

தாமதமான இனிய பிறந்த நாள் 
நல்வாழ்த்துகள் சகோ.
-- 
இப்படிக்கு
A.M.பத்ரி நாராயணன்.

Saturday, November 25, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்


இனிதாகட்டும் ஒவ்வொரு நாளும்
நலனாகட்டும் அந்நாட்களனைத்தும்.
மங்களம் பொங்கட்டும் என்னாளும்
மகிழ்வுகள் நிறையட்டும் மணித்துளிகளிலும்
மனம் நிறைந்த நல்லாசிகள் இப்பிறந்தநாளில்.


-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Monday, October 30, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

இறைவன் அளித்த வாழ்வு
மங்கல இசை முழங்க,
ஆன்றோர், பெரியோர்
ஆசிகள் வழங்க,
இணையோர் கைக் குலுக்கி
உம்மை தழுவி மகிழ,
சிறியோர் யாவரும்
ஆசிகளைக் கோர,
நலம் நாடும் நட்புகள் 
வாழ்த்துகளைக் குவிக்க,
புத்துணர்வுடன் வாழ்வை
புதிதாக தொடங்கி,
புறமுதுகிட செய்வீர்
நூறுகளையும் இலகுவாய்.

தங்கள் இனிய பிறந்த நன்னாளில்
நமஸ்காரங்களுடன்


--
உடன்பிறவா,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Tuesday, October 17, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

சீரிறி)ய கோலொன்றை (நிலையொன்றை)
உறுதியாய் கைக்கொண்டு,
வழி தேடி செல்கின்றீர்
வானளவு புகழடைய.
இறையவன் அருளோ
தூண்டுதலாய் உமக்கிருந்து,
துணையாய் வழி காட்டி
அனைத்தையும் நீரடைய,
நலனும், மகிழ்வும்
நாடி வந்து உமை அணைக்க,
மூத்தோர் ஆசிகள்
முழுமையாய் உமை நனைக்க,
வாழ்வாங்கு வாழ்கவென
வாழ்த்தினோம் உமை இன்றே.
இனிய பிறந்தநாள் நல்லாசிகள்

Monday, October 16, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்


சீறிய கோலொன்றை (நிலையொன்றை)
உறுதியாய் கைக்கொண்டு,
வழி தேடி செல்கின்றீர்
வானளவு புகழடைய.
இறையவன் அருளோ
தூண்டுதலாய் உமக்கிருந்து,
துணையாய் வழி காட்டி
அனைத்தையும் நீரடைய,
 நலனும், மகிழ்வும்
நாடி வந்து உமை அணைக்க,
மூத்தோர் ஆசிகள்
முழுமையாய் உமை நனைக்க,
வாழ்வாங்கு வாழ்கவென 
வாழ்த்தினோம் உமை இன்றே.

இனிய பிறந்தநாள் நல்லாசிகள் 


ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

வளரும் இந்த பருவத்தில், 
வந்து குவியும் வெற்றிகள், 
வாழ்வுக்கு உயர்வளிக்கும். 
சிறந்ததொரு நிலையடைய, 
செந்திலாண்டவன் துணையிருக்க, 
பிரார்த்தித்து வாழ்த்தினோம், 
நலமுடன் மகிழ்வாய் நீயிருக்க. 

இனிய பிறந்தநாள் நல்லாசிகளம்மா. 

--
அன்புடன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

காலம் முயல்கிறது
கரைந்ததைக் காட்ட.
மனமதின் இயக்கம்
இளமையின் துடிப்புடன்.

உற்சாக குவியலுடன்
உடலும் இயங்க,
உற்றவனின் அருள்
உறுதுணேயாய் இருக்க,

கடமைகள் யாவும்
நலமுடன் முடித்து,
நலமுடன் நாளும் 
உறவுடன் கழித்து,
வளமுடன் வாழ
அன்புடன் வாழ்த்தினோம்.

இனிய பிறந்தநாள்  நல்லாசிகள், 

பாசமுடன்
A.M.பத்ரி நாராயணன்.

Sunday, October 8, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

 நன்றான இடைவெளி 
நான்கதை நீர் கொடுத்தீர்.
நல்முத்தாய் இரண்டுமது
நலமுடன் சிறப்படைய,
நான்முகனின் ஆசிகளால்
நான் வழங்கிய வாழ்த்துக்கள்.

தங்கமும் சிங்கமும்
வாழ்விலே உயர்ந்தோங்க,
மகிழ்வுடன் நாட்கள்
உம்முடன் இணைந்தேற
அன்புடன் வாழ்த்தினோம் 
நட்புடன் யாம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் இருவருக்கும். 🌹🌹🙌🙌

-- 
இவண்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


Dhavappudhalvan Badrinarayanan A M ''அங்கம் நொந்து தங்கம் தந்தவள்.
எந்தன் மனையாள் சிங்கம் ஈன்றவள்.''


நோகமல் பேறில்லை.
#நோந்த வனை பயனில்லை.
நோவின் வலி தாயறிய
நொந்ததின் பொருளிதுவே.

#நோந்த வனை = நொந்து+அவனை (இறைவனை)
-- 
நட்புடன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
Reply
1
1 hr
Manage
Anuradha Kattabomman அங்கம் நொந்து தங்கம் தந்தவள். -- கொடி கழுத்தைச் சுற்றி விழுந்து இருந்ததால் 2 நாள் சிரமத்திற்குப் பின் சுகப் பிரசவத்தில் பிறந்தவள் பெண் தங்கம். ஆண் சிங்கம் அவ்வாறில்லாமல் மருத்துவமனையில் சேர்த்தவுடன் சுகப் பிரசவத்தில் பிறந்தவன். அதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறேன்.
Reply
1
1 hr
Remove
Dhavappudhalvan Badrinarayanan A M நோவுக்கு காரணமான கொடி கழுத்தை சுற்றி இருந்ததும் இறைவனின் செயலே. அந்த இறைவனையோ, தங்கத்தையோ நோவதில் ( எடுத்து கூறிக்கொண்டிருப்பதில் ) பயனில்லை என கொள்க. 😍🙏

Sunday, May 28, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்


உள்ளத்தில் குடி கொண்ட
ஆண்டவரின் அருளொளி,
ஆனந்தத்தை வழங்கி
நலனையும் நீடிக்க
பிரார்த்தித்து வாழ்த்தினோம்
அன்புடன் யாம்.
இனிய பிறந்தநாள் நல்லாசிகள்
ஆனந்த் அல்லுடுகாரு.
அப்பா,



அம்மா.
2017

Monday, June 8, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - சங்கீதா பரணிதரன்


சலசலக்கும் சிற்றோடையாய்
சங்கீதமாய் உன் வாழ்க்கை,
சேர்ந்தணைக்கும் உறவாலே
சேரட்டும் என்றும் மகிழ்வுகளே.

இறை தந்த ஆற்றலெல்லாம்
இசையாய் பரிமளித்து
ஈனும் வெற்றிகளால் - மனம்
இன்பமாய் சிறகடிக்க

கண்ட கனவுகளும்
காணும் காட்சிகளும்
களிப்பை நல்கிட - ஸ்ரீ
காமாட்சியை வேண்டினோம் உனக்காக.


இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துகள் மகளே.

சங்கீதா பரணிதரன்  - 08/06/2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - சுதா ரகுநாத்

காற்றிலே நினைவுகள்
கலந்தபடி விரைந்தோட,
காலமது நிற்காமல்
கழிகிறது மறக்காமல்.

அழகான வாழ்க்கையில்
அருமையான பக்கங்கள்
அணைத்தபடி நீ நடக்க
அருகினிலே எல்லோரும்.

நடக்கட்டும்  நாட்களெல்லாம்
நலமாக மகிழ்வாக - நாம்
நாடி செல்லும் இறைவனும்
நல்கட்டும் அருளென்றும் நிறைவாக.


இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துகள் மருமகளே

சுதா ரகுநாத்  06/06/2015

Friday, March 20, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Senthil Kumar R


 


Senthil Kumar R

பொங்கும் மகிழ்வுகள்
பீரிட்டு பொங்க,
போடும் நடை
ராஜநடையாய் விளங்க,
நலனும் மகிழ்வும்
இறை தரும் கொடையாய்
என்றுமே சூழ்ந்து
காத்துமை அருள.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்
ஆசிர்வாதங்கள் பேராண்டி.


Saturday, February 14, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Nisha Nishu




Nisha Nishu

ஒவ்வொன்றாய் நீ கூட்டி,
வாழ்க்கையில் சுவைக் கூட்டி,
அத்துடன் மணம் கூட்டி,
ஆனந்தமாய் பறந்தாட,
மகிழ்வும் இணைந்தாட,
ஆண்டவரின் அருள் கூட
பிரார்த்தித்தோம் உமக்காக,
நலமுடன் வாழ்ந்திருக்க.
இனிய பிறந்தநாள் நல்லாசிகளம்மா.

Tuesday, December 9, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Samy Gopal




இறைவனின் அருளோ உடனிருக்க,
நட்புகளின் வாழ்த்துகளோ தொடர்ந்து வர,
நாளும் பொழுதும் நலமாக,
மனமோ என்றும் மகிழ்வாக
நீங்கள் அதிலே திளைத்திருக்க
நாங்கள் வாழ்த்தினோம் அன்பாக.

இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துகள் ஐயா.