Translate

Monday, July 25, 2016

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 7/25/2014

பிறந்தநாள்  வாழ்த்து = காமேஷ்.

வாழ்வின் அர்த்தங்கள் 
ஆயிரமிருக்க,
அதில் பல நினைவுகள் 
ஒடிப் பிடித்து விளையாட.
பிறப்பின் விளிம்புகள் 
தொட்டு உமை இழுக்க,
ஒவ்வொரு படியாய் 
உம் காலடி உயர,
நலமுடன் நாளும் 
சிறப்புடன் காலமும் 
செல்கவே வாழ்த்தினோம் 
இனிதான நாளாம் 
உம் பிறந்தநாள் இன்றிதில்.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் காமேஷ்.  

வாழ்த்துகள்

ஞாயிறின் மகிழ்வுகள்
திங்களில் இனிக்க,
பணிகளுக்கு இடையிலும்
பன்னிசைப் பாட,
நினைவு ஊஞ்சல் 
அசைப்போட்டு ஆட,
மீண்டொரு நாளினை
எதிர் நோக்கி ஏங்க,
மனமும் நினைவும் 
சமரசம் செய்ய,
கழியட்டும் இந்நாள் 
புத்துணர்வாக எமதருமை நட்புகளே!💐💐

Tuesday, July 19, 2016

வாழ்த்துகள்

புன்னகைக்கு விலையிருந்தால்
என்னிடம் பணமில்லை.
விலையதை நீயுரைத்தால்
நட்புக்கும் உறவுக்கும் பொருளில்லை.
கள்ளத்தில் புன்னகைத்தால்
பள்ளத்தில் போய் முடியும்.
உள்ளத்தால் புன்னகைத்தால் 
உச்சிக்கு நமை உயர்த்தும்.
உடலுக்கு உறுதியளிக்கும் 
புன்னகையை நாமுதிப்போம்.
உறவுக்கு உரமளிக்கும்
புன்னகையை நாம் தெளிப்போம். 

தெளிவான புன்னகை - நமக்கு 
வாழ்வில் வாரி வழங்கும் நம்பிக்கையுடைய புத்துணர்ச்சி 


மகிழ்வான நாளாக அமையட்டும் நட்புகளே! 😄😃😊

Monday, July 18, 2016

வாழ்த்துகள்

விழிகளில் விளையாட்டாய்
நட்புதனை நீர் பகிர,
வீசும் புயல் காற்றும் 
அதனில் அடங்கி விடும்.

இனிதான நினைவுகளுடன் 

நாளின்றும் செல்லட்டும் நட்புகளே!

Saturday, July 16, 2016

வாழ்த்து

இன்றைய நாளும் 
இயல்பாய் அமைய,
இறைவனோ, இயற்கையோ
இனிமையை நல்க,
இயங்கட்டும் வாழ்க்கை 
இலகுவாய் தெளிவாய்.

🙏 வணக்கமுடன் வாழ்த்துகள்💐 அன்பு நட்புகளே!   

தவப்புதல்வன் @ 
பத்ரி நாராயணன்   


Http://aambalmalar.blogspot.com

Friday, July 8, 2016

மாற்றுத்திறனாளிகள் - VAO பணிக்கு தகுதி

கேள்வி - பதில்

கேள்வி: தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரி தேர்வில் மாற்றுத்திறனாளிகள் கலந்துக் கொள்ள தகுதி என்ன?

பதில்: அரசு ஆணை ( டி ) எண்.5 வருவாய் ( பணி 7 - 1 ) துறை நாள்: 08/01/2009 ( ஆகஸ்ட் 1, 2009 ) -ன் படி மாற்றுத்திறனாளிகளில் 40% முதல் 50% வரை ( கை, கால் ) (Orthopedically Handicapped ) ஊனமுற்றவராக இருப்பவர், இயக்கத்தில் குறை உள்ளவர்களில் எழுதுவதில் எந்த விதத்தடையும் இல்லாதவர்கள் மற்றும் உடல் இயக்கத்தில் குறைந்த அளவு இயலாமை உள்ளவர்களுக்கு மட்டுமே காலிப்பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட 3% இட ஒதுக்கீடு செய்யப்படும்.

-தவப்புதல்வன்

#இது 2009 ஆண்டு சட்டமெனினும், இதில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக மாற்றுத்திறன் சதவீதம் அளவீட்டில்.

தகுதியான நண்பர்கள் விண்ணப்பித்து, தேர்வில் வெற்றியடைய வாழ்த்துகள் நண்பர்களே. 💐