Translate

Tuesday, December 29, 2009

2010 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து.


புத்தாண்டு பிறக்குது.

புது வாழ்வு பிறக்கட்டும்.

மகிழ்வுகள் வந்து, நம்

மனத்திலே நிறையட்டும்.

நட்பு உறவு அனைத்திலும்

அன்புமலர் பூக்கட்டும்.

உலகமக்கள் யாவரும்

ஒன்று கூடி வாழட்டும்.

என்றே நாம் வேண்டிக் கொள்வோம்

இயன்ற நல்பொழுதிலேல்லாம்.

Wednesday, November 25, 2009

புத்தாண்டு கவிதை

பாசமுடன் அன்பை,
நேசமுடன் பொழிந்திடுவேன்.
கண் வழியே கண்டிடுவேன்.
மகிழ்ந்திருக்க செய்திடுவேன்.
முடிந்த வரை
செயல் வழியே காட்டிடுவேன்.

வருந்த செய்ய எண்ணமில்லை.
மறைத்துப் பேசத்தெரியவில்லை.
விளக்கி சொல்ல அறியவில்லை.
மனமது கனத்தாலும், மகளே!
வாழ்த்த வேண்டியவன்-
நான் அல்லவா!!

மகிழ்வுடனும் நலமுடனும்
பல்லாண்டு வாழ்கவென
இறைவனை தாள் பணிந்தே
மனம் திறந்து நேசமுடனும்,
அன்புடனும், பாசமுடனும்
வாழ்த்திட்டேன் இப்புத்தாண்டிலே.

என்றும் உங்களுக்காக,
அப்பா.

பின்குறிப்பு:
எந்த மனநிலையில் என்பது ஞாபகமில்லை. 31/12/2005ஆம் தேதி இப்புத்தாண்டு கவிதையை எனது மகள் நிரஞ்சனாவுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். என் மகள் தன்னிடமிருந்த தேவையற்ற காகித தகவல்களை கழித்து விட்டு, எடுத்து வைத்திருந்த காகிதங்களில், என்னுடைய இக்கவிதையும் எதிர்காணா வகையில் இருக்க கண்டேன். இந்த வலைப்பதிவை துவக்குவதற்கு முன்பாகவே எழுதிய கவிதையாகையால், இன்று பார்த்த உடனே பதிவு செய்து விட்டேன்.

Monday, November 16, 2009

நன்னிலம் செழிக்க

உணவை இறைத்தால் சேதமாகும்.
நீரை சிந்தினால் விரையமாகும்.
பொருளை இறைத்தால் குப்பையாகும்.
புன்னகை சிந்தினால் நல்லுரமாகும்

நன்னிலமும் பூக்குமே.
புன்னகையால் நிறையுமே.
உலகமும் செழிக்குமே.
வாழுமே நல்லுறவிலே.

சிந்துங்கள் புன்னகையை
மனம் திறந்து.
அள்ளுங்கள் மகிழ்ச்சியை
வழிய! வழிய!!

மனம் திறந்து சிரித்தால்
நோயின்றி வாழ்வோம்.
முயற்சியது இருந்தால்
மகிழ்ச்சி என்றும் நிலைக்கும்.

Sunday, November 15, 2009

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பேரன்.B.B.S.S.சுப்ரித்துக்கு

பேரன்.B.B.S.S.சுப்ரித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து.
உன் உருவை பார்த்ததில்லை.
உன் செயலைக் கண்டத்தில்லை.
உன் குரலைக் கேட்டதில்லை.
செவி வழியே செய்திக் கேட்டேன்.
குறும்பு செயலை ரசிக்கக் கேட்டேன்.

காலமோ விரைந்து செல்ல,
வருடமோ முடிந்தது ஒன்று.
இரண்டிலே வைத்த அடியோ,
நூறையும் தாண்டும் நன்று.

உன்னால் குதுகலம்
வீட்டிலே நிறைய,
பகலும் இரவும்ஒன்றாய் தெரிய,
கை மட்டும் மாறிதொடர்ந்துனைக் கொஞ்ச,
நீ உமிழும் ஒலிகளை
அகராதியாய் தொடுக்க,
உன் செயல்கள் அனைத்தும்திரையின்றி ஓடும்.

நீ கைகளை அசைத்துசிரிப்பொலி உதிர,
கலை வண்ணம் கொண்டகலைஞனாய் கண்டார்.

மகிழ்விலே நாளும்கண்ணிலே பொங்கி கன்னத்தில் வழியஆனந்தம் அடைந்தார்.

உன்னை சுமந்த தாயோ
கனவிலே மிதக்க .
உரு கொடுத்த அவளும்
ஊட்டமதை ஊட்ட,

பாசமிகு தந்தையாய்,
அப்பாவும் உனையே
ஊர் சுற்றிக் கட்ட.

தொடரும் தலைமுறை
என்றேன பாட்டனார் ("அய்ய'')
பெருமையுடன் கொஞ்ச.

கருத்துடன் நாளும்கவனித்துக் கொள்ளும்
பாட்டியின் ("அம்மிய") செல்லம்
என்றுமே உனக்கு
அருமையாய் இருக்க.

இளமையும் வளமையும்
நிறைந்தே இருக்க,
நோய் நொடியற்றவாழ்வுனக்கு அமைய,
இறைவனின் அருளோஇன்றுள்ள நிலைப்போல்என்றுமே தொடர,
பிறந்தநாள் இதிலேவாழ்த்துக்கள் பகன்றேன்
பேராண்டி உனக்கே!
சின்ன தாத்தா
-தவப்புதல்வன்
(எ)
A.M. பத்ரி நாராயணன்.


மற்றும்
சின்னபாட்டி :
B.ராஜராஜேஸ்வரி.

சித்திமார்கள்
B.நிரஞ்சனா
B.சோபனாமுப்பாட்டனார்:

P.A.மாணிக்கம் செட்டியார்.

தேதி:
இடம்: சென்னை.

அதிர்ஷ்ட தேவதை

கதவைத்தட்டி சொல்கிறது.
புலமைக்காட்டி
புதுவாழ்வு பெற்றுக்கொள்.

விரைந்து சென்று நீயும்
விருதுகளை அள்ளிக்கொள்.
வழி காட்டி சொல்லிவிட்டு
பறந்து அது செல்கிறது.
செய்தியை அறிந்த நான்
செயலாற்ற விரைந்தேனே.

கரம் பிடித்த போட்டியை
கை நழுவ விட்டேனே.
வெற்றியடையும் பாதையை.
தேர்ந்தெடுத்து செல்லாமல்
விலகிதான் சென்றேனே.

மேடையேறி பேச்சுதனை
மேளம் கொட்ட வைத்தேனே.
பறிப்போன பட வாய்ப்பை 
பிறகு நான் அறிந்தேனே.

காதலித்த கவிதைகளை 
காகிதத்தில் ஏற்றியிருந்தால்!
கனவுகளை கண்ட நான்
திரைக்களத்தில் வென்றிருப்பேன்.

காலம் கடந்தபின்
கலங்கி நிற்கின்றேன்.
வாய்ப்பை தவற விட்டு
வழி பார்த்து நிற்கின்றேன்.


காவியமாய் இசைத்திருக்கலாம்
கலைவிழி ‘’மா’’விலே.
மாறுப்பட்ட நினைவுகள்
மனத்திலே இருந்தாலும்,
  
மாற்றுத்திறனாளர் சிந்தனையில்
மாற்றமதை கொண்டு வர
‘’மா’’ படைக்கும் வெற்றி காண
மகிழ்வுடன் காத்திருப்பேன்.

உலகை சுற்றி வந்து,
உள்ளங்களை கவர்ந்து அது,
உருக வைக்கும் மனங்களை –அதை
உருவாக்கி காட்டட்டும் ‘’மா’’.

ஆவலுடன்,

-தவப்புதல்வன் 

Friday, November 13, 2009

"உயிர் கொடுத்த என்னுயிரே!" தாயிக்கு அஞ்சலி - டாக்டர் V.ஜமுனா

Friday, June 19, 2009 அன்று தினமலர்


நாளிதழ் வாசித்துக்


கொண்டிருந்தபோது


"உயிர் கொடுத்த


என்னுயிரே!" என்ற


தலைப்பிலே ஒரு கட்டம்


கட்டிய செய்தி கண்ணைக்


கவர்ந்தது. அதில்


கண்ணை ஓட்டிய போது


ஒரு வித்தியாசமான


அஞ்சலி செய்தியாகும்.


எப்பொழுதும் அஞ்சலி


செய்தியில் நினைவு


கூறத்தக்க வகையில்


ஓரிரு வரியில்


கவிதையாகவோ,


குறுஞ்செய்தியையோ


வெளியிடுபவர்களின்


தகுதியையும் தெரியும்படி


வெளியிட்டிருப்பார்கள்


என்பதை நாம் அறிந்ததே.


ஆனால் இது ஒரு


கட்டுரை


வடிவில் விரிவான


செய்தியாக இருந்ததால்,


தவழ விட்டேன்


கண்களை. தகவல்


என்னவென்று பார்போமா!




தாங்கள் அடிக்கடி சொல்லும் அரிய வார்த்தைகள் சில உண்டு அம்மா:




"பெற்றோரை அவர்களது காலம் முழுக்க மரியாதையுடனும், அன்பு,


பாசத்தோடும், பிள்ளைகள் நடத்த வேண்டும்.


தங்கள் நன்மைக்காக அவர்கள் தந்த உழைப்பையும், செய்த தியாகங்களையும்


நினைத்துப் பார்க்க வேண்டும்.


மாறாக, அதீத சுயநலத்தால்,பெற்றோரை வேதனைப் படுத்தி, மன


உளைச்சளுக்குள்ளாக்கி அவர்கள் இறந்த பிறகு பூஜையும் படையலும் போட்டு


நாமே (தாமே) சாப்பிடுவதால் என்ன பயன்?"


என வருந்துவீர்கள், பிள்ளைகளால் பதிக்கப் பட்ட தாய், தந்தையருக்கு உதவி


செய்வீர்கள்.


இன்றோ பல பெற்றோர்கள் முதியோர் இல்லம் அனுப்பப்படுகிறார்கள் அல்லது


வீட்டிலிருந்து விரட்டப்படுகிறார்கள். பலர் தங்களுக்கு நேரும் அவமானங்களை


வெளியே சொல்லமுடியாமல் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.




பெற்றோரை அன்புடன் மதித்து வாழ்பவரின் குடும்பம் தழைக்கும், பேரும் புகழும்,


செல்வமும் தேடி வந்து சேரும். இந்த நிதர்சனமான உண்மையை உங்களின் இந்த


நினைவு நாளில் வாசிக்கும் ஒவ்வொருவரும் இதைத் தங்கள் கடமையாக


உணர்ந்து செயல்பட வேண்டுமென்பதே என் விருப்பம்! என அவர் தாயுடன்


வாழ்ந்த அந்த பொக்கிஷமான காலத்தை நினைத்தபடி அஞ்சலி


செலுத்தியிருக்கிறார் டாக்டர் V.ஜமுனா அவர்கள்.




பின் குறிப்பு:


1) Dr.V.ஜமுனா அவர்களைப் பற்றி இந்த நேரத்தில் நான் அறிந்ததைச் சொல்லி


சிறிது அறிமுகப்படுத்த வேண்டும். அடுத்த பதிவில்...


2) இதுவும் தவறவிட்ட தாமதமான பதிவு.



கருத்தியன்ற நண்பர்கள்:-
  • Shanmuga Murthy உண்மை..ஐயா தவப் புதல்வனாரே...
    தன்னைப் பெற்றெடுத்த தாய்தந்தையரைப் தவறாது பேணினால் தானகவே செல்வம் வந்து சேரும்.
    நல்லவையெல்லாம் நடக்கும்.
    இது அனுபவ உண்மை.
    நன்று சொன்னீர்.
    Tuesday at 5:40pm · · 3 people
  • Sathiabama Sandaran Satia அருமையான வரிகள் சார்... கடவுளை வணங்க்கும்முன்... உன் தாய் தந்தையரை வணங்கு!! உன் வாழ்வு சிறக்கும்..!
    Tuesday at 5:50pm · · 4 people
  • M Venkatesan MscMphil மகளீர் தின வாழ்த்துக்கள்
    Tuesday at 7:14pm · · 3 people
  • Thenammai Lakshmanan mika arumai..:)
    Tuesday at 7:44pm · · 3 people
  • Liyakath Ali
    அருமையாக சொன்னீர்கள் தவப்புதல்வன் சார். இன்றும் தினமும் என் அம்மாவின் அருகில் அமர்ந்து அரை மணி நேரமாவது அவர்களுடன் பேசுவதை பாக்கியமாக கருதுகிறேன். அவர்களும் அதை மட்டுமே நம்மிடம் எதிர் பார்க்கிறார்கள். நாம் அருகில் சென்று அமர்ந்தாலே அவர்கள் ...See More
    Tuesday at 8:01pm · · 5 people
  • Munuswami Muthuraman முன்னறி தெய்வங்களை ஒதுக்கி வைத்து விட்டு, எத்தனை கோயில் போய் சாமி கும்பிட்டென்ன , மறைந்த பின் படையல் இட்டு சாப்பிட்டுத்தான் என்ன பயன் ?
    Tuesday at 8:04pm · · 5 people
  • Raghavas Selvathirumal எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
    ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்
    Tuesday at 8:08pm · · 1 person
  • Sadeek Ali Abdullah வாழும் போது பெற்றோர்களின் அருமை உணராமல், பணிவிடை செய்யாமல் இறந்த பிறகு பூஜை செய்வதால் என்ன பயன் என்று செருப்பாலடிச்சா மாதிரி சொல்லியிருக்கிறீர்கள் பத்ரிநாராயணன் சார்... படிக்காத பாமரன் எவ்வளவோ தேவலாம் சார்... எங்க ஆத்தா, எங்க ஆயி, தாயின்னு எத்தனையோ மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். படித்த சில கபோதிங்க தான் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடுகிறார்கள். இத்துப் போன இதயமுள்ள மனிதப் போர்வையில் உலவும் மிருகங்கள்.
    Tuesday at 9:45pm · · 2 people
  • Liyakath Ali சபாஷ் ..சாதீக் ..சரியான சவுக்கடி..
    Tuesday at 9:52pm · · 2 people
  • Sakthi Sakthithasan அன்பின் நண்பரே !
    உள்லத்தைத் துளைக்கும் அருமையான் வினாக்களை வீசி சிந்தனைச் சக்கரத்தை சுழற்றியிருக்கிறீர்கள்.
    அன்புடன்
    சக்தி
    Yesterday at 5:00am · · 1 person




    விருப்பகுறியிட்ட நண்பர்கள்:-

Tuesday, October 13, 2009

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் - உரை -5









4 ன் தொடர்ச்சி...


மாற்று திறனுடைய என் உடன் பிறவா சகோதர சகோதரிகளே, தனிப்பட்ட முறையில் உங்களுக்காக எந்த ஒரு செய்தியையும் பேசவில்லையே என நீங்கள் நினைத்திருக்கலாம். நம்மைப் பற்றி என்னுடைய எண்ணங்களை மற்றொரு சமயத்தில் உங்களுடன் உறவாடுகிறேன். ஓரிரு விசயங்களை மட்டும் உங்களுடன் இந்த மேடையில் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஒன்று மது, புகை, போதை மற்ற தீயவழக்கங்களுக்கு உட்பட்டு விடாதீர்கள். இரண்டு எத்தனையோ உதவிகளை பெற வேண்டிய நிலையில் நாம் இருந்தாலும், இரத்தம்,கண், உடல் உறுப்பு தானம் செய்ய நீங்களும் பதிவு செய்து உதவுங்கள். அடுத்து உங்களுக்காக நானும், எனக்காக நீங்களும், நமக்காக மற்றவர்களிடமிருந்தும் தேவையான தகவல்களை கேட்டுப் பரிமாறிக் கொள்வோம். துணிந்து செயல்படுவோம், வெற்றியினைக் கைக் கொள்வோம்.

என்னைப் போல் பிரச்சாரம் செய்து வருகின்றவர்களுக்கும், உடல் ஊனமுற்ற நிலையிலும் மனஉறுதியுடன் திருவாரூர் திருதுறைப்பூண்டியிலிருந்து சென்னை வரை சைக்கிள் பயணமாக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட திருவாரூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க மாவட்ட செயலாளர் திரு. ஜெகதிசனுக்கும், உடன் வந்த சங்க நண்பர்களுக்கும் இந்த சிற்றுரையை சமர்ப்பிக்கிறேன். இத்தனை நேரம் நான் பேசியதை கவனமாக கேட்ட உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பு அளித்த அரிமா நண்பர் திரு மாம்பழம் முருகன் அவர்களுக்கும், அரிமா சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து முடித்துக் கொள்கிறேன். நன்றி. ஜெய் ஹிந்த்.