Translate

Showing posts with label இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். Show all posts
Showing posts with label இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். Show all posts

Sunday, December 31, 2017

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2018


புத்தாண்டே! புத்தாண்டே!!
புது கோலம் பூண்டவளே!!
இன்முகத்துடன் வரவேற்கிறோம்
இனிய உம் நாளினிலே.

இன்னல்கள் ஏதுமின்றி
இவ்வாண்டாய் நீயிருந்து,
புன்னகையுடன் அருளிடுவாய்
புவி முழுதும் தழைத்திருக்க.

மாற்றங்கள் இருந்தாலும்
மாசுகளின்றி அதுவிருக்க,
மங்களமாய் நடைப்போடும்
மாவாண்டாய் திகழ்ந்திடுக.

ஒளிரும் நாட்களாக
புவி கடந்தும் நீ விளங்க,
ஒப்பற்ற நல்லாண்டாய் நீயிருந்து
நாங்கள் மகிழ்வாய் வாழ அருளிடுவாய்

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். 💐💐🍭🍭🎉🎊🎇🎆

நலன் விரும்பும்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏