Translate

Showing posts with label சகோதரர் பிரகாசம் அண்ணார். Show all posts
Showing posts with label சகோதரர் பிரகாசம் அண்ணார். Show all posts

Wednesday, September 3, 2014

உங்கள் பிரார்த்தனைக்குரிய சகோதரர் பிரகாசம் அண்ணார் 2



இறைவன் வகுத்த 
இறுதி நாள் வரை,
இயங்கட்டும் வாழ்வு 
இன்னல்கள் ஏதுமின்றி.

நினைவுகளின் ஓடத்தில்
ஏக்கங்கள் எத்தனையோ!
விடையின்றி போகாமல்
வாழட்டும் அமைதியாக.

கூடட்டும் மகிழ்வு
கூடியவரை அதிகமாக.
இயன்றவரை இனிதாக
நினைக்கட்டும் மனது.

குறைக்கட்டும் நினைவு
சுமைகளை இனி.- மன
பாரங்கள் எல்லாம்
பனிப்போல் கரைய,

காலம் முழுவதும்
உடனிருந்து காக்க,
பணிவோம் இறைவனை
எம் அண்ணாருடன் இணைந்து.

#எங்கள் சகோதரர் பிரகாசம் அண்ணார் ( எங்கள் பெரியப்பார் மகன்) தற்போது வயது 77. தனது சித்தப்பார் குழந்தைகளான எங்கள் மீது, அவர் கொண்டிருந்த பாசம் அளவிட முடியாதது. சென்ற ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி காலை, அவர் வீட்டிலிருந்து சாலையைக் கடக்கும்போது டெம்போ வேன் மோதி பலத்த காயமடைந்து தற்போது தனியாக இயங்கும் நிலை அடைந்திருப்பதாக தகவல். இருப்பினும் அவர் காலத்தின் முடிவு வரை எந்த ஒரு இன்னல்களையும் அடையாமலிருக்க பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே

சகோதரர் பிரகாசம் அண்ணார் 1





அவரின் பாசம்
அளவிற்கரிது.
அதிர்ந்தது நெஞ்சம்
அறிந்த அக்கணம்.
அதிக இன்னலை 
அனுபவிக்கும் விதமாய்
அளித்திருக்கத் தேவையா
ஆண்டவனும் இவ்வண்ணம்.
ஆனாலும் காரணத்தை
அறிந்தவர்,
அவனின்றி யாரோ?


‪#‎எங்கள்‬ சகோதரர் பிரகாசம் அண்ணார் ( எங்கள் பெரியப்பார் மகன்) தற்போது வயது 77. சென்ற ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி காலை, அவர் வீட்டிலிருந்து சாலையைக் கடக்கும்போது டெம்போ வேன் மோதி பலத்த காயமடைந்து தற்போது தனியாக இயங்கும் நிலை அடைந்திருப்பதாக தகவல்.