Translate

Tuesday, December 29, 2015

கையால் இயக்கும் கார்.- வாழ்த்துங்கள்

நண்பர்களே! உங்கள் வாழ்த்துக்கள் இவருக்கும், எங்களைப்போன்ற மற்றவர்களுக்கும் ஓர் தன்னம்பிக்கை.




கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறனாளி இளைஞர்..!

மாற்றுத் திறனாளிகள் ஓட்டுவதற்கு வசதியாக கையால் இயக்கும் வகையில் காரை வடிவமைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் என்ற தன்னம்பிக்கை இளைஞர்.

இவரும் 3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்தான். ஆனாலும், தனது விடா முயற்சியால் இந்த சிறந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகிய அனைத்தயும் கால்களுக்கு பதிலாக கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.

அத்தோடு, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காரை வடிவமைத்து கொடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நன்மையை கருதி சேவை மனப்பான்மையோடு கட்டணம் எதுவும் பெறாமல் செய்து தருகிறார்.

எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயமாக கருதும் இந்த காலத்தில் உதிரிபாகங்களுக்கு செலவாகும் தொகையை தவிர கூடுதலாக தொகை எதுவும் பெறுவதில்லை என்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வியக்க வைக்கும் இந்த சாதனை இளைஞரை இதுவரை 15 கார் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு தொழில்நுட்பத்தை பேரம் பேசியுள்ளனர்.

ஆனால், தனது தொழில்நுட்பத்தை யாருக்கும் விற்கப் போவதில்லை என்று நம்மிடம் மன உறுதியுடன் தெரிவித்தார். ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரூ.58,000 வரையிலும், டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு ரூ.85,000 வரையிலும் உதிரிபாகங்களுக்கு செலவாகும் என்றார். இதுதவிர, 10,000 கிமீ.,க்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதற்காக ரூ.5,000 கட்டணமாக சேர்த்து செலுத்தினால் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவதாக கூறுகிறார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது. இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஐஐடி நிறுவனம் அங்கீகரித்துள்ளதோடு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார் கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து அணுகியுள்ளனர். இதில், வேதனையான விஷயமே ஜெர்மன் நிறுவனங்களுக்கு தெரிந்த உதயகுமாரை, மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசோ தெரியவும் இல்லை, கண்டுக்கொள்ளவும் இல்லை.

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுபோன்று காரை வடிவமைத்து தர விரும்பினால் கீழ்க்கண்ட அலேபேசி எண்ணில் உதயகுமாரை தொடர்புகொள்ளலாம்.
உதயகுமாரின் அலைபேசி எண்: 0-9940734277.(படத்தில் உதயகுமார்)

Relaxplzz

Monday, December 28, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.ஏ.எஸ். பயிற்சி


ஐ.ஏ.எஸ். படிக்கும் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். தடைக்கற்களையும் படிக்கற்களாக்கி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறவேண்டும் குறிக்கோளுடனும், முனைப்புடன் படிக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியதுவம் குறைந்திருந்தாலும், மக்களிடையே பெரும் மதிப்புள்ளது.
உடல் குறையோடு வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளை, அதிகாரத்தின் உச்சியில் அமரவைக்க ஆசைப்படுகிறேன். அதனால் தான் நாமக்கல் கலெக்டராக இருந்தபோது, நாமக்கல்லில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை ஆரம்பித்து வைத்தேன் என மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை துவக்கி வைத்து, சென்னை அறிவியல் நகர துணைத்தலைவராக பணியாற்றி வரும் சகாயம் அவர்கள் உரையாற்றினார்.
#மேலும் மதுரைக்கு அருகிலுள்ள ஒரு அரசு பள்ளியில் பேசும்போது, ஐ.ஏ.எஸ். முடித்து பணியில் சேர்ந்து 23 வருடங்களில் 23 முறை பணியிடைமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறேன். இது என் நேர்மைக்கு கிடைத்த பரிசு எனவும், புவிப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி ( 33 சதவீதம் ) மரங்கள் இருக்க வேண்டும் என வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஆனால் 11 சதவீத மரங்கள்தான் உள்ளது. இது கவலைக்குரியது. நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்தபோது 20 இலட்சம் மரக்கன்றுகள் பள்ளி மாணவர்களால் நடப்பட்டன. இங்கும் அதுபோல் நடப்படவேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களால்தான் தமிழ் வளர்கிறது. எந்தநிலைக்கு உயர்ந்தாலும் தாய்மொழியான தமிழையும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும் பேசினார்.

இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள் - Anandaradje Auguste


Anandaradje Auguste 

மாப்பிள்ளை ஆனந்தராஜ் அகஸ்த் மற்றும் குடும்பத்தினருக்கு,

மறை ஒலிக்கும் உள்ளத்தில்,
இறையவர் எந்நாளும்.
உறைக் கொள்வார் நிலையாக,
நிறை பங்காய் தந்தருள்வார்.
உன்னதமாய் உம் வாழ்க்கை
உருக்கொள்ளும் இத்தருணத்தில்,
உவப்புடன் வாழ்த்தினோம்,
ஆண்டவரின் நல்லாசிருடன்
குடும்பமது நலனாக! மகிழ்வாக!!
வளரட்டும் உயர்வாக!!!
இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பாசமுடன்
அப்பா, அம்மா
ஸ்ரீமதி.சோபனா முரளி.

Tuesday, December 22, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் -Liyakath Ali




துணையோடு இணையாய்.
இளமையோடு இனிமையாய்
சுவையான வாழ்வாய்
சுகமோடு மேலும்
திருமண வாழ்விலும்
நூறாண்டை நலமுடன் கடக்க,
ஆண்டவர் அருள்
அணைத்துமைக் காக்க.
வாழ்த்துக்கள் பகிர்ந்தோம்
மகிழ்வுடன் நாங்கள்.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய நண்பரே.      

Wednesday, December 9, 2015

வீட்டில்



அம்மியிலும், உரலிலும்
அரைப்பதையும் ஆட்டுவதையும்
மறந்த இக்காலப்பெண்டீர்,
தாத்பரியத்தை உணராமல்
அதிர்ஷ்டமென
வாங்கி வைக்கின்றனர்
வீட்டில் கடமைக்காய்


உல்லாசம் - குறுங்கவிதைகள்

சலனமின்றி ஒரு நொடி
சகலமும் நின்று போனால்!
சடுதியில் மாறுமே
சகலமும் தொடர்ந்து.




காலம்

வளர்பிறை முடிந்து
தேய்பிறையில்
வாழ்க்கை.


உல்லாசம்

இழந்தது
தன் *பொருளை.

*அர்த்தத்தை


அங்கிள் ஆண்ட்டி

வளம் கொழித்த தேன்தமிழில்
உயிரிழந்து மறைந்தது
பல உறவு சொற்கள்,
இவ்விரு சொல்லால்.

  


 பண்ணார் தமிழே

கோடிகளில் நீ
கோடியில் நான்.
கொட்டட்டும் உன்னழகு.

கொஞ்சி நான் புனைய. 

எங்கே போனாலும்



பங்காளி சண்டை
பனைமரம் ஏற,
பதுங்கியிருந்த பனந்தேள்
பட்டென்று கொட்ட,
பதறித் துடித்தனர்
பல்லினைக் கடித்து.
முறைத்துப் பார்த்தனர்
ஒருவரையொருவர்

என்று பொங்கும் சுதந்திர தாகம்



எங்கோ பிறந்த
தமிழருக்கெல்லாம்
தாய்மொழி தமிழென,
தமிழிலே பொரிக்க,

தமிழன்னை பிறந்த
பொற்கொடி நாட்டிலே
தயக்கமென்ன,
ஒரேழுத்து தமிழிலே எழுத.

கிடைத்த சுதந்திரம்
தமிழுக்கில்லையோ?
அடிமையுணர்வு
இன்னும் அகலவில்லையோ?

ஒருவரி எழுத
ஓராயிரம் சிந்தனைகள்
ஒற்றியதைப் பார்த்தால்
ஒன்பதை தாண்டுகிறது
எழுத்துப்பிழைகள்.