Translate

Thursday, May 31, 2007

உங்களுடன் ஒரு அலசல்

ஆறு,கடற்கரை ஓரங்களில், மணற்பரப்பில் சிறுமணற்குழிகளைத் தோண்டி, சுவையான ஊற்றுநீர் எடுத்தும், குடித்தும் பார்த்திருப்பீர்கள். நீர் எடுக்க எடுக்க புது நீர் ஊறுவது போல,

தொட்டனைத் தூறும் மணற்கேணி
மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு. - 396 .

என்னும் வள்ளுவப்பெருந்தகையின் கூற்றுப்படி, நமது உடலானது மணற்கேணிப் போல, குறிபிட்ட காலத்திற்கு, ஒரு முறை குறிப்பிட்ட அளவு இரத்தம் எடுக்க எடுக்க புது இரத்தம் ஊறிக்கொண்டே இருக்கும்.
புது இரத்தமானது நம்மை சுறுசுறுப்புடனும், புத்துணர்வுடனும் வைத்திருக்கும். 16 வயதிலிருந்து 60 வயது வரை அனைவரும் 3 மாதததிற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம். உடல் நிலை சரியில்லாதவர்களும் மருத்துவர் ஆலோசனைப்படி இரத்ததானம் செய்யலாம்.

'புத்துணர்வுடன் வாழுங்கள்'
'புத்துயிர் பெற உதவுங்கள்'

அதே போல் தான் உடல் மற்றும் கண் தானமும். இந்திய நாட்டில் வருடத்திற்கு 2 இலட்சம் பேர் கண்களை இழக்கிறார்களாம். கிடைப்பதோ, 20 ஆயிரம் ஜோடி கண்கள்தானாம். என்னடா ரொம்ப சீரியஸ் மேட்டராக எழுதுகிறாரே என நினைக்க வேண்டாம். மேட்டர் சீரியஸ் தானே. போக போக ஜாலியாக.

சரி தானே !

விளையாட்டு



நானோ சிறுவனாக,
ஜோடியென சிரித்தனர்
மாமன் மகளை
என்னுடன் இணைத்து.

அறியா வயதில்
புரியா கேலியால்
நானும் அவளும்
ஓடினோம் வெளியே.

ஆடினோம் பாடினோம்
தனியாய் அமர்ந்து.
ஆர்வமாய் தொடங்கினோம்
சட்டிப்பானை வைத்து.
சண்டையில் முடிந்தது
அப்பா அம்மா விளையாட்டு.

கண் தானம் [Donate your eyeis & body parts after life]

கண்களை வழங்க
வரிசையில் இருங்கள்.
கண்ணொளி இல்லாதோர்
உமக்குப் பின்னால்
இப்புவியைக் காண.

விழி இரண்டு திறக்கட்டும்,
நீங்கள் கண் மூடியபிறகு.
ஒளி பரவ விடுங்கள்,
கண்களைக் கொடுத்து.

மானிடருக்கு
மகிழ்வுடன் வழங்கி,
மண்ணுக்குப் போகும் கண்களை
மண்ணிலே விடுவீரே உலவ.

நீங்களே போன பின்
உங்களுக்கு எதற்கு கண்கள் ?
பொருள் சேர்த்த உடம்போடு,
புகழுடம்பையும் சேர்ப்பீர்-
கண்களையும் உடலையும்
தானமாக் கொடுத்து.

நீங்கள் பார்த்து பார்த்து
சேர்த்தைப் போல,
அவர்களும் சேர்க்கட்டும்
உங்கள் கண்வழிப் பார்த்து.

ஏழேழுத் தலைமுறை சொத்தை
உறவுக்கு கொடுங்கள்.
கண்களை பிறருக்குக கொடுங்கள்
ஏழேழுத் தலைமுறையை கண்டு மகிழ.

உங்கள் மறைவுக்கு பிறகும்,
உங்களை மறக்காமல் இருக்க,
உலகுக்கு கொடுத்து உதவுங்கள்
உங்கள் கண்களை.

பல நன்மைகளை
வீட்டுக்கு செய்த நீங்கள்,
பெரிய நன்மை செய்யுங்களேன்
நாட்டுக்கு கண்களைக் கொடுத்து.

நீங்கள்
காணாத காட்சிகளையும்,
உங்கள் கண்கள்
தொடர்ந்து காணட்டும்.
பொன் போல பாதுகாத்து
பொருப்பாகக் கொடுங்கள்.
நிலையாக இருக்க,
நினைவாகக் கொடுங்கள்.

Wednesday, May 30, 2007

இரத்த தானம் [Donate Blood while living]

இறைவனால் வழங்கப் பட்டதை
நீங்களும் வாழ்ந்துக் கொண்டு
பலருக்கு வழங்கலாம்- இரத்தத்தை.

இறைவனால் படைக்கப் பட்டதை
இறைவனால் படைக்கப் பட்டவர்களுக்கு
தானமாக கிடைத்ததை
தானமாகக் கொடுங்கள்.


வீனாக்காதீர்கள் எதையும்
கொடுங்கள்- உங்களுக்கு
உபயோகம் இல்லாததை
உபயோகம் உள்ளவர்களுக்கு.
அதில் அடங்கட்டும்
இரத்தமும் கண்களும்.

வாழும்போது இரத்தத்தையும்
வாழ்ந்த பிறகு- இருவருக்கு
உங்கள் கண்களையும்
பலருக்கு கொடுக்கலாம்
உடல் உறுப்புகளை
தானமாக ! தானமாக !!

Sunday, May 27, 2007

தாயிக்கு சமர்பணம்

எனது அம்மாவுக்காக
***********************


விழி இரண்டு ஈந்தீர்
வாழ்வு இருவர் பெற்றார்
அவர் வழியே- உமை
நாங்கள் கண்டோம்.

உங்கள் விழி
வழியே
உலகை அவர்
கண்டார்.

செய்யும் செயலை
நிறைவாய்
துணிந்து செய்தீர்
மகிழ்வாய்.

இறைவணக்கம்

முதல்முதலில் கடவுள் வாழ்த்துடன் துவங்குவது, நமது வழக்கமாயிற்றே !!!!!!!!!!!.......... அதனால் வணங்குவோம் இறைவனை.

இறைவா............ !!!!!
=================

வெற்றியதை அடையும் போது
துள்ளி நான் குதித்தேன்.
தோல்விதனை உணரும் போது
துவண்டு நான் விழுந்தேன்.

வெற்றியிலே மகிழ்வுமில்லை
தோல்வியிலே வருத்தமில்லை
என்ற நிலை நான்னடைய
பக்குவமான மனத்தினை
தந்து நீ அருள்வாயே !

பகுத்தறிந்து பாடுபட
உள்ளத்திற்கு திறனளித்து
உயர்வடைய
செய்வாயே !!

நித்தம் நித்தம்
துதி செய்து
உன் பாதந்தனில்
பணிந்திருப்பேன் !!!

பனி போல
துன்பந்தனை
நீக்கி எனை
காப்பாயே !!!!!!!



  • வாழ்த்துரை வழங்கிய முகநூல் நண்பர்கள்:-
    • Murugan Loganathan என் அன்புபான இறைவணக்கம் வணக்கம் ....
      February 9 at 7:33pm · · 1 person
    • Poovalur Sriji நன்றாக இருக்கிறது!
      ஆனாலும் "பகுத்தறிந்து" என்றாலே கடவுளை திட்டுவது என்று இருக்கும்போது, "பகுத்தறிந்து பாடுபட" என்பது "பக்குவம்தெரிந்து" என்று இருக்கலாமோ? !!!
      February 9 at 7:59pm · · 3 people
    • வீரபாண்டியன் Veera
      பனி போல
      துன்பந்தனை
      நீக்கி எனை
      காப்பாயே !!!!!!!

      அருமையான இறைவணக்கம் சார், வாழ்த்துக்கள்.
      February 9 at 8:10pm · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@Poovalur Sriji :- " "பகுத்தறிந்து" என்றாலே கடவுளை திட்டுவது என்று இருக்கும்போது, "பகுத்தறிந்து பாடுபட" என்பது "பக்குவம்தெரிந்து" என்று இருக்கலாமோ? !!!" உண்மையிலேயே தற்போதைய சூழ்நிலையில் பல தமிழ்சொற்களின் பொருள் மாற்றி உணர, உணர்த்தபட்டுவிட்டது. பக்குவம் தெரிந்து - இடம், பொருள் தெரிந்து. அருமையான விளக்கம் சகோதரரே. மிக்க மகிழ்ச்சி.
      February 9 at 8:21pm · · 2 people
    • Nadarajah Kandaih அற்புதம் .நல்ல நிலத்தில் சரியான நேரத்தில் பெய்த மழை போல உள்ளது
      February 9 at 9:24pm · · 3 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@Nadarajah Kandaih :- வணக்கம் சகோதரரே. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் கருத்தறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. இரவு வணக்கம்.
      February 9 at 9:35pm · · 2 people
    • Palaniappan Chidambaranathan Rajapalayam இரவு வணக்கம்.
      February 9 at 9:56pm · · 1 person
    • M Venkatesan MscMphil அருமை
      February 10 at 5:30am · · 1 person
    • ரவி சாரங்கன்
      ஜெய் ஸ்ரீமன் நாராயணா
      //நித்தம் நித்தம்
      துதி செய்து
      உன் பாதந்தனில்
      பணிந்திருப்பேன் !// மாம் ஏகம் சரணம் வ்ரஜா கண்ணன் சொல்கிறான் என் ஒருவணையே சரணடை உன் துண்பங்களை போக்குகிறேன் என்று.
      இறைவனை துதித்தால் பக்குவம் ஆறிந்து + பகுத்தறிந்து பாடுபட உள்ளத்திற்கு திறன் வந்திடும்.
      அருமை அருமை மிக அருமை தவப்புதல்வன்
      February 10 at 6:09am · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ரவி சாரங்கன்:- வணக்கம் சகோதரரே. ஸ்ரீ ராம்பிரானின் கருணையும், தங்கள் ஆசிகளும் என்றுமே தேவை.
      February 10 at 6:10pm · · 1 person
    • Nadarajah Kandaih சரியானதும் யதார்தமான கருத்த்க்களை காணும் போதூஉங்கள்மீதான உறவு பலமடைகின்றது.சரியான்நேரத்தில் பெய்த மழையால் பயிர்தழைத்தோங்குவதுபோல் ப்க்குவமாக கூறி அறிவுறித்தியுள்ளீர். நன்றி
      February 11 at 8:24pm · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@Nadarajah Kandaih :- வணக்கம் சகோதரரே. மீண்டும் எமை பாராட்டியமைக்கு மகிழ்வுடன் மீண்டும் நன்றி.
      February 11 at 8:31pm ·
    • ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா ‎"வெற்றியிலே மகிழ்வுமில்லை
      தோல்வியிலே வருத்தமில்லை
      என்ற நிலை நான்னடைய
      பக்குவமான மனத்தினை
      தந்து நீ அருள்வாயே!"
      5 hours ago · · 2 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா :- வணக்கம். மகிழ்ச்சி நண்பரே, தங்களின் கருத்தியம்பியதற்கு.
      3 minutes ago ·


      விருப்பக்குறியிட்ட முகநூல் நண்பர்கள்:-