Translate

Showing posts with label எதையோ சொல்ல நினைத்தேன். Show all posts
Showing posts with label எதையோ சொல்ல நினைத்தேன். Show all posts

Sunday, December 10, 2017

எதையோ சொல்ல நினைத்தேன் -2


சாவியை
தொலைத்தான்
வாலிப வயதில்

முட்டி மோதினான்
பால் குடிக்க.
எட்டி உதைத்தது
கனவிலும் கழுதை.

சுழற்காற்றில்
எதை தேடுகிறது
குப்பைகள்

உன்னில்
எதைக் கண்டேன்
உருகுழைந்து நான்

பாசத்தால்
பழியேற்கிறேன்
பஞ்சமா பதகத்தை.


--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏

எதையோ சொல்ல நினைத்தேன் - 1



நெருங்குகிறது பதினெட்டு
பெருகுகிறது நட்புக் கூட்டம்.

கதை கந்தலானது
இடை செருகல்கள்.

நட்புகளுக்கு
இடையே
கருநாகம்

செல்லாத நோட்டு
செல்லரித்த உறவு.

வரட்சியின் பிடியில்
பறந்த உறவு.

உப்புநீரில் வாழ்ந்தாலும்
உப்பின்றி ஆகாது கருவாடு.


--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏