Translate

Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Monday, December 20, 2010

அம்மா........





உயிரின்றி நீ மறைந்தும் போகலாம்
உனை நான் மறந்தும் போகலாம்.
உறவு மட்டும் போகாதே
நீ எனைப் பெற்றதினால்.


- தவப்புதல்வன்.

Monday, June 30, 2008

எங்கள் தாயோ தசலட்சுமி !

எங்கள் பரம்பரையில், ஓர்படியாக-
இவரொரு தனலட்சுமி.

எங்களை ஈன்றெடுத்த
இவர் சந்தானலட்சுமி.

பகிர்துண்ணும் பழக்கத்தை
வளர்த்த தான்யலட்சுமி.

அன்பான அறவணைப்பில்,
ராஜலட்சுமி.

அறிவுக்கண்களை
திறக்க வைத்த வித்யாலட்சுமி.

உடல் பிணியால் மனம்-
தளரா தைரியலட்சுமி.

வாழ்க்கை சாகரத்தை
வென்ற விஜயலட்சுமி.

அனைவரையும் கவர்ந்த
சௌபாக்யலட்சுமி.

எமது தந்தைக்கு அவரே
பாக்யலட்சுமி.

என்றென்றும் எங்கள்
நினைவில் மகாலட்சுமி.

பின்குறிப்பு:::
எங்கள் தாய் இப்புவுலகை விட்டு இறைவனடி அடைந்த சமயத்தில் எழுதிய இக்கவிதையை, அவர் நினைவுநாளில் உங்கள் முன் சமர்பித்திருக்கிறேன்

Wednesday, November 28, 2007

அம்மாவுக்கு என்றுமே !!

பாப்பா பிறந்தாள்
அம்மா மடியில் குழந்தையாக।

சின்னஞ்சிறு குழந்தையானாள்
அம்மா மடியில் குழந்தையாக।

சிறுமியுமானாள்
அம்மா மடியில் குழந்தையாக।

குமரியுமானாள்
அம்மா மடியில் குழந்தையாக।

குடும்பத்தின் தலைவியுமானாள்
அம்மா மடியில் குழந்தையாக।

கருவும் சுமந்தாள்
அம்மா மடியில் குழந்தையாக।

பாப்பாப் பெற்றெடுத்தாள் ( ஈன்றெடுத்தாள் )
அம்மா மடியில் குழந்தையாக।

என்றுமிருப்பாள் அவளும்
அம்மா மடியில் குழந்தையாக।

அம்மா உள்ளவரை
அம்மா மடியில் குழந்தையாக.