Translate

Showing posts with label அஞ்சலி கவிதை. Show all posts
Showing posts with label அஞ்சலி கவிதை. Show all posts

Monday, August 17, 2015

அஞ்சலி கவிதை - E.ஆரோக்கியதாஸ்





E.ஆரோக்கியதாஸ்


உயிர்ப்பும் உயிரும் 
நானென இருந்து,
உறவை மறந்து
பறந்தது ஏனோ?

நிழல் தரும் மரமாய்
நீயாய் இருக்க,
இடமதை பெரிதாய்
தந்திட கருதி,
உனை வீழ்த்தி கொண்டதேனோ?

இடமோ காலியாய்
பெரிதாய் இருக்க,
நிழலின்றி போனதே
இளைப்பாறி மகிழ,

ஏனிந்த அவசரம் - உனை
ஆண்டவர் அழைத்தார்
விரைந்து சென்றாயோ
தேடியங்கு நீயும்.

துக்கங்கள் எங்களுக்குள்
தூக்கலாயிருக்க,
பாவங்கள் களைந்து
ஆண்டவர், உமை
தொழுவத்தில் ஏற்க,
துதிப்போம் தினமும்
நாங்கள் "ஆமென்" கூறி.

#எங்கள் நண்பரும், அண்மை வீட்டுக்காரரும், எங்கள் தெரு நன்மக்கள் நலசங்க உருப்பினரும், சேலம் நகர காவல் துறையை சேர்ந்தவருமான அன்னார் E.ஆரோக்கியதாஸ் நேற்று (16/08/2015) அன்று இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் பகிர்ந்துக் கொள்கிறோம்.

Saturday, June 27, 2015

நினைவஞ்சலி - சகோதரி வசந்தா ஹரிகிருஷ்ணன் - 26/06/2015

காணும் முகங்களில் - உமைக்
காண, நான் துடித்தேன்.
என் செவியொலி குறைந்தாலும்
உம் குரலோசை அகலவில்லை.
வாடாத மலர்கள் எம் மனத்தில்
உமக்காக நிறைந்திருக்க,
உமது காலடியில் தூவுகிறேன்
உமை மனத்திலே அமர வைத்து
எமை விட்டு நீங்கள் பிரிந்த
மறக்கவியலா இந்நாளில்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

Monday, April 26, 2010

யாரும் அறியா நிலையினிலே!

உறவை எல்லாம் விலக்கித்தான்

உலகைப் படைத்த இறையிடம் தான்

உடலை விட்டு பிரிந்துத்தான்

உயிரும் நீங்கிப் போனதை தான்

உறவும் அறிந்த நிலையில் தான்

உணர்ந்து உருகி போனதில் தான்

உகுக்கும் கண்ணீர் துளிகள் தான்

உமக்கு செலுத்தும் அஞ்சலி தான்.

பின்குறிப்பு:
எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரரும், எமது பெரியப்பாவின் மூத்த மகனுமான A.R. வெங்கடேசன் அவர்கள் இறைவனடி அடைந்ததை ஒட்டி செலுத்தப்பட்ட கண்ணீர் அஞ்சலி கவிதை.
பூத்தது:24 /02 /1936.
உதிர்ந்தது: 16/04 /2010 .