Translate

Showing posts with label நெகிழியை நீக்க மாரத்தான். Show all posts
Showing posts with label நெகிழியை நீக்க மாரத்தான். Show all posts

Saturday, January 1, 2011

நெகிழியை நீக்க மாரத்தான்



நெகிழியை நீக்க மாரத்தான்.


ஓ..வென சத்தம்
ஓடி வந்து பார்த்தேன்.
மலையருவிப் போல
மகிழ்ச்சியின் வெள்ளம்.
என்னவென கேட்டபடி
எட்டியேப் பார்த்தேன்.
திக்கெட்டும் கீட்டம்
திருவிழாப் போல.
நெகிழியை நீக்க
நெடியதொரு பயணம்.
உள்ளதை அறிய
ஊட்டி விட முனைந்தோம்.
ஊணையும் உலகையும்
ஊனமின்றிக் காக்க,
விழித்தெழச் சொல்லி
விழிப்புணர்வுப் பயணம்.
வெற்றியின் படியில்
வெகமுடன் விரைவோம்.
விழிப்புடன் இருந்து
விவேகமுடன் செய்வோம்.
எத்தனையோப் படிகள்
நம்முன் இருக்க,
முதல்படி இதுவென
முயல்வோம் தொடர்ந்து.

-தவப்புதல்வன்.