Translate

Showing posts with label JP's கவிதைகள். Show all posts
Showing posts with label JP's கவிதைகள். Show all posts

Friday, May 22, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - சுபஹர், நித்யா - JP's கவிதைகள்



அனைவரின் அன்புடன்
ஆனைமுகனின் ஆசியால் 
இன்ப வாழ்வு நிலைக்க
ஈசனின் இறையருளால் 
உடலும் உள்ளமும் நலமுடன் திகழ
உலகளந்த பெருமானின் உந்துதலால்
ஊக்கமும் ஆக்கமும் பெற
என்றுமே எந்நாளும் ஏற்றமே  அடைய
ஐயமின்றி அருள்வான்.
ஒப்பில்லாப்பன் ஓங்காரநாதன்
ஔதடமாய் எஃகினைப் போல் உறுதியளிக்க
ஆசிகள் எங்கள் நல்லாசிகள்.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

By: JP's கவிதைகள் 

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - ரகுராம் சுரேகா - JP's கவிதைகள்



நல்வாழ்வும், செல்வ செழிப்பும்
கடவுளின் கருணாவிழி கடாஷமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு
நீவீர் இணைந்து இல்லறம்
நல்லறமாக நடத்த
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

#எமது படைப்புகளுடன், ''JP's கவிதைகள்'' என்ற தலைப்பில் எமது சகோதரி எழுதிய, எழுதும் வாழ்த்துக்கள் இந்த ஆம்பல்மலர் வலைதளத்தில்  தொடரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள்,
தவப்புதல்வன்.