Translate

Showing posts with label சூறாவளி. Show all posts
Showing posts with label சூறாவளி. Show all posts

Friday, February 25, 2011

கேள்விகள் எதற்கு?

நாடி வந்தாய் எனை
நடத்தி விட்டு போ.
உடலுக்கென வந்தவன் நீ
உணர்வுகளை அறிவாயா?
வெளியேறி வந்தாலும்
வேற்றுமைப் பார்ப்பாய்.

வருமானமே குறி
வயிற்றை நிரப்ப.
கவலையில்லை எனக்கு
கற்பைப் பற்றி.

கதறி அழுத
காலமும் போச்சி.
மானம் காக்க
மார்க்கம் இல்லை.
காரி உமிழ்கிறேன்
காரிருளில் தள்ளியவனை.

விருப்பமின்றியே
விளைமகளாய் நானும்.
ஆணவக்காரனையும்
அடக்கி ஆள்வேன்.

எனக்கும் தெரியும்
என்னைப் போல
எரியப் போகிறாய்
எயிட்ஸில் நீயும்.