Translate

Showing posts with label ஓம் நமோ நாராயணா!!!. Show all posts
Showing posts with label ஓம் நமோ நாராயணா!!!. Show all posts

Monday, August 10, 2015

ஓம் நமோ நாராயணா!!!



ஒருபோதும் உன் திருநாமம்
உச்சரிக்க மறந்ததில்லை.
எவ்வுயிரும் தன் வினையாக்க
உய்விக்கும் உன் அருள்வாக்கு.

அலையாடும் பாற்கடலில் பள்ளிக்கொண்டு
நிலையில்லா வாழ்நிலையை
பூடகமாய் சொன்னாயோ
பாமரன் யான் உணர.

அறியா திசையனைத்தும்
அருவமாய் நீயிருந்து
ஆட்சிதனை புரிகின்றாய்
அகிலமது நடைப்போட.

காக்கும் கடவுளாய் நீயிருக்க
கடைத்தேற்ற பணிகின்றேன்.
கைக்கூப்பா நிலையினிலும்
மனமுருக வேண்டுகிறேன்.

உறவற்றோர் யாரிருப்பார்
உன் உறவு இருக்கையிலே.
மனத்திலே நீ வீற்றிருக்க
விழித்தேட அலைகின்றேன்.

அஞ்ஞானம் மெய்ஞானம்  
அத்தனையும் உன்னிடமே.
அருளித்தான் எமைக் காப்பாய்
அனுதினமும் நலமாக.