Translate

Friday, April 17, 2015

செப்ப வேண்டும் - இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்- A.M.பத்ரி நாராயணன் ( தவப்புதல்வன் ) & ஸ்ரீமதி.B.ராஜராஜேஸ்வரி

இன்று எங்கள் 34வது வருட திருமணநாள் நட்புகளே.

34 வருடங்களை கழித்து 35வது வருட குடும்ப வாழ்வில் நுழைந்திருக்கிறோம். நட்புகளில் பெரியவர்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் மற்ற நட்புகளின் வாழ்த்துகளையும் அன்புடன் எதிர்ப்பார்த்து.




மஞ்சத்தில்  இணையாக
மகிழ்வாக உருண்டு விட்டோம்.

மீட்டெடுக்க முடியாமல்
மிச்சமதை தவற விட்டோம்.

மார் தட்டும் நிலையாக
வாரிசுகளை வளர்த்து விட்டோம்.

இல்லறத்தில் நல்லறத்தை
வாழ்விலே முடித்து விட்டோம்.

சூதறியா மனத்துடனே
சுற்றமதை அணைத்துக் கொண்டோம்.

உடன்பிறவா நிலையிருந்தும்
உற்ற நட்புக்கு சிறப்பளித்தோம்.

இறுமார்க்க இயலாதே - நம்
செயலனைத்தும் சரியென்றே.

செப்ப வேண்டும் சுற்றமுடன் நட்புமே
குடும்பமுடன் சேர்ந்திணைந்து. 

#இவ்வாழ்த்து 2011ம் வருடமே எழுதப்பட்டது.
  ஏனோ வெளியிடாமல் விட்டு விட்டேன்.
 தாமததத்தை தவிர்த்து வெளியிட்டு விட்டேன் 

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - A.M.பத்ரி நாராயணன் ( தவப்புதல்வன் ) & ஸ்ரீமதி.B.ராஜராஜேஸ்வரி



இன்று எங்கள் 34வது வருடதிருமணநாள் நட்புகளே.

34 வருடங்களை கழித்து 35வது வருட குடும்ப வாழ்வில் நுழைந்திருக்கிறோம். நட்புகளில் பெரியவர்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் மற்ற நட்புகளின் வாழ்த்துகளையும் அன்புடன் எதிர்ப்பார்த்து.

இனியவளே இன்று நமக்கு திருமணநாள்.
உமக்கு  திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ராஜராஜேஸ்வரி 



என்னவளே, உன்   நினைவுகளோ
நித்தமும் ஆட்சி செய்ய,

ஆரவாரமின்றி கழிகிறது
நாட்களது விரைவாக.

உரிமையென ஆனதினால்
உள்ளத்தையே பறிக்கொடுத்தோம்
விந்தையாய் இருக்கிறது
நாட்களது வருடங்களாய்
கணக்கிலது கூடியதை  நினைக்கையிலே

மயங்கித்தான் கிடக்கிறது
நினைவுகள் அத்தனையும்

உம் சேவைக்கு அளவுண்டோ
விரிவாய்
சென்றுக் கொண்டிருக்கையிலே.

பிரார்த்திப்பேன் இறைவனிடம்
எந்நாளும் நீ இன்புற்றிருக்க,

எவ்வாறு நன்றியுரைப்பேன் படைத்தவனுக்கு
உமை என்னவளாய்  கொடுத்ததற்கு


இனியவளே இன்று நமக்கு திருமணநாள்.
உமக்கு   இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ராஜராஜேஸ்வரி




#நான் சொல்லிலே காட்ட
 அவரோ செயலில் காட்டினார்
  ''விருந்து படைத்து''




Thursday, April 16, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - A.r. Ramesh Babu







A.r. Ramesh Babu

நினைவுகளின் ஓட்டத்தில்
நீந்துகின்ற நிலையின்று.
கடந்து விட்ட பாதைகளும்
கடக்க நினைகின்ற வழிகளும்
ஓவியமாய் முன்னிறுத்தி
அழகு பார்க்கும் திறனுமது.

ஆண்டவன் அருளால்
நலன்கள் கூடி
மகிழ்வாய் வாழ
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா.

யாருக்காக?






வெண்ணிலவே !
முழு நிலவாய்
உன் முகம் காட்டி
இரவினிலே மாவிளக்காய்
தனியாக மகிழ்வுடனே 
 நீ வலம் வருவாய்.

சிவந்திருந்த முகம் கண்டு
வெட்கத்தினால்
என நினைத்தேன்.
என் அருகில்
யாருமில்லா நிலையுணர்ந்து 
மூழ்கினேனே சிந்தனையில்,

யாருக்காக, 
நீ அழுதிருப்பாய்?

Tuesday, April 14, 2015

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015




நலனுக்கு குறைவின்றி,
மகிழ்வுக்கு பங்கமின்றி
நட்புக்கு களங்கமின்றி
கழிந்தன நாட்கள்.

கழியட்டும் இனியும்
மேலும் மெ
ருகடைந்து.
கூடட்டும் இறு
க்கமாய்
நட்பு மகிழ்வுடன்.

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுக்கும், நட்புக்கும்,
இனிய தமிழ் மன்மத புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மிக்க மகிழ்வுடன்

நிலையின்றி போனாலும்



இளமையில் கல்வி - உமது

வாக்கு அம்மா, வேதவாக்கு அம்மா.

இளகிய மண்ணில் - ஏர் உழவு

இலகவாகும், மிக இலகவாகும்.

இளம் வயதில் - பாடமது

பதிவாகும், ஆழப்பதிவாகும்.

பள்ளி வாழ்விலே - கற்பதில்

வேகம் வேண்டும், மிக வேகம் வேண்டும்.

படிப்பிலும் கலைகளிலும் இருக்க வேண்டும் - அது

அனுபவ  ஞானத்தை வளர்க்க வேண்டும்.

சிந்தித்து விடைதனை அறிய வேண்டும் - அதில்

புவிநிலை கெடாமல் இருக்க வேண்டும்.

கொள்ளும் பணிதனில் முழு சிரத்தை வேண்டும்

மனத்தைப் பண்படுத்தும் குருவினை மதிக்க வேண்டும்.

நட்ட விதை செழித்திட உழைக்க வேண்டும்

பண்டிதனென பெயரெடுக்க முயல வேண்டும்.

ஆக்கம் தரும் செயலுக்கு ஊக்கம் கொள்ள வேண்டும்.

அது மனித இனம் பயனடைய உதவ வேண்டும்.

நிலையின்றி போனாலும் பெயர் நிலைத்திருக்க வேண்டும்

உம் செயல்கள் அத்தனையும் நலம் பயக்க வேண்டும்.      

Monday, April 13, 2015

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015




மலர்ந்த இந்நாள்
மகிழ்வுகளைத் தரட்டும்.
நலன்கள் யாவும்
தொடரட்டும் இணைந்து.
வளமும் இணையட்டும்
தொட்டணைத்துக் கொண்டு.

மயக்கங்கள் மறையட்டும்
மாய உருப்போல அது.
விடியலாய் தொடங்கட்டும்
வாழ்க்கை இன்று.
வாழ்த்தினோம் அன்பாய்
வற்றா உறவையும் நட்பையும்.


இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Sunday, April 12, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - Murali Kasipadhi & Shobana Badri



Murali Kasipathy &
Shobana Badri

வீதியெங்கும் தோரணங்கள்
பட்டாடைகளுடன் சலசலக்க,
பவனியோ வாகனத்தில்
பரவசமுடன் தொடர்ந்திருக்க,
அத்துடன் நினைவுகளும்
தொடர்ந்ததே இணையாக.

காலமது மகிழ்வாக,

கடந்ததோ நிறைவாக,
வளர்பிறைகள் வானத்திலே,
வந்தனைக்கட்டும் நெஞ்சத்திலே,

குலதெய்வம் அருள் புரிய,

குதுகலமாய் நாட்கள் கழிய,
கொண்டாடும் நிலையாக,
நித்தமும் மகிழ்வாக,

நலனும் வளனும்

நாடி வந்து தோள் கொடுக்க,
உம் குடும்பமது சிறக்கவும் 
உயர்வாய் நீங்கள் வாழவும்,
நல்லாசிகள் வழங்கினோம்.


முன்கூட்டியே
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் இளம் தம்பதிகளே.

Saturday, April 11, 2015

மறந்து / மறைந்து போன....



ஏதேதோ நினைவுகள் 
முடிந்தவரை எழுத்திலே 
எண்ணியதைக்  கொட்டி வைத்தேன்
அத்தனையும் தாளிலே.

கோபுரமாய் இருந்தாலும்
கிறுக்கல்களாய் போனதினால்
சிக்கலாய் போனதே
சீர்படுத்த முடியாமல்.

மறந்துபோன சொற்களோ
மறைந்து நின்று பார்க்குதே
அரைகுறையான உருவை
அலங்கரிக்க இயலாதே.
அறுப்பட்ட உணர்வுகள்
அந்நியமாய் நிற்குதே.

உறவுக்கு






உறவுக்கு ஒன்றை சொல்லி வைத்தேன்.
சொன்னதை ஏனோ மறக்க விட்டேன்.
சொல்லாமல் இருக்க தவற விட்டேன்.
நினைவிலே இனியதை நிறுத்தி வைப்பேன்.

இன்றும் இனிதாகட்டும் நாள் நட்புகளே!

விழிகளை விரித்து














கனவு உலகில்

மிதந்த மனம்,

நிகழ்வு உலகில்

நுழைந்தது

விழிகளை விரித்து.


மகிழ்வான நாளாக அமைய

இனிய காலை வணக்கம் நட்புகளே, உறவுகளே!!

Thursday, April 9, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ‎Venkatesan Rajesh



Venkatesan Rajesh

சாதனையாய் செயல்களை
செய்து முடிக்க,
மடைத்திறந்த வெள்ளமாய் 
மகிழ்வுகள் பொங்கி வர,
ஆண்டவனின் அருள்
உடனிருந்து உமைக்காக்க
வாழ்த்தினோம் நாங்கள்
மகிழ்வுடன் உம்மை.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகனே.

Tuesday, April 7, 2015

சான்றோர் வாக்கு



உச்சியிலிருந்து
சறுக்கி விழுந்தால்
அடியோ பலம்
யானைக்கது.

எதுவுமேயில்லை
அற்பனுக்கது.
     - சான்றோர் வாக்கு

இயலாமல் - குறுங்கவிதை





சூட நினைத்தாலும்
பூத்திருப்பதோ வேறிடத்தில்.
தடையாய் வேலிகள்
தாண்டிட இயலாமல். 

நானொரு....




உன் விழி கூறும் செய்திகளை
மொழியாக்கம் செய்ததை,
அகராதியாய் தொகுத்து விட
முயன்றேன் குறியாக,

பொருளறியா செய்திகளோ
அளவின்றி குவிந்ததினால்
தொகுப்பதில் குறையதை
உணர்ந்தேனே முழுமையாக.

உன் நினைவுகளின் மழையினிலே
தடையின்றி நனைகின்றேன்,
தொடர்கின்ற நிகழ்வுகளினால்
திளைக்கின்றேன் மகிழ்வாக.

என் உடல்நிலை தளர்ந்ததை
ஊரறிய செய்து விட்டாய்.
கேள்விகளோ எனைத் துளைக்க
சல்லடையாய் ஆனாலும்
சலனமின்றி உன் நினைவில்
ஞானியாய் அலைகின்றேன்.

ஊர்வலம் - குறுங்கவிதை




உறவுகளின்
உற்சாக தொடர்வண்டி
நினைவுகளில் ஓடுகிறது,

நினைக்கும் போதெல்லாம்
சந்தோசமாய்
அழைத்துக் கொண்டு.

வாழ்க்கை - குறுங்கவிதை



வேண்டுமே
என்றும்
பியூஸ் போகும்
மின்விளக்காய்.

வேண்டாமே
திரி
கருகியணையும்
நெய் விளக்காய்.

தறிகெட்டு ஓடுகிறது



தந்தியை நினைத்ததேயில்லை
உன்னை சந்திக்கும் நாள் வரை.
தினமும் தொடர்கிறது 
தட் தட் ஓசையொலி.

சந்தோசத்திலும் எதிர்பார்ப்பிலும்
உடலெங்கும் போர் தொடுக்க,
தடைப்போட நினைக்கின்றேன்
உணர்வுகளின் வேகத்தை.

சட்ட, திட்டங்கள் ஆயிரம்
தகர்த்தெறிய பார்க்கிறதே
இளமையின் தாக்கத்தால்
கட்டுபாடுகளை இழந்து.

ஏதேதோ.... - குறுங்கவிதை


தர்மவானென பெயரெடுத்து
பிச்சைகாரனாக்குகிறாய் -
- உன்னிடத்தில்.
மடியைத் தா..
முத்தம் தா....
இப்படி ஏதேதோ....

தீராத -குறுங்கவிதை


பளபளக்கும்
நின் மென்கூந்தல்
கட்டுடலைத் தழுவி
புரளும் போதெல்லாம்
ஆசைதான் எனக்கும்

எழுத்துக்கள்.



சொட்டு நீர் பாசனமாய்
உம் விருப்பங்களால்
நனைகின்றன
எம் எழுத்துக்கள்.

இயற்கை உரமான
உம் கருத்துக்களால்
நிலையாக வளர்கிறது
செழிப்பாக.

Monday, April 6, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பேத்தி சாதனா முதலாமாண்டு பிறந்தநாள்.

வருடமோ ஓடியது
நினைத்தறியா வேகத்தில்
வளரட்டும் நின்னறிவு
நலனுடன் சேர்ந்திணைந்து.

குழந்தைகளுடன் குழந்தையாய்
கூடி நீ விளையாடி, - எங்களை
அடையச் செய்திடுவாய்
ஆனந்தத்தில் மூழ்க வைத்து.

என்றென்றும் ஆசிகளுடன்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பேத்தியே.

பாசமுடன்,
தாத்தா, பாட்டி.

அப்பப்பா...




காதல் உணர்வு வந்த பின்னே
கவிதைகளாய் பொங்குதடா..

தவழ்ந்து செல்லும் முகிழ் மீது
தாவிக் குதிக்கத் தோனுதடா..

கள்ளியில் பூத்த மலரும்
களிப்படைய செய்யுதடா...

கடுகி ஓடும் காற்றிடையே
கலந்து பறக்கத் சொல்லுதடா..

பனி படர்ந்த முகடுமீது
படுத்துறங்க நினைக்குதடா..

நினைவுகளின் வேகத்திலே
நீந்தி பார்க்க முயலுதடா...

இளஞ்சூடாய் இரத்தமதை
உடல் முழுக்க பரவுதடா...

ஒளியற்ற இரவினிலும்
விழி திறந்து கிடக்குதடா...

உணர்வற்ற உரோமங்களும்
குத்திட்டு நிற்குதடா..

பால் சுரக்கும் மடிப்போலே
எச்சிலது ஊறுதடா...

அவள்  நினைவு வந்தாலே
அத்தனையும் இனிக்குதடா.

நேரிலே கண்டதும்
கைக்கோர்க்க ,முயலுதடா

விழி கண்ட நேரமதில் (கோலமதில்)
மதி மயங்கி நிற்குதடா..

அளவுலாவும் நேரத்திலே
தோள் சாயத் துடிக்குதடா

எப்படி சொல்வேன்


காலத்தின் கோலத்தையா?
நிலையற்ற வாழ்வதையா?
நீயிருக்கும் நிலையதையா?
எதுவாக இருந்தாலும்
இறைத்தந்த கொடையாக
உன்னுயிரை நான் காப்பேன்.


ஒலியில்லா சொல் கொண்டு
கருவியில்லா இசையுடனே
தாலாட்டு நான் பாட
மடி மீது தலை வைத்து
உறங்கி விட்டாய்
மகிழ்வுடன் முகம் திகழ.


தொடுவுணர்வே தாலாட்டாய்
எம் கைகள் உனக்கிருக்க,
ஒளி காணா விழியதையும்
ஒலி கேளா செவியதையும்
நீ உணரா நிலையாக
நானிருப்பேன் துணையாக.

Friday, April 3, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ( Kalaimahel Hidaya Risvi )


தனக்கான சிறப்புகளை
ஆண்டவருக்கு உரியதாக்கி,
மட்டில்லா மகிழ்வுடன்
மாந்தர்க்கு உயர்வளிக்கும்
நல்முத்தாய் சொலிக்கின்ற
தமிழ்கவி 

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ( Kalaimahel Hidaya Risvi
அவர்களை 
ஒப்பில்லா  நலனோடு
நாட்களெல்லாம் இனித்திருக்க,
இறைவனைத் துதித்தே
பால்லாண்டு வாழ வாழ்த்தினோம்

தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களம்மா 

Thursday, April 2, 2015

கலைப்படைக்க



கலைப்படைக்கக் கைகளில்லை.
நடைப்பயில கால்களில்லை.
திறமைக்கோ குறைவில்லை.
படைக்கிறாய்
பிரம்மனுக்கிணையாக.
மணலாய் இருந்தாலும்,
கரைந்து போனலும்
அழியாதே புகழ் மட்டும்,
ரசனையுள்ளம் உள்ள வரை.
வாழ்த்துகிறோம் உமை
புகழ் சிறக்க வாழ்திடவே.


அறிந்தும்










விழிகளைப் பொத்தி
விளையாடும் நேரத்தில்
ரசித்து  நீயும்
அமைதியாய் இருப்பாய்.

கைகளை விலக்கி
விலகியே சென்றாலும்,
விழிகளை மூடி
இலயத்து இருப்பாய்.

அத்தனையும் அறிந்தும்
விளையாட்டு காட்டுவேன்
மகிழ்விலே நீயும்
மூழ்கி கிடக்க.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே .

Wednesday, April 1, 2015

குழந்தை பிறப்புக்கு வாழ்த்து



புதிதாய் பூத்த மலரிது
அழகு ரோஜா இதுவது
சாதனைக்கு உரு கொடுக்க
சாதனாவாக உருவெடுத்தாள்
தாயின் கருவறையில்
தனி இராஜ்ஜியம் கண்டயிவளோ,
உறவுகளை சோதித்தாள்
உள்ளிருப்பு நடத்தி.
வெற்றிப்பார்வை  படரவிட்டாள்
வெளியுலகைக் கண்டவுடன்.
நகலெடுத்த பிறப்பாக
நறுமணப் பொருளாக
ஒளி வீசும் விழிகளுடன்
ஒப்பற்ற பூமியிலே
அவதரித்தாள்
மென்பஞ்சு குவியலாக.


#சென்ற 2011ல் பேத்தி பிறந்தபோது எழுதியதுயிது 

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.......

ஆனந்த பூங்காற்றே!
அமைதியான ஆழ்கடலே !!
அற்புதங்கள் நிகழ்த்துகிறாய்
அனுதினமும் எனக்காக .

கவிஞனாய் எனை மாற்றி 
காவியமாய் நீ திகழ்கிறாய்
காலங்களையும் கடந்து
உணர்வுகளில் உரைந்திருக்க.

உன்னுடைய சிறு அசைவும்
உள்ளத்தைக் கிளர்ச்சியூட்டி
ஆராதனை செய்ய செய்யும்
பனித்துளியாய் சில்லிட வைத்து.


 

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி காட்டுகிறது
நாட்களோ எப்பொழுதும்,
ஓடிபிடித்து விளையாடுவோம்
அத்துடன் சேர்ந்துக் கொண்டு.

மகிழ்வான வணக்கங்கள் நட்புகளுக்கு.