Translate

Showing posts with label ஏங்கும் கடலலைகள். Show all posts
Showing posts with label ஏங்கும் கடலலைகள். Show all posts

Tuesday, June 28, 2011

ஏங்கும் கடலலைகள்.

பெருங்கடலின் கவியலைகள்

உம் கால்களைத் தொடவில்லையா?

உணர்வுக்கு எட்டவில்லையா?

கவனத்தை ஈர்க்கவில்லையா?

உம் தீண்டுதல்களின்றி

திரும்புகிறது அலைகளோ ஏங்கி.


கால்களால் அளைந்தால்

பூபாளம் பாடும்.

கைகளால் இறைத்தால்

களிப்படைந்து துள்ளும்.

அலையின் மீதே- உன்

விழி பட்டால் போதுமே,

விரைந்து (துள்ளி) வருமே

உம் கால்களை அணைக்க.