Translate

Showing posts with label என்றும் சொல்லுவேன். Show all posts
Showing posts with label என்றும் சொல்லுவேன். Show all posts

Sunday, December 31, 2017

விடியலில் நான்கு – 2 என்றும் சொல்லுவேன்



மனத்தில் பட்டதை சொல்லுகிறேன்
மறைக்காமல் சொல்லுகிறேன்
மறந்திடாமல் சொல்லுகிறேன்
மாற்றத்தை சொல்லுகிறேன்
மகிழ்ச்சியடைய சொல்லுகிறேன்
உமை நோக்கி சொல்லுகிறேன்
உரத்து நான் சொல்லுகிறேன்
உழைத்திட சொல்லுகிறேன்
உயர்வுக்கு சொல்லுகிறேன்
உறுதியாய் சொல்லுகிறேன்
உரைத்திட சொல்லுகிறேன்
உரிமையுடன் சொல்லுகிறேன்
அறிந்ததை சொல்லுகிறேன்
அறிந்துக் கொள்ள சொல்லுகிறேன்
ஆற்றலடைய சொல்லுகிறேன்
அன்பினால் சொல்லுகிறேன்
ஆனந்தமாய் சொல்லுகிறேன்
அளவுடன் சொல்லுகிறேன்
ஆர்வத்தால் சொல்லுகிறேன்
ஆக்கத்தை சொல்லுகிறேன்
ஆதங்கத்தை சொல்லுகிறேன்
செய்து முடிக்க சொல்லுகிறேன்
முரசிட்டு சொல்லுகிறேன்
முழக்கமிட்டு சொல்லுகிறேன்
முளைப்பதை சொல்லுகிறேன்
முறையிட்டு சொல்லுகிறேன்
முறையிட சொல்லுகிறேன்
முந்தானை பற்றி சொல்லுகிறேன்
மூழ்கியதையும் சொல்லுகிறேன்
கண்டதை சொல்லுகிறேன்
காண்பதை சொல்லுகிறேன்
கனவுகளை சொல்லுகிறேன்
கதைகள் பல சொல்லுகிறேன்
கவிதைகளையும் சொல்லுகிறேன்
கற்பனையையும் சொல்லுகிறேன்
கருத்தாய் நானும் சொல்லுகிறேன்
கருத்திட சொல்லுகிறேன்
கவனத்திற்கு சொல்லுகிறேன்
களிப்படைய சொல்லுகிறேன்
கூடி குழாவ சொல்லுகிறேன்
வணக்கமுடன் சொல்லுகிறேன்
வழி காட்டி சொல்லுகிறேன்
வக்கனையின்றி சொல்லுகிறேன்

வம்புக்கின்றி சொல்லுகிறேன்

வாய்ப்புகளை சொல்லுகிறேன்

வாய்ப்பறிய சொல்லுகிறேன்
வாழ்வதற்கு சொல்லுகிறேன்
வாழ்த்தி நானும் சொல்லுகிறேன்
வளர வாழ்த்து சொல்லுகிறேன்


#அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ஆக்கம்:-
தவப்புதல்வன்

A.M.பத்ரி நாராயணன்