Translate

Monday, October 29, 2018

எனைப் புரிந்துக் கொள்வாயா?



காணத உனைத் தேடி கண்டுக் கொண்டேன்.
காண வந்த உன்னிடம் மறைந்து போனேன்.
ஏக்கத்தில் நீயோ திரும்பிப் போனாய்.
உன் ஏக்கம் கண்டு குலைந்துப் போனேன்.
வார்த்தைகளின்றி வதங்கிப் போனேன்.
என் நிலை உனக்கு எப்படி சொல்வேன்.
மீண்டு நான் தேடி வந்தேன்
மீண்டும் வருவாயா, எனைப் புரட்டிப் பார்க்க?
நிலையில்லா இக்காலமிது
நீட்சி கொடுத்திருக்கு காலம் நமக்கு.


Monday, August 6, 2018

ஹைக்கூ



ஹைக்கூப்போட்டி - 5
+++++++++++++++++++

1) கூண்டுப் பறவைகள்
விடுதலையாகி பறக்கிறது
அச்ச எண்ணங்கள்.

2) பறவைகளுக்கு விடுதலை
கொடுத்தது திருகரங்கள்
வாழ்விற்கு நம்பிக்கை

✍️

தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.

🙏





குறையொன்றுமில்லை





குறையொன்றுமில்லை
++++++++++++++++++++++

குறை உருவாய் இருந்தாலும்,
மனத்திலே சேதமில்லை
மூளைக் காட்டிய வழியாலே,
கற்றுக் கொண்ட தொழிலாலே,
மூலைக்குள் முடங்கவில்லை,
வாழ்வதற்கும் அச்சமில்லை.. 15

படைப்பினிலே சமமென்றால்…
ஈர்ப்பதற்கு ஒன்றுமில்லை.
ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும்
எதிர் நீச்சல் நாம் அடித்தால்….
வெற்றியும் வசமாகும்.
பிறப்பிற்கும் பொருளாகும். 29

சீரற்ற வண்ணங்களால்
சிந்தனையை கவர்வதில்லை.
சித்திரமாய் உருவமைத்தால்
சிலிர்க்கவே செய்து விடும். 37

முடியாத குறைகளுண்டு
சிறப்பான செயல்களுண்டு.
ஆதாரம் அதற்குண்டு
ஆழ்ந்திட்டால் வெற்றியுண்டு.
அறிந்திடுங்கள் அதைக்கண்டு. 48

✍️

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.

🙏