Translate

Showing posts with label உறங்கும் உண்மைகள். Show all posts
Showing posts with label உறங்கும் உண்மைகள். Show all posts

Friday, December 15, 2017

உறங்கும் உண்மைகள்


உறங்கும் உண்மைகள்

தேடிய உண்மைகளோ

உறக்கத்தில் ஆங்காங்கே
விழிக்க வைக்க முயற்சித்தேன்
விடியல் கழிந்ததுதான் மிச்சம்.
வீதிகள் தோறும் குழித்தோண்டி
புதைத்துக் கொண்டிருந்தனர் எல்லோரும்.
ஆண்டவனும் அமைதியானார்
அளவில்லா குழிகளாலே.
கள்ளத்தன மயக்கத்தில்
மயங்கிக் கிடந்ததோ அத்தனையும்?
பகுத்தறிய நேரமின்றி
புறப்பட்டான் புதைத்துவர மற்றொருவன்.
நாடகமாய் காட்சிகள்
நிறைவேறிக்கொண்டிருந்தது பல இடத்தில்.
எந்த அடி பட்டாலது
விழிக்குமென தெரியவில்லை.
எனக்குள்ளும் பல உண்மைகள்
உறங்கிக் கொண்டிருக்கிறது அமைதியாக.
என்றுதான் விழித்திடுமோ 
உறக்கத்திலிருந்து உண்மைகள்?
விழித்தால் புவி தாங்குமோ?
புவி பறந்து போய் விடுமோ?

-- 
ஆக்கம்:- 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


Kannan Sasikannan *வாழ்த்துகள் குழுமம் *
15.12.2017 கவிதை போட்டியின் முடிவுகள்.
தலைப்பு :-" உறங்கும் உண்மைகள்"

பல கவிஞர் கள் தங்களின் திறனை அருமையாக வடித்திருந்தனர்.உறங்கும்,உறங்கிய உண்மையை பல பார்வையில் பதிவிட்டிருந்தார்கள்.
தேர்ந் தெடுக்கப்பட வேண்டிய கவிதைகள் சிறந்த மூன்று மட்டுமே.இயலுமா ?கொற்கை முத்துகள் எல்லாமே தரமானதே !
என்றாலும் என் அறிவுக்கெட்டிய அளவில் தேர்வு செய்துள்ளேன்.அவை் முதலில் கவிதை வடிவம்,அதில் சந்தம் கலந்தவை,கவிதையின் பார்வை,உட் பொருள் தலைப்பை தன்னுள் கொண்டது இப்படி இனம் பிரித்து தேர்விட்டுள்ளேன்.ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

இனி வெற்றியாளர்கள்:-
1. தவப்புதல்வன் அவர்கள்..நம்மகத்து உண்மைகளை நாமே எப்படி, ஏன் உறங்கவைக்கிறோம் என்ற உண்மையை உரைத்ததிற்காக.
2. யாழினி..காதலின் மறைந்த உண்மையை படிப்படியாக பதிவிட்ட கவித்துவத்திற்காக.
3. இருவர் ..அ.ஜீவா விவேகாநனந்தன் நிகழ்ந்த மரணங்களின் மறைக்கப்பட்ட உண்மைகளை பட்டியலிட்டதற்காக..
ஆ. Airtel Bird...இவர் தன்னுள் உறைந்து போன உண்மைக்காக தற்போது தரமாக வருந்திய பாங்கிற்காக...
என் அளவில் இவை மதிப்பிற்குரிய வை.மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம்.முடிக்கிறேன்..வாழ்த்துகள்... மகிழ்ச்சி....


Dhavappudhalvan Badrinarayanan A M வெற்றியாளர்களை அறிவிப்பதை விட, எதற்காகவென பட்டியலிடுவது கடினமான பணி. வெற்றி பெற்ற மற்ற கவிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஐயா Kannan Sasikannanஅவர்களின் படைப்பை வாசித்து விட்டு உண்மையிலேயே, இன்றைய போட்டியில் நாமில்லையென கருதினேன். ஆனால் அவரே நடுவராகி தேர்ந்தெடுத்ததுடன் விளக்கமளித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சிறந்த கவிஞரின் ஆசிர்வாதம் கிடைத்ததில் பூரிப்படைகிறேன். நானும் ஒரு முறை தலைமை ஏற்று கவிதைகளை தேர்ந்தெடுத்து, அறிவித்து விட்டு காரணங்களை தெளிவுபடுத்த நினைத்திருந்தேன். அச்சமயம் உடல்நிலை சீர்க்கெட்டு இதுவரை தொடர்வதால், அதை கிடப்பில் போட்டு விட்டேன். மகிழ்வுடன் இனிய இரவு வணக்கம். 🙏