Translate

Showing posts with label மனமொன்று உமக்கிருந்தால். Show all posts
Showing posts with label மனமொன்று உமக்கிருந்தால். Show all posts

Thursday, April 26, 2018

மனமொன்று உமக்கிருந்தால்,



தோளோடு தோள் கொண்டோம்.
தோளினால் வழி கண்டோம்.
உதவுவதற்கு வயதில்லை.
உயர்வான சிறுமியிவள். 10

தேவதையாய் உரு கொண்டாள்.
உணர்வுக்கு உயிர் கொடுத்தாள்.
அன்னையாய் பிறப்பெடுத்தாள்
வழி நடத்தி உணர்த்திட்டாள். 21

இயற்கை பிறழ்ச்சியால்  -விழி
இழந்து யாம் பிறந்தோம்.
கருதுகிறார் எமை பாவிகளாய்.
கலங்கவில்லை நாங்களொன்றும்.
அடியெடுத்து அடி வைப்போம்
அத்தனையும் முன்நோக்கி வைத்திடுவோம் 38

கணக்குகளோ முரண்பாடாய்
மாறி போக,
படைப்பில் அதுவும்
நிசமாகி போக,
விழிப்பார்வை இழந்தாலும், எமை
உள்ளுணர்வு வழி நடத்தும். 52

விழியிழந்து இருந்தாலும்
வீண்காலம்  கழிப்பதில்லை.
உருதுணையாய்
ஊன்றுகோலிருக்க
உழைப்பதற்கு அச்சமில்லை.
மனமொன்று உமக்கிருந்தால்,
காலம் கடந்தோரின்
விழிகளைத் தாருங்கள் தானமாக
மறுமலர்ச்சி தானேவரும்
எங்கள் வாழ்வில். 71




ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.


#பிறழ்ச்சி = தவறு, பிழை