அதுக்கும் தெரிஞ்சிருக்கு











விண் வெளுக்கும் துவக்கத்திலே
சோம்பல் களைந்து சுறுசுறுப்பு கொண்டிடவே,
ஐந்தறிவும் அறிந் திருக்கு
யோகாவின் அருமையைத் தான்.
இனி துறப்பீர்
விழித் திறக்கும் முன்பாக
சூடான சுவைக்குளம்பி,
விரல் ஆட, விழி ஓடும்
நாள் துவக்கக் கைப்பேசி.
துள்ளும் இளமையுடன்
புத்துணர்வு மனமுடன்
நொடிகள் ஒவ்வொன்றும்
சீராட்டி நம்மைக் காக்க,
நலமுடன் நாம் வாழ,
.
ஐயம் எதுவும் வேண்டாமே
பயின்றிடுவோம் அனைவருமே
யோகாவை உறுதியாக.
✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
No comments:
Post a Comment