Translate

Wednesday, June 29, 2011

ஓட்டமாய் - R.S பிறந்தநாள் வாழ்த்து 2011,

ஓட்டமாய் நாட்களும் விரைந்தே செல்ல,
இனிதாய் வருடமும் கழிந்தது ஒன்று.

இன்று தொடங்கும் உமக்கான வருடம்,
மேலும் வாழ்விரே இனிதாய் கடக்க,

நலமுடனும் மகிழ்வுடனும்
நாட்களும் கழிய,

பிறந்தநாள் மகிழ்ச்சி
என்றுமே நிலைக்க,

வாழ்த்துக்களை வழங்கினோம்
வாழ்வாங்கு வாழ.

இப்படியும் ஒரு வாழ்த்து

வாழ்த்துனக்கு கேடா?
பூமிக்கு பாரமாய்
வீட்டிற்கு சுமையாய்
வாழ்க்கையை ஓட்டி
வீணாய் கழிக்கும் - உனக்கு
வாழ்த்தொரு கேடா?

வேதனைகள் தந்தது தவிர
சாதனைகள் உண்டோ?
வயதும் கடக்குது
வாழ்வும் கழியுது (போகுது) வீணாய் கழிக்கும் - உனக்கு
வாழ்த்தொரு கேடா?


உறவுக்கும் நீ துணையில்லை.
மகிழ்வும் நீ தரவில்லை.
கற்றதும் நிலையில்லை.
அனுபவமும் பயனில்லை.
வீணாய் கழிக்கும் - உனக்கு
வாழ்த்தொரு கேடா?

எண்ணத்திலே தெளிவில்லை.
எழுத்திலே நிறைவில்லை.
மூடனாய் நீ
முதுமையைத் தொட்டாய்.
வீணாய் கழிக்கும் - உனக்கு
வாழ்த்தொரு கேடா?

செப்ப வேண்டும் - இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்

இன்று எங்கள் 34வது வருட திருமணநாள் நட்புகளே.

34 வருடங்களை கழித்து 35வது வருட குடும்ப வாழ்வில் நுழைந்திருக்கிறோம். நட்புகளில் பெரியவர்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் மற்ற நட்புகளின் வாழ்த்துகளையும் அன்புடன் எதிர்ப்பார்த்து.



மஞ்சத்தில்  இணையாக
மகிழ்வாக உருண்டு விட்டோம்.

மீட்டெடுக்க முடியாமல்
மிச்சமதை தவற விட்டோம்.

மார் தட்டும் நிலையாக
வாரிசுகளை வளர்த்து விட்டோம்.

இல்லறத்தில் நல்லறத்தை
வாழ்விலே முடித்து விட்டோம்.

சூதறியா மனத்துடனே
சுற்றமதை அணைத்துக் கொண்டோம்.

உடன்பிறவா நிலையிருந்தும்
உற்ற நட்புக்கு சிறப்பளித்தோம்.

இறுமார்க்க இயலாதே - நம்
செயலனைத்தும் சரியென்றே.

செப்ப வேண்டும் சுற்றமுடன் நட்புமே
குடும்பமுடன் சேர்ந்திணைந்து. 

#இவ்வாழ்த்து 2011ம் வருடமே எழுதப்பட்டது.
  ஏனோ வெளியிடாமல் விட்டு விட்டேன்.
 தாமததத்தை தவிர்த்து வெளியிட்டு விட்டேன் 

Tuesday, June 28, 2011

கருத்திலே கொள்ளவில்லை

காதலித்த எனை நீ கருத்திலே கொள்ளவில்லை.

எழுதி வைத்த எழுத்துகளும் ஏட்டிலே காணவில்லை.

நினைவிலே எனை வைத்த நீயும் எங்கோ காணவில்லை.

மலர் பூத்தத் தோட்டதிலும் வாசமும் காணவில்லை.

மிதந்து வந்த காற்றிலும் தென்றலாய் குளுமையில்லை.

பனி பொழியும் வைகரையில் பாழும் மனம் இலயிக்கவில்லை.

மென்பஞ்சு படுக்கையிலும் மதி உறக்கம் கொள்ளவில்லை.

எனை மறந்த நிலையிலும் உனை மறக்க முடியவில்லை.

எனை பார்த்து சிரிக்குதடி நீ விரும்பிய உணவுகளும்.

உயிரும் உனக்காய் ஆடு(கு)தடி உண்ணநோண்பு எடுத்துக் கொண்டு.

எனக்கு உரிமை இல்லையடி அவன் கவர்ந்த பின்னாலே.

கலங்கிப் போய் இருக்குதடி கற்றுக் கொண்ட வித்தையெல்லாம்.

உடலெல்லாம் துடிக்குதடி எனை உதறிய விபரமறிய.

அழுத்தமாய் தெரியுதடி இருட்டிலும் உன் உருவம்.

பகலிலும் தெரியுதடி பக்கமெல்லாம் உன் உருவம்.

மனம் உன்னை மறக்காதடி மரணம் தழுவும் நேரத்திலும்.

எனை வாட்டிக் கொல்லுதடி எனைத் துறந்த ஏக்கம் மட்டும்.

பாலையாய் தெரியுதடி படர்ந்து நடந்த இடங்களெல்லாம்.

நினைவுகளும் கசக்குதடி நீயில்லா நிலை உணர்ந்து.

இரண்டு மனம் வேண்டுமடி கவி சொன்ன நிலைப்போல.

மறந்து வாழ வேண்டுமடி நினைவிலே ஒன்று மூழ்கிருக்க.

முடிவின்றி தெரியுதடி காட்டு வழி பாதைப்போல.

முகர்ந்து முகர்ந்து பார்க்கிறேன் நீ தொட்ட பொருளையெல்லாம்.

தொட்டுத் தொட்டுப் பார்க்கிறேன் உனைத் தழுவிய உடைகளையும்.

சுற்றி சுற்றி வருகிறேன் ஒன்றும் அறியா குழந்தைப்போல .

உன் வாசம் இருந்திடவே உள்ளறையை பூட்டி வைத்தேன்.

வருடங்கள் கழிந்த பின்னும் வழிப்பார்த்து நிற்கிறேன்.

இறைவனின் முடிச்சு என்றேன் நீ அருகிலிருந்த போதெல்லாம்.

கட்டவிழ்ந்து போனதோ, நான் கண்ட

நினைத்துத்தான் பார்க்கிறேன் நீ விலகியப் பின்னாலே.

இடையிலே ஏன்

என் நினைவிலே நீயும்
நிலையாய் இருக்க,

படுத்துறங்கும் நேரம்
கதையொன்றைச் சொன்னாய்.

கேட்கும் தோரணையில்
"உம்"மதைக் கொட்டினேன்.

துளிகளாய் நேரம்
கடந்தே செல்ல,

விழிகளை உறக்கம்
கவ்விக் கொள்ள,

"உம்"மென்ற ஒலியும்
தேய்ந்து போக,

மின்வெட்டாய் அதுவும்
துண்டித்து போக,

விடிந்ததும் கேட்டேன்
இடையிலே ஏன், விட்டாயென...

ஏங்கும் கடலலைகள்.

பெருங்கடலின் கவியலைகள்

உம் கால்களைத் தொடவில்லையா?

உணர்வுக்கு எட்டவில்லையா?

கவனத்தை ஈர்க்கவில்லையா?

உம் தீண்டுதல்களின்றி

திரும்புகிறது அலைகளோ ஏங்கி.


கால்களால் அளைந்தால்

பூபாளம் பாடும்.

கைகளால் இறைத்தால்

களிப்படைந்து துள்ளும்.

அலையின் மீதே- உன்

விழி பட்டால் போதுமே,

விரைந்து (துள்ளி) வருமே

உம் கால்களை அணைக்க.

Wednesday, June 22, 2011

வேசமிட்ட நண்பன்

நண்பனென்றே நம்பினேனடா!!!



உண்மையைச் சொல்லித் தோலைத்து விட்டேன்.
மதிப்பும் மரியாதையும் இழந்து விட்டேன்.
நட்புக்குறியவன் என்றிருந்தேன்.
உடனிருந்து குழி தோண்டி விட்டான்

நண்பனென்றே நான் நினைத்தேன்,
நயவஞ்சகன் என அறியாமல்.
என்னுடன் துணையாய் இருந்துக் கொண்டே,
துரோகக் கூலியையும் பெற்றுக் கொண்டான்.

இரட்டை வேடங்களில் வல்லவனாய்,
நினைத்ததை அவனும் முடித்து விட்டான்.
என்னைப் போலவே அவளும் தான்
ஏமார்ந்ததை நானும் அறிந்தேனே.

காசுடன் என்னுடன் விளையாடி,
களவாடி செல்ல உடனிருந்தான்.
கற்பிலே அவளுடன் விளையாடி,
கனவுகளை கலைத்து சென்று விட்டான்.
கண்ணீரிலே மிதக்க செய்து விட்டான்.
செயல்கள் வேறாய் இருந்தாலும்,
ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றமே!!!

காற்றாய் மறைந்தான்

கண்டேன் அவனை

கலந்தது கண்கள்

கவர்ந்தது மனமே.

காதலனாய் ஆனவன்

கணவனாய் மாற,

கடிமணம் புரிந்தோம்

கலந்தோம் வாழ்விலே.

கற்பூரமாய் கரைய

கடந்தது நாட்கள்.

காண்பவர் ஏங்க

காதலில் மிதந்தோம்.

கட்டிய தாலியோ

காயும் முன்னே,

கட்டியவன் உரிமை

கருவாய் இருக்க,

காதலனாய் திகழ்ந்த

கணவனவன் உயிரை,

கவர்ந்து சென்றான்

காலனவன் வந்தே.

கதி கலங்கி போனேன்

கண்களோ இருட்ட.

கண்டவர், கண்கள் பட்டது போல,

கருகியது வாழ்க்கை

முளை விட்டப் போதே.

முழுமதியாளனை

மூப்பில்லா தலைவனை,

முன்தள்ளிய வயிற்றுடன்

முன்பொட்டை இழந்தேன்.

கொடும்பாவியாய் எனை நினைத்து

கொடுத்தானோ தண்டனையை.

கொஞ்சிக் கொஞ்சிப் பேசினோம்

துள்ளி விளையாடினோம்

கொடுப்பினை இல்லையே

கோபுரமாய் நிலைத்து வாழ.

அவணியில் புகழ் அடைந்திடவே

அவன் நினைவாய் பெற்றெடுப்பேன்.

என் உழைப்பும்

மகன் புகழும்

அவனுக்கு சமர்ப்பிப்பேன்

அவன் ஆத்மா சாந்தியடைய.