Translate

Showing posts with label ஊழ்வினை. Show all posts
Showing posts with label ஊழ்வினை. Show all posts

Saturday, October 7, 2017

முடிவெப்போது?



உன் ஆடை அவிழ்ந்து விட
உள்ளுடையும் நெகிழ்ந்து விட,
உற்று நோக்கும் பிறவிகள் ( ஜென்மங்கள் )
உன்னிலை அறியாரோ.

உன்னறிவு முடமாக,
உன்னினைவும் அதிலடங்க,
ஊறுமந்த பார்வைகளால்
உன்னிலே மாற்றமில்லை.

உணவுக்கும் கையேந்த
உணர்வற்ற நிலையுடனே
உலா வரும் பிறவியாய்
உன்னையவன் படைத்தானே.

ஊழ்வினை நிலை முடிந்து
உலக வாழ்வை முடித்து விட்டு
உடலான மெய் கீழ் கிடக்க, நீ
உறங்க போவதெப்போதோ?


--
ஆக்கம்
தவப்புதல்வன்.
A.M.பத்ரி நாராயணன்.