Translate

Showing posts with label புத்தாண்டு வாழ்த்து. Show all posts
Showing posts with label புத்தாண்டு வாழ்த்து. Show all posts

Friday, January 2, 2009

புத்தாண்டு வாழ்த்து 2009

மயக்கத்திலிருந்தோம்
சென்றாண்டிலே.
விழித்துக் கொள்வோம்
.இப்புத்தாண்டிலே.

பலவற்றை இழந்தோம்
சென்றாண்டிலே.
காத்துக் கொள்வோம்
இப்புத்தாண்டிலே.

மாறுப்பட்ட இதயங்களாய்
சென்றாண்டிலே 
ஒன்றுபட செய்வோம்
இப்புத்தாண்டிலே.

அடிதளம் அமைத்தோம்.
சென்றாண்டிலே.
கட்டி முடிப்போம்
இப்புத்தாண்டிலே.

விதைகளை ஊன்றினோம்
சென்றாண்டிலே.
செழிப்படைய செய்வோம்
இப்புத்தாண்டிலே.

இணைய நினைத்தோம்
சென்றாண்டிலே.
வலிமையைக் காட்டுவோம்
இப்புத்தாண்டிலே.

உறுதிகள் எடுத்தோம்
சென்றாண்டிலே.
வெற்றிகளை அடைவோம்
இப்புத்தாண்டிலே.

ஆங்கில புத்தாண்டு 2009

நல்லதாகவே தொடரும்
நன்மையாகவே இருக்கும்
நலமாக இருப்போம்
நம்பிக்கையில் சொன்னோம்
நல்வரவை, இப்புத்தாண்டிற்கே.

உறுதியாய் இருப்போம்
உற்சாகமாய் செய்வோம்
உண்மையாய் உழைப்போம்
உணர்ந்துக் கொண்டு.

வேறுப்பட்ட இதயங்களின்
வேதனைகளை களைய,
வேற்றுமைகளை அகற்றி
வேருடன் அழிப்போம்.

புகழ்ச்சிகள் இன்றி
புரிதல்கள் கொண்டு
புணரமைத்துக் கொள்வோம்
புத்தாண்டு முதல் நமையே.