Translate

Showing posts with label இரு(ற)க்கும் வரை. Show all posts
Showing posts with label இரு(ற)க்கும் வரை. Show all posts

Tuesday, October 24, 2017

இரு(ற)க்கும் வரை



இருந்ததை தொலைத்து விட்டு
இல்லாததைத் தேடி நான்
இன்று வரை பயணித்தும்
இருக்குமிடம் உணரவில்லை.

இயலுமென நானதை
இறுதி வரை தேடுவேனோ?
இதுவே போதுமென
இருந்து தான் விடுவேனோ?

இயக்கங்கள் ஒருபோதும்
இருந்ததில்லை நிலையாக.
இற்று போகும் நாளதில்
இறுதியாயது கிடைத்திடுமோ?

இகழ்ச்சிகள் தொடர்ந்தாலும்
இன்னல்கள் இருந்தாலும்
இயன்றவரை முயற்சிப்பேன்
இறையடி பணிந்து நான்.

-- 
இப்படிக்கு
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


அருமை கவியே...வாழிய வாழியவே.



இறையுணர்வு இருக்கும் வரை 
இருப்பது இல்லாது போலிருக்கும் 
உள் நின்ற இறைவனை 
உணர்ந்தால் அனைத்தும் 
தெளிவாகும்,,