Translate

Showing posts with label இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Show all posts

Wednesday, December 24, 2014

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

ஆண்டவரின் கிருபையால் 
ஒளி வீசும் இல்லங்கள்.
ஆஹாவென புகழ்பாடும் 
அற்புத கோலங்கள்.

வானிலிருந்து விண்மீன் 
வழிதனைக் காட்ட,
வந்திணைந்த மக்களோ 
வழிதனைப் பிடிக்க,



ஆண்டவர் பாதங்கள் 
அடியெடுத்து வைக்க, 
அனைவரின் இல்லத்திலும் 
அகலட்டும் துன்பமெல்லாம்.

வாழ்வு அங்கே 
உயர்வினைக் கொடுக்க,
ஸ்தோத்திரம் கூறினோம் 
பிதாமகன் அவதரித்த நாளில் 

ஆண்டவரே ஆசிர்வதிப்பீர் 
அனைவரும் 
அனுதினமும் 
அன்புடனும் நலமுடனும் வாழ,

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.


#வழிதனைக் காட்ட = ஆண்டவர் பிறந்துள்ள இடத்திற்கு 
#வழிதனைப் பிடிக்க = ஆண்டவரின் வழிமுறையை கடைப்பிடித்தல்.