Translate

Saturday, November 28, 2015

ஓட்டைகள் - ஹைக்கூ...


ஓட்டைகள்
ஆகாயத்தில் எத்தனையோ!,
அத்தனையும் மூடிவிட்டு
பொழிகிறது மேகங்கள்


இது புதுமொழியா?

கட்டாதவரை – 

கட்டித்தயிரை சாப்பிடறதுன
ஆம்பிளைக்கு இஷ்டம்.
ஆனா கெட்டுப்போன
பொம்பளைக்கு கஷ்டம்.





ஓரமாய்



திட்டங்கள் தவிடாக,
செயல்கள் திசைமாற,
உன் போக்கு(கே) முதலாக,
பிடிமானம் தவறவிட்டு
சறுக்கியதே சாக்கென
புலம்புவதில் அர்த்தமென்ன.

ஓடும் நீரினிலே
ஓடம் நிற்பதில்லை.
ஓரத்தில் நிறுத்தி,
ஒன்பது முடிச்சிட்டால்
ஓயாத நீரதுவும்
ஒதுங்கி செல்லும் தன் வழியில்

Friday, November 27, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் -Thiyagalakshmi Badri & Venkatesh Badri Babu

இறை தந்த செல்வமாய்
இணைந்திந்த வாழ்க்கை
இருவருக்கும் துணையாய்
ஈன்ற செல்வம் இரண்டாய்.

உல்லாச வாழ்க்கை
வாழ்விலே நிலைத்து,
உலகமதை சுற்றி
வானிலே பறக்க,

வளமும், நலமும்
வற்றாத  நதியாய்
வேங்கடரசன் அருளால்
கரைப்புரண்டோட,

எந்நாளும் நீங்கள்
ஆனந்தத்தில் திளைக்க,
மனம் கொண்டு வாழ்த்தினோம்
மட்டற்ற மகிழ்ச்சியுடன்.


இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

 10/06/2015 

உயிர் - மெய்



அற்புதத் தமிழரசி  
அருளும் சொற்களெல்லாம்,
ஆனந்தமாய் இருக்குதடா,
அமிர்தமாய் ருசிக்குதடா.

அடங்கா காளையாய்
அங்குமிங்கும் துள்ளியபடி,
அழகான உருவிலே
அகிலம் முழுதும் சுற்றுதடா.

ஆரத்தழுவிக் கொண்டாட,
அரிய வார்த்தைகளில் உறவாட,
ஆயிரமாயிர வண்ணங்களில்
அழகுக்காட்டி ஒளிருதடா.

ஆரவாரம் ஏதுமின்றி
அறியும் நிலை ஏற்படுத்தி,  
அன்பை அள்ளிக்கொடுத்து
ஆளச்செய்து மயக்குதடா.

அகண்ட சுரங்களிலது மிளிர,
ஆழ உழுதுப் பார்க்கையிலே
அபூர்வ காட்சிகள் பல கொடுத்து,  
ஆலாபனை செய்ய ஊக்குதடா

Thursday, November 26, 2015

என்னருமை காதலனே


சொல்லிவிட்டு போனதெங்கே?
தேடாத இடமெல்லாம்
தேடிவிட்டு நான் வந்ந்தால்,
விழி மூடி திறப்பதற்குள்
என் முன்னே நிற்பதின் மாயமென்ன?

கோடிக்கோடி வார்த்தைகளை
கொட்டி வளர்த்த காதலில்
கொட்டுதடா கொடுந்தேளாய்
கொடிகளில் புரட்டியெடுக்க.
களவாடி செல்லுமோ
காசினால் தனைமறந்து போகுமோ?

ஏற்றி வைத்த காதல்தீபம்
அணையும் முன்னே,
விரைந்து வந்து
ஏற்றி செல்வாய் குதிரை மேலே.

விஞ்ஞானம் மெய்ஞானம்
அலசிப்பார்த்தேன்.
அஞ்ஞானமதை பிரித்துப்போட்டேன்
அஞ்சா ஞானமென பகுத்துக்கொண்டேன்.

உறுதியுடன் நாமிருந்தால்
ஓடாத ஊருக்கு வழியெதற்கு.
செல்லுகிறது நாட்கள் விரைவாக.
விருப்பம் நிறைவேறும் மகிழ்வாக.

பணியிட மாறுதலுக்கு – வாழ்த்துக்கள்.




ஏதேதோ நினைவுகள்
எங்கெங்கோ சிதற,
ஏற்றம் கொண்ட உம் வாழ்வை
மறந்தோம் யாம் வாழ்த்த.

கொண்ட தொழிலில்
திறமையால் உயர்ந்து,
சிறப்புடன் வாழ
மகிழ்வுடன் வாழ்த்தினோம்.

நல்லாசிகள் சுபகர்.

வாழ்க! வளர்க!!

1/6/15

ஊற்றுக்கண்




ஓயாமல் உலகை(யே)
சுற்றிவரும் காற்று தான்,
சுமந்து வந்தது தூதாய்
ஓசையின்றி உன் வாசத்தை.

கண்விழித்த நேரத்தில்
காற்று வரும் திசைநோக்கி,
கயல்விழியாள் மணம் நுகர
காத்திருந்தேன் முகம் காட்டி.

பாவையுனை நான் காண
பரவசத்தில் மனம் துடிக்க,
பசித்திருந்த ஏழையாய்
பருகிவிட துடித்திருந்தேன்.

மறைப்புகள் பெரிதாக – திரு
மணமென்னும் தடுப்பாக,
இணைதலை எதிர்நோக்கி
தகர்த்திட நான் பார்க்க,

குளிரிலும் வெம்மை ஊடுருவ,
குற்றாலமாய் உடலை நீராட்ட,
மறைப்பொருளாய் நினைவில் நீ சிரிக்க,

சுரந்தது சுரங்கள் ஊற்றாக.

புது கடைக்கு வாழ்த்து.

  
ரகுநாத் & சுதா ரகுநாத், புது கடைக்கு வாழ்த்து.

புதிய பாதைப் போட்டு,
பயணம் தொடர்ந்து விட்டீர்.
பாதை விரிவடைந்து
பயணம் சிறந்திடவும்,
பகலவன் ஒளி போல
பரவலாய் விரிந்திடவும்,
பரந்தாமன் அடியொற்றி
பரவசத்தில் வாழ்த்தினோம்.


வாழ்க! வாழ்க!! வளர்கவே!!!

30/05/15

Monday, November 23, 2015

‘’மானாட, மயிலாட’’ -கலைஞர் டிவி - வாழ்த்து 2009




கண்கள்(ளோ) பதிந்திருக்க,
காதுகள்(ளும்) திட்டியிருக்க,
வாயசைப்பை நிறுத்தி வைத்து
குடும்பம்(மே) எதிர்ப்பார்த்திருக்கும்
அந்நாளுக்காய் காத்திருந்த இந்நிகழ்ச்சியில்.

மானும் ஆடுது, மயிலும் ஆடுது
கலைஞர் டிவியிலே ‘’மானாட, மயிலாட’’
நடனமேதை கலாவுடன் இருவர் சேர்ந்து (இருவரினைந்து)
நடுவராய் முவ்வரிருக்க,
நாட்டியமுடன் நாடகமும் நடந்தது.


விதவிதமான ஆட்டங்கள், வித்தியாசப்போட்டியால்
விறுவிறுப்பாய் இருக்குது, விரும்பி பார்க்க செய்யுது.
வித்தையும் காட்டுது, விதவிதமாய் இருக்குது.
குலுங்கி குலுங்கி சிரிக்கவும் நிகழ்ச்சியிலே இருக்குது.
அவரவர் திறமைக்கண்டு ஆனந்திக்க வைக்குது.
விழி விரித்து பார்த்தபடி வைத்திருக்க செய்யுது.

ஒன்று, இரண்டு, மூன்றுயென முடிந்துதான் போனது.
பகுதி நாலு நேற்றுதான் துவங்கியதுபோல் இருக்குது.
விரைவில் இதுவும் முடியத்தான் போகுது.
போட்டியிலே(ல்) பொருளிருக்கும்
திறமை அதிலடங்கும்.

மயிலாக ஆடி, மானாக குதித்(தாட)து நீராட,
மகிழ்ச்சி பொங்க கருத்தை கவரும் மோகன ஆட்டம். 
கருத்துகளை பங்கு வைத்து, காட்சிகளை பிரித்து போட்டு,
எடுத்து சொல்லும் விதத்திலே,
போட்டியின் சாதனையில், எங்கள் 
தீர்ப்புகளும் சளைத்ததில்லை என்றெனக் காட்டி,
அன்றன்று நிகழ்ச்சிகளை நிறைவு செய்ய,

எங்களின் மனங்களும் நிகழ்வுகளில் மூழ்குது.
உங்கள் திறமையுடன், எங்கள் மனமும் 
இயந்து இசைந்து ஆடவே,
இன்றுபோல் என்றுமே 
இனிதாய் நிகழ்ச்சிகள் தொடரவே,
இயம்புகிறேன் வாழ்த்துகளை, 
வாழ்க! வாழ்க!! வளர்கவே!!!


#நடிகர் விசு அவர்கள் ஜெயா டிவியில் நடத்தி வந்த ‘’மக்கள் அரங்கம்’’ நிகழ்ச்சிக்கும், இதேபோல் ஒரு வாழ்த்து அனுப்பியிருந்தேன். நேரடியாக அவரிடமிருந்து பதில் இல்லாவிடினும், அவர்கள் அலுவலகத்திலிருந்து நன்றி தெரிவித்து கடிதம் வந்தது.


ஆனால், ஒரு நேயர், ரசிகர் என்றமுறையில் அனுப்பிய இந்த வாழ்த்துக்கு, ஒரு சொல்லில் ‘’நன்றி அல்லது மகிழ்ச்சி’’என்று ஒரு சொல்லாவது பதிலாக கிடைத்திருந்தால்....

#2010 பொங்கல் வாழ்த்தாக இது அனுப்பப்பட்டது.

#26/12/2009 இந்த வருடத்தின் கடைசி கவிதையென நினைக்கிறேன்

ஊக்கமதை கைவிடேல் - சிறுங்கவிதைகள்

காலங்கள் கரைந்துவிடும்
வேகமாய் ஓடிவிடும்.
நாட்டிலே
தமிழ்நாட்டிலே
எம் நிலையொத்த,

உம் நினைவுகளை
அசை போடும் எந்நாளும்
சொல்ல விளைவது ஒன்றே.

தமிழ் மூதாட்டியின் வாக்கான


"ஊக்கமதை கைவிடேல்"

ரோசா - சிறுங்கவிதைகள்

ரோசா

கண்ணுக்கு அழகாக,
நாசிக்கு மனமாக,
அன்புக்கு பரிசாக
கொண்டு வந்தேன்
நானுனக்கு,
மலரிலே மென்மையான
மயக்குகின்ற ரோசாவை.

ரோசா பூ

காதலுக்கொரு அடையாளம்.
பாசத்திற்கொரு பரிமாணம்.
அழகுக்கொரு அவதாரம்.

மென்மைக்கொரு ஆதாரம்.

Sunday, November 22, 2015

எதைக் கண்டாய்?



அவனை விட புதியவனிடம்
புதுமையாய் எதைக் கண்டாய்.
கைக்குழந்தை அவனிடம் தவள்ந்திருக்க,
கைக்கோர்க்க சென்றுவிட்டாய் புதிதாக.
குற்றமவனதென உன் சுற்றம் கைநீட்ட,
அவன் சுற்றம் பார்வையாலே கிளறியதே.
அக்கம் பக்க கேலிப்பேச்சு, நமட்டு சிரிப்பால்
விஷப்பூச்சிகளால் கடிப்பட்ட நிலையாய்
அவன் துடித்ததை, அவனியின்றி யாரிறிவார்.
நண்பர்குழாம் ஆதரவாய் சூழ்ந்திருந்து
துன்பங்களைப் பகிர்ந்துக் கொள்ள,
தனியனாய் தவித்தாலும்
தாயுமானவனாய் உறுதிக்கொன்டான்
தவமாய்   வாழ்ந்திருந்து,

தலைவனாய், புதல்வனை உயர்த்திவிட.

முற்றுபெறா குறிக்கோள்



எழுதுகின்ற கோளை
எடுத்துத்தான் வைத்திருப்பேன்.
கிடைக்கின்ற தாட்களில்
கிறுக்கித்தான் வைத்திருப்பேன்.
வாய்கின்ற நேரங்களில்
வாசித்துக் கொண்டிருப்பேன்.

மாற்றாரின் பதிப்புகளை
காணுகின்ற போதெல்லாம்,
மாற்றங்களைக் கொண்டுவர
கனவுகளை காணுகின்றேன்.
பதிக்கின்ற நேரங்களில்
பதறித்தான் போகின்றேன்.

மணலில் ஊற்றிய நீர் போல
காணுகின்ற கனவுகளும்
காற்றில் பறக்கும் சரகுகளாய்

மறைந்துவிடும் நிழல் போல.

பல தினுசு



பாட்டிலே பலவாறாய்
பட்டியலாய் பதித்தாலும்
பாங்குடன் சொன்னாலும் 
பற்றித்தான் கொள்வாரோ ?
பற்றற்று விடுவாரோ?
பரதேசியென நினைத்து.

பயமேதும் இல்லையடா
பயங்கரமொன்றும் இல்லையடா
பறித்துத்தான் போடாமல்
பகிர்ந்துண்ணும் போதினிலே.
பார் உன்னை போற்றும்
பதமான வாழ்வமையும்.

பஞ்சு போல் நஞ்சினை
பந்தமும் பாந்தமாய்
பற்றித்தான் கொள்ளுமோ.
பற்றற்று வாழ நினைக்கையிலே
பட்டமாய் அலையுமோ

பலமில்லா இம்மனது.