கண்கள்(ளோ)
பதிந்திருக்க,
காதுகள்(ளும்)
திட்டியிருக்க,
வாயசைப்பை நிறுத்தி
வைத்து
குடும்பம்(மே)
எதிர்ப்பார்த்திருக்கும்
அந்நாளுக்காய்
காத்திருந்த இந்நிகழ்ச்சியில்.
மானும் ஆடுது, மயிலும்
ஆடுது
கலைஞர் டிவியிலே
‘’மானாட, மயிலாட’’
நடனமேதை கலாவுடன்
இருவர் சேர்ந்து (இருவரினைந்து)
நடுவராய்
முவ்வரிருக்க,
நாட்டியமுடன் நாடகமும்
நடந்தது.
விதவிதமான ஆட்டங்கள்,
வித்தியாசப்போட்டியால்
விறுவிறுப்பாய்
இருக்குது, விரும்பி பார்க்க செய்யுது.
வித்தையும் காட்டுது, விதவிதமாய் இருக்குது.
குலுங்கி குலுங்கி சிரிக்கவும் நிகழ்ச்சியிலே இருக்குது.
அவரவர் திறமைக்கண்டு
ஆனந்திக்க வைக்குது.
விழி விரித்து
பார்த்தபடி வைத்திருக்க செய்யுது.
ஒன்று, இரண்டு,
மூன்றுயென முடிந்துதான் போனது.
பகுதி நாலு நேற்றுதான்
துவங்கியதுபோல் இருக்குது.
விரைவில் இதுவும்
முடியத்தான் போகுது.
போட்டியிலே(ல்)
பொருளிருக்கும்
திறமை அதிலடங்கும்.
மயிலாக ஆடி, மானாக
குதித்(தாட)து நீராட,
மகிழ்ச்சி பொங்க
கருத்தை கவரும் மோகன ஆட்டம்.
கருத்துகளை பங்கு
வைத்து, காட்சிகளை பிரித்து போட்டு,
எடுத்து சொல்லும்
விதத்திலே,
போட்டியின் சாதனையில்,
எங்கள்
தீர்ப்புகளும் சளைத்ததில்லை என்றெனக் காட்டி,
அன்றன்று நிகழ்ச்சிகளை நிறைவு செய்ய,
எங்களின் மனங்களும்
நிகழ்வுகளில் மூழ்குது.
உங்கள் திறமையுடன்,
எங்கள் மனமும்
இயந்து இசைந்து ஆடவே,
இன்றுபோல் என்றுமே
இனிதாய் நிகழ்ச்சிகள் தொடரவே,
இயம்புகிறேன்
வாழ்த்துகளை,
வாழ்க! வாழ்க!! வளர்கவே!!!
#நடிகர் விசு அவர்கள்
ஜெயா டிவியில் நடத்தி வந்த ‘’மக்கள் அரங்கம்’’ நிகழ்ச்சிக்கும், இதேபோல் ஒரு
வாழ்த்து அனுப்பியிருந்தேன். நேரடியாக அவரிடமிருந்து பதில் இல்லாவிடினும், அவர்கள்
அலுவலகத்திலிருந்து நன்றி தெரிவித்து கடிதம் வந்தது.
ஆனால், ஒரு நேயர்,
ரசிகர் என்றமுறையில் அனுப்பிய இந்த வாழ்த்துக்கு, ஒரு சொல்லில் ‘’நன்றி அல்லது
மகிழ்ச்சி’’என்று ஒரு சொல்லாவது பதிலாக கிடைத்திருந்தால்....
#2010 பொங்கல் வாழ்த்தாக இது அனுப்பப்பட்டது.
#26/12/2009 இந்த வருடத்தின் கடைசி கவிதையென நினைக்கிறேன்
No comments:
Post a Comment