Translate

Showing posts with label கிடப்பவர்கள். Show all posts
Showing posts with label கிடப்பவர்கள். Show all posts

Thursday, October 5, 2017

கிடப்பவர்கள்



கையிலே திருவோடு
வயிறோ பள்ளமோடு
முதுகில் சுமையோடு
ஏனிந்த நிலைபாடு?

களத்திலெங்கும் வீடின்றி
கா(ற்றோ)ரோடும் வீதியிலே
கரையெனும் பாதையிலே
கடத்திடுவார் வாழ்வுதனை.
 
எட்டதோ நிலையுமக்கு
கிட்டதோ வாழ்வுமக்கு
உதவாதோ அரசுமக்கு
குடிகளாய் நீரிருக்க.



--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.