Translate

Showing posts with label விளைச்சல். Show all posts
Showing posts with label விளைச்சல். Show all posts

Wednesday, April 18, 2018

விளைச்சல்



தூர்ப்பண பணியில் அவனிருக்க,
தூர்ந்து போய் அது கிடக்க,
துரிதமான அவன் செயலால்
துளித்துளிகளாய் அங்கமெங்கும்
துளிர்த்ததடா வேர்வைத்துளிகள், 14

துரத்திக் கொண்டு சென்றவன்
துரிதமாக செயல் பட்டான்
துளையை பெயர்த்து எலி பிடிக்க.
துடிப்பான அச்செயலால்
துளிர்த்ததடா மேனியெங்கும்
துளிகளாய் வேர்வைத்துளிகள். 30

கடுமையான பணியாலே
கடைந்தெடுத்த மேனியிலே
கட்டுக்கடங்கா வேர்வைத்துளிகள்
காட்சியளித்தது முத்துகளாய். 38

கோபமோ தலைக்கேற
கொழுவிருந்த விழிகளில் சிவப்பேற,
உணர்வுகளின் வேகத்தால்
உரு பெற்றது முத்துகளாய்
உடலெங்கும் வேர்வைத்துளிகள். 50

வெம்மையான அவன் பணியில்
வேர்வைத்துளிகள் ஆறாக,
வெற்றுடம்பின் மேலாக
வெளியேறியது துளிகளாக. 59

#பூந்தளிராள் உரிமையாக
புவி மடியில் அகழ்ந்து பார்க்க,
பூத்ததடா வேர்வைத்துளிகள்
பூரிப்புடன் பூக்களாக. 69


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏



#பூந்தளிராள் = பூப்போன்ற மென்மையான இளந்தளிர் போன்றவள்