Translate

Showing posts with label கழுத்தை பிடிக்கும் உத்தரவு. Show all posts
Showing posts with label கழுத்தை பிடிக்கும் உத்தரவு. Show all posts

Monday, February 1, 2016

கழுத்தை பிடிக்கும் உத்தரவு.


199 கி.மீ., தூரத்துக்குள் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு, 3 மணி நேரத்துக்குள் வாங்கும் டிக்கெட் (பயணச்சீட்டு ) மட்டும் தான் செல்லுபடியாகும். ரிட்டன் டிக்கெட் ( திரும்பி வர, இணைத்து வாங்கும் பயணச்சீட்டு ) வசதி நீக்கப்படுகிறது. செல்ல வேண்டிய ரயில் தாமதமானால், அந்த மார்கமாக செல்லும் முதல் ரயிலில் பயணிக்கலாம். மேலும் மூன்று நாட்களுக்கு முன் பதிவு செய்யும் வசதி தொடரும்.
200 கி.மீ., தூரம் மற்றும் அதற்கு மேல் பயணிப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. பழைய நடைமுறையே பின்பற்றப்படும்.
இந்தபுதிய உத்தரவு, மார்ச் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
-செய்தி.      

1)      முன் வரும் ரயிலில் கூட்டம் அதிகமிருந்தாலும், தாமதமாக வரும் நாம் போக வேண்டிய ரயிலுக்கு காத்திருந்து பயணிக்க முடியாதா?
2)      நாம் செல்ல வேண்டிய மார்க்கத்தில் முதலில் செல்லும் ரயில் ஏறுமிடத்திலோ, இறங்க வேண்டிய நிலையத்திலோ நிற்காவிடின் என்ன செய்ய? 

3)      லொள்ளு பண்ற எல்லோரையும், ரூம் போட்டு யோசிக்கிறிங்களானு கேட்போம். ஆனா இவங்க ரூமை விட்டு வெளியே வராம திட்டம் தீட்டி, சட்டம் போடுறாங்கப்பா?