Translate

Showing posts with label டெங்கோ டெங்கு. Show all posts
Showing posts with label டெங்கோ டெங்கு. Show all posts

Saturday, October 28, 2017

டெங்கோ டெங்கு

கொசுக்களோ பெரிதாக,
ஆயினர் 
மனிதர்களோ சிறிதாக.
வரிசையாய் கொசுக்களது
வந்து நம்மை ருசி பார்க்க,
வெந்து நாம் சாகின்றோம்
புதுபுது பெயர் சூடி.
ஓயாத அலைகளாய்
பறந்து வந்து நம்மை தாக்க,
பரிதவித்து முழிக்கின்றோம்
சுகாதாரம் பேணாமல்.
பழிதனைச் சாட்டாமல் - முதலில்
சுத்தமிடுவீர் உம்மிடத்தை.
சுத்தமது செய்த பின்னே
தட்டி நீங்கள் கேளுங்கள்
நம் அரசின்
மெத்தனப் போக்குகளை.
சாக்கடை வழிகளிலும்,
சாலையோற இடங்களிலும்
உம் குப்பைகளை வீசியெறிந்து
சகதிகளாய் ஆக்காதீர்.
ஆட்சி என்பது வணிகமாக
ஆள்வோர் அதில் வணிகராக
ஆவலங்கள் தொடர்கிறது
அற்பமாய் நமை நினைத்து.
குறைகளோ ஏதுமிருப்பின்
புரட்டியெடுங்கள் அரசு வணிகரை.
முதல் பொறுப்பு நம்மிடத்தில்
நயந்து சொல்கிறேன் உம்மிடத்தில்


-- 
உங்களுடன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.