Translate

Showing posts with label நீங்களிருக்க கவலையில்லை. Show all posts
Showing posts with label நீங்களிருக்க கவலையில்லை. Show all posts

Friday, August 2, 2019

நீங்களிருக்க கவலையில்லை




நீங்களிருக்க கவலையில்லை
##################

ஏட்டினிலே எழுதி வைத்தேன்
போராட்டங்கள் ஏணி என்று.
எனக் கென வந்த போது
திகைத்துத் தவிக்கிறேன்.

தோள் கொடுத்த உயிர்களோடு
தட்டிக் கொடுத்த கைகளும் உண்டு.
உரம் ஊட்டிய நட்புகளோடு
ஊக்கம் அளித்த உள்ளங்களும் உண்டு.

சிந்தனையில் மூழ்கிக் கிடக்க,
துவண்டதாய் நினைத்தீரோ???....

காலாடா நடனங்கள்
வாயாடும் நிகராக.
கையிடா கோலங்கள்
விழி யிடுமே திறமையாக.

நீண்ட நமது பயணத்தில்
கைக் கோர்ப்பேன் உம்முடனே.

✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🌹🙏