Translate

Showing posts with label இப்படிக்கு.. நான். Show all posts
Showing posts with label இப்படிக்கு.. நான். Show all posts

Thursday, July 19, 2018

🌸"இப்படிக்கு.. நான்!" 🌸






தலைப்பு:
***********
🌸"இப்படிக்கு.. நான்!" 🌸
=++++++++++++++++++++++

உன்னுடனான என் உறவுக்கு
என்ன பெயர் சூட்ட?
தாரமென நினைத்து
கொண்டாடத்தான் முடியுமோ?
அச்சாரமிட்ட நாளுக்கு,
ஆரத்தி எடுக்க முடியுமோ? 15

நீ வாடிக்கையாளராக வந்து செல்லும்
தருணங்களில்,
எனக்குள் ஊட்டும் கிளர்ச்சிகளை,
உலகுக்கு புரியத்தான் செய்யுமோ?
புரிந்துக் கொள்ளத்தான் நினைக்குமோ? 29

உனக்குள் உண்டாகும் மாற்றங்களை
நான்றிவேன்?
பிறவி ஒன்றிருந்தால்
உனக்கு தாயாக வேண்டும்.
இல்லையேல் நீயெனக்கு
கணவனாக வேண்டும். 42

தாயானால்…
சிறக்க உனை வளர்த்திடுவேன்.
மனைவியானால்…
சிந்தை கலங்காது காத்திடுவேன்.
வாரிசாய் நானானால்..
வெற்றிகளை வரிந்திடுவேன்
பெற்ற உனக்கு பெருமை சேர்த்திடுவேன். 56

பெற்றோர் பெருமைக்கு
தீங்கிழைத்து பாவியானேன்.
எப்பிறவியில் தீருமோ
அறியாமல் தவிக்கலானேன்.
இப்பிறவியுடன் எப்பிறவியானாலும்
என்றும் உணர்வுகளில் உன்னோடுதான்…. 69

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.