Translate

Showing posts with label கவிதையெனும் பூ. Show all posts
Showing posts with label கவிதையெனும் பூ. Show all posts

Thursday, December 14, 2017

கவிதையெனும் பூ

இம்மரமும்
கவிதையெனும் பூ பூக்கும்
என நினைத்ததில்லை.
காலத்தின் ஓட்டத்திலே
மரமாய் வளர்ந்திருந்தாலும்
உணர்ந்த்தில்லை உறுத்ததலாய்
பூ பூத்து காய் காய்க்குமென்று.


பெருங்காற்றின் வேகத்தில்
இம்மரமும் கலகலத்தது
ஒரு நேரத்தில் கண்ணீராய்
பூப்பூத்து சலசலத்தது.
காய்த்த காய்களை
பழமாக்கி உமக்கே சமர்பிக்கின்றேன்.
பழுத்த பழமென்பதால்
உம் சொல்லடிகளுக்கு காத்திருக்கின்றேன்.


===============================================


இந்த சிப்பியும்
கவிதையெனும் முத்தை
கருதரிக்குமென நினைத்ததில்லை.


காலத்தின் ஓட்டத்திலே
அடித்து செல்லப்படும் நேரத்திலே
முதிர்ந்த வயதினிலே
சிறு முத்து கருக்கொண்டதை
உணர்ந்தது உறுத்துதலாய்.


முத்தொன்றை சுமப்பதிலே
சுகமிருந்தாலும்,
கவலைப் படுகிறேன்
கரு கலைந்து விடுமோவென.


பிறக்கின்ற முத்துகளும்
உதிர்க்கின்ற வார்த்தைகளில் மிளிர வேண்டும்.
உருவெடுத்த இம்முத்துகளை
சிறப்பாக வடிவமைய,
சிந்தனையில் சீர்ப்பட்ட
சிலம்பு செல்வர்கள்
உருவேற்றி அழகாக்க வேண்டும்.


அன்புடன்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏


#மரம் என்பதும், சிப்பி என்பதும் நான் தான்


#இந்த இரு படைப்புகளும் ஒரே கருத்தை ஒட்டி இருக்கும்.
ஆரம்ப ( 2004 -2005) கால படைப்புகளில் ஊன்றியிருந்தபோது எனக்குள் ஏற்பட்ட கவலை என்பதா? ஏக்கமென்பதா? ஏதோ ஒன்று. அதனால் உருவான பதிவேயிது