அமெரிக்கா சான்பிரன்சிஸ்கோ நகரை சேர்ந்த மைல்ஸ் ஸ்காட் என்னும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனுக்கு, காமிக் ஹீரோவான 'பாட்மான்" 'BATMAN' உடன் சேர்ந்து 'கோத்தம்' நகரை காக்கும் இலட்சிய கனவு.
அக்கனவையும் நிறைவேற்ற முன்வந்தது ஒரு அமெரிக்கத் தொண்டு நிறுவனம். அதற்காக, சேவகர்கள் பலர் தேவைப்பட்டதால், தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டது. எந்த ஒரு பண எதிர்ப்பார்ப்புமின்றி தாமாக முன்வந்து 10,000க்கும் மேற்பட்டோர், கலந்து கொள்ள முன் வந்தனர்.
'கோத்தம்'காக்குமிலட்சிய கனவை, நவம்பர் 15ம் தேதி சான்பிரன்சிஸ்கோவை கற்பனை நகராக மாற்றி, பேட் மான்' உடையணிந்த ஒரு நடிகருடன், 'மைல்ஸ்' சும் "பேட் மொபைல் " என்ற வாகனத்தில் சென்று சாகசங்களை நிகழ்த்தினான்.
"சபாஷ், மைல்ஸ். அப்படிதான் கோத்தம் நகரைக் காக்க வேண்டும்" என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, 'வைட் ஹவுஸ் இன்' என்ற டிவிட்டர் மூலம் பாராட்டுகளைப் பகிர்ந்துக் கொண்டார்.
நாமும் பிரார்த்திப்போம் 'மைல்ஸ் ஸ்காட், விரைவில் புற்றுநோயிலிருந்து விடுப்பட்டு, சாதனைக்குரியவனாய் திகழ.
